261.அவசியமுன்
261திருமுருகன்பூண்டி
ஆயிரம் திருப்புகழிலும் இல்லாத ஒரு வேண்டுகோளை விடுக்கிறார் இந்த ஸ்தலத் திருப்புகழில் “ஆண்டுக்கு ஒரு நாளாவது தவ நெறியுடனும், செப ஒழுக்கத்துடனும் உள்ளம் கனிந்து உன் திருவடியைத் தொழுவதற்கு அருள் புரிவாயாக” என்று
தனதனனந் தாந்தத் தனதான
அவசியமுன் வேண்டிப் பலகாலும்
அறிவினுணர்ந்த தாண்டுக் கொருநாளில்
தபசெபமுந் தீண்டிக் கனிவாகிச்
சரணமதும் பூண்டற் கருள்வாயே
சவதமொடுந் தாண்டித் தகரூர்வாய்
சடுசமயங் காண்டற் கரியோனே
சிவகுமரன் பீண்டிற் பெயரோனே
திருமுருகன் பூண்டிப் பெருமாளே
பதம் பிரித்து உரை
சுருக்க உரை
விளக்கக் குறிப்புகள்

உன்னைப் பணிவது அவசியம் என்று உணர்ந்து பல முறையும் துதித்து,என் அறிவில் உன்னை உணர்ந்து, ஆண்டுக்கு ஒரு நாளாவது தவ நெறியுடனும், செப ஒழுக்கத்துடனும் உள்ளம் கனிந்து உன்
திருவடியைத் தரிப்பதற்கு அருள் புரிவாயாக. இதை அடக்குவேன் என்ற உறுதியுடன் ஆட்டின்மீது ஏறி அதைச் செலுத்துபவனே.
ஆறு சமயத்தாலும் காணுதற்கு அரியோனே, சிவ குமாரனே. அன்பு
கொண்டு நெருங்குபவரை விட்டுப் பிரியாதவனே, திருமுருகன் பூண்டி என்னும் தலத்தில் உறைபவனே, உன் திருவடியைப் பூண்டற்கு அருள் செய்வாயாக.