Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    261.அவசியமுன்
    261திருமுருகன்பூண்டி
    ஆயிரம் திருப்புகழிலும் இல்லாத ஒரு வேண்டுகோளை விடுக்கிறார் இந்த ஸ்தலத் திருப்புகழில் “ஆண்டுக்கு ஒரு நாளாவது தவ நெறியுடனும், செப ஒழுக்கத்துடனும் உள்ளம் கனிந்து உன் திருவடியைத் தொழுவதற்கு அருள் புரிவாயாக” என்று
    தனதனனந் தாந்தத் தனதான
    அவசியமுன் வேண்டிப் பலகாலும்
    அறிவினுணர்ந்த தாண்டுக் கொருநாளில்
    தபசெபமுந் தீண்டிக் கனிவாகிச்
    சரணமதும் பூண்டற் கருள்வாயே
    சவதமொடுந் தாண்டித் தகரூர்வாய்
    சடுசமயங் காண்டற் கரியோனே
    சிவகுமரன் பீண்டிற் பெயரோனே
    திருமுருகன் பூண்டிப் பெருமாளே


    பதம் பிரித்து உரை



    அவசியம் உன் பல காலும் வேண்டி
    அறிவு உணர்ந்து ஆண்டுக்கு ஒரு நாளில்


    அவசியம் = (உன்னைப் பணிவது) இன்றியமையாதது என உணர்ந்து பல காலும் உன் வேண்டி = உன்னைப் பல முறையும் துதித்து அறிவின் உணர்ந்து = என்னுடைய அறிவினால் உன்னை உணர்ந்து ஆண்டுக்கு ஒரு நாளில் = வருடத்துக்கு ஒரு நாளாவது


    தவ செபமும் தீண்டி கனிவாகி
    சரணம் அது பூண்டற்கு அருள்வாயே


    தவ செபமும் தீண்டி = தவ ஒழிக்கத்தையும் செப ஒழுக்கத்தையும் மேற்கொண்டு. கனிவாகி= உள்ளம கனிந்து. சரணம் அது பூண்டற்கு = உனது திருவடியை (மனதில்) தரிப்பதற்கு. அருள்வாயே = அருள் செய்வாயாக.


    சவதம் ஒடும் தாண்டி தகர் ஊர்வாய்
    சடு சமயம் காண்டற்கு அரியோனே


    சவதம் மொடு = இதை அடக்குவேன் என்னும் மன உறுதியுடன் (சபதம் கொண்டு) தாண்டி = குதித்து. தகர் ஊர்வாய் = ஆட்டின் மேல் ஏறிச் செலுத்துவாய் சடு சமயம் = ஆறு சமயத்தாராலும் காண்டற்கு அரியோனே = காணுதற்கு அரிதானவனே.


    சிவ குமர அன்பு ஈண்டில் பெயரோனே
    திரு முருகன் பூண்டி பெருமாளே.




    சிவ குமர = சிவ பாலனே அன்பு ஈண்டில் = அன்பு கொண்டு நெருங்கில் பெயரோனே = (அங்ஙனம் நெருங்கியவர்களை) விட்டுப் பிரியாதவனே திருமுருகன் பூண்டிப் பெருமாளே = திருமுருகன் பூண்டி என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.



    சுருக்க உரை



    விளக்கக் குறிப்புகள்



    1. தகர் ஊர்வாய்....
    தகரேறங் காராச மேவிய
    குகவீரம் பாகும ராமிகு
    தகைசாலன் பாரடி யார்மகிழ் பெருவாழ்வே --- திருப்புகழ்,கனவாலங்
    2. சடு சமயம் காண்டற்கு அரியோனே....
    (சகர சங்க சாகர மெனமு ழங்கு வாதிகள்
    சமய பஞ்ச பாதக ரறியாத ---- திருப்புகழ், நிகரில்பஞ்ச. 3. அன்பு ஈண்டில் பெயரோனே.....
    உண்மைப் பொலிந்த மிடற்றினார் உள்ளம் உருகின் உடன் ஆவார்.. –
    --சம்பந்தர் தேவாரம்.


    4. தகர் ஊர்வாய்


    முருகனுக்கு பொதுவான வாகனமாக மயில் இருந்தாலும், இந்திரன் கொடுத்த யானை மற்றும் அன்னம், ஆடு, குதிரை ஆகியவையும் வாகனங்களாக இருந்து வருகின்றது. திருப்பரங்குன்றத்தில் இந்த நான்கு வாகனங்களையும் காணலாம். திருவிழாக்காலங்களில் சுப்பிரமணியர் இந்த வாகனங்களில் எழுந்தருளுகிறார். அங்கு அமர்ந்த கோலத்தில் உள்ள முருகனின் கிழே யானையும் ஆடும் வாகனமாக உல்ளது. சில கோயில்களில் கோழி வாகனமும் உண்டு. சங்க இலக்கியமான பரிபாடலில் முருகனின் வாகனமாக ‘மேடம்’ எனும் ஆடு குறிப்பிடப்பட்டுள்ளது.


    “முருகனுக்கு மயில், யானை, ஆடு என்று மூன்று வாகனங்கள் இருப்பதற்கு உட்பொருள்கள் உண்டு. மனம், புத்தி, சித்தம் என்று உருவகப் படுத்தியதாக வைத்துக் கொள்ளலாம். மனம் தூண்ட, புத்தி அதனை ஏற்க, சித்தம் செயல்படுகிறது என்பர் அறிஞர். ஆமாம், ஆடு வாகனமானது எப்படி?


    விஸ்வரூப முருகனிடம் தேவர்கள், சூரபத்மனால் சிறைபிடிக்கப்பட்ட தேவர்களை விடுவிக்க வேண்டிக் கொண்டார்கள். அவன் மகிழ்வுடன், தேவர்களே கலங்க வேண்டாம், எனது அவதாரமே சூரவதத்தின் பொருட்டு உருவானது தான், தங்கள் கோரிக்கையை விரைவில் நிறைவேற்றுவேன், என்றான். இந்நிலையில், தனக்கு ரிஷபம் வாகனமாக இருப்பது போல், தன் மகனுக்கு ஒரு வாகனம் வேண்டும் என விருப்பப்பட்டார் சிவபெருமான். தேவகான பாவலர் நாரதர் மூலமாக இதற்கான ஏற்பாட்டைச் செய்தார். நாரதா ! நீ யாகம் ஒன்றிற்கு ஏற்பாடு செய், என்றார். என்ன காரணத்துக்காக யாகம் நடத்தச் சொல்கிறார் என்பது புரியாவிட்டாலும், ஏதோ ஒன்று செய்ய தனக்கு நேரம் வந்துவிட்டதாக கருதிய நாரதர், சிவனின் கட்டளையை பதிலேதும் பேசாமல் ஏற்றுக் கொண்டார். யாகத்திற்காக அதவாயு என்ற பசுவை யாகத்திற்கு கொண்டு வந்தனர் சிலர். யாகம் துவங்கியதும், அந்த பசு பயங்கரமாக சத்தமிட்டது. அனைவரும் ஆச்சரியமும், பயமும் கொள்ளும் வகையில் அந்த பசுவின் வயிற்றில் இருந்து ஒரு பயங்கர ஆடு தோன்றியது. அது யாகத்திற்கு வந்தவர்களை நாலாதிக்கிலும் விரட்டியடித்தது. நேரம் செல்லச் செல்ல அதன் உருவம் வளர்ந்து கொண்டே போனது. யாரும் அதன் அருகே நெருங்க முடியவில்லை. தேவர்கள் கதறினர். பார்த்தாயா ? சிவன் சொன்னதாகச் சொல்லி இந்த நாரதன் யாகத்தைத் துவங்கினான். யாகத்திற்கான காரணத்தையும் சொல்ல மறுத்தான். யாகத்தின் பலனை பெற்றுக் கொள்ள வந்த நம்மை, துன்புறுத்தி பார்க்க அவனுக்கு ஆசை. மாட்டை ஆடாக்கினான். ஏதோ மாயாஜாலம் செய்து, பெரிய கொம்புகளுடன் அது நம்மை முட்ட வருகிறது. இதென்ன கொடுமை. என்று திக்குத் தெரியாமல் ஓட்டம் பிடித்தனர்.


    எல்லாரையும் கலகம் செய்பவன் நான் தான்; என்னையே கலக்கி விட்டாரே, இந்த சிவபெருமான், என்று நாரதரும் அங்கிருங்து தப்பினால் போதும், என ஓடினார். அஷ்டதிக்கஜங்கள் எனப்படும் எட்டு யானைகள் உலகத்தில் எட்டு திசைகளையும் தாங்குகின்றன. அந்த ஆடு அந்த யானைகளையும் விரட்டியது. யானைகள் தங்கள் இருப்பிடத்தை விட்டு நகர்ந்ததால், உலகமே ஆடத் தொடங்கியது. தேவர்கள் நிலையில்லாமல் தவித்தனர். இதையெல்லாம் உணர்ந்தும் உணராதவர் போல் அயர்ந்திருந்தார் கண்ண பரமாத்மா. அந்த வைகுண்டத் திற்குள்ளும் புகுந்த ஆடு அட்டகாசம் செய்தது. இந்த தகவல் முருகப் பெருமானுக்கு சென்று விட்டது. அவர் தன் தலைமை தளபதி வீரபாகுவிடம் கண் ஜாடை காட்டினார். தலைவனின் கண்ணசைப்பிலேயே அனைத்தையும் புரிந்துகொண்ட வீரபாகு, உடனடியாக புறப்பட்டான். வைகுண்டத்தை கணநேரத்தில் அடைந்ததுமே, பலம் வாய்ந்த அவனை கண்டு ஆடு பின் வாங்கியது. இருப்பினும். அவனை முட்ட வருவது போல் பாசாங்கு செய்தது. வீரபாகு ஆட்டின் கழுத்தை ஒரே அழுத்தாக இழுத்து பிடித்தான். கொம்பை பிடித்து தரதரவென இழுத்து வந்து முருகனின் முன்னால் விட்டான். முருகப்பெருமானை பார்த்ததோ இல்லையோ, அந்த ஆடு அவர் பாதத்தில் பணிந்தது. முருகப்பெருமான் கருணைக் கடவுள். மிகப் பெரும் தவறு செய்தாலும், அவரிடம் பணிந்து விட்டால், கருணையுடன் மன்னித்து விடுவார். அவர் அந்த ஆட்டின் மீது ஏறி அமர்ந்தார். முருகப்பெருமானுக்கு அந்த ஆடே வாகனமாயிற்று.. ‘அசம் ( அஜம் – ஆடு) மேவிய பெருமாளே ( கனவாலங் – திருப்புகழ்) தகர் இவர் வல் (குன்றுங் குன்றுந் - திருப்புகழ்) என்று அருணகிரியார் குறிப்புடிகிறார்.


    இந்த சம்பவத்தை வாழ்வியலோடு ஒப்பிடலாம். கடவுள் இருக்கிறார் என்பது தெரிந்தும், ஒவ்வொரு ஜீவனும் தங்களை உயர்ந்த ஒரு பிறவியாகக் கருதிக் கொண்டு ஆணவத்துடன் திரிகின்றன; அநியாயம் செய்கின்றன. இறைவன் அவற்றை தம் பக்கம் இழுக்கிறான். அவை அவனைச் சரணடைந்தால், தனக்கும் ஐக்கியமாக்கிக் கொள்கிறான். திருந்தாத ஜென்மங்களை கடுமையாகச் சோதிக்கிறான். இங்கே ஆடு அடங்கிப் போனதால், அவனுக்குரிய வாகனமாகும் பாக்கியம் பெற்றது. தேவர்கள் முருகனை மேஷ வாகனனே வாழ்க! எனக்கூறி வாழ்த்தினர். யாகம் நடத்தி அதிர்ந்து போன நாரதர், முருகனிடம் ஓடோடி வந்தார். ஆடு முருகன் முன்னால் பெட்டிப்பாம்பாக நிற்பதைப் பார்த்து, ‘இதென்ன அதிசயம். பசு ஆடானதும், அது உன்னைத் தேடி வந்ததும், எனக்கும் ஏதும் புரியவில்லையே என்றார்.’. முருகன் சிரித்தான். ‘நாரதரே ! தாங்கள் தவத்தில் உயர்ந்தவர். யாகத்தின் பலனை இந்த உலகுக்கு எடுத்துக் காட்டவே இத்தகைய நாடகம் ஒன்றை என் தந்தையின் ஏற்பாட்டால் நடத்தினேன். நீங்கள் யாகம் செய்த போது தோன்றிய இந்த ஆடு எனக்கு காணிக்கை ஆயிற்று. இதுபோன்ற சிறு காணிக்கையைக் கூட நான் பெரிய மனதுடன் ஏற்பேன். மனமார்ந்த பக்தி செய்ததாகக் கருதி, ஒன்றுக்கு பத்தாக பலனளிப்பேன். தாங்கள் தொடர்ந்து இந்த யாகத்தை செய்யுங்கள். யாகத்தில் தோன்றிய இந்த ஆட்டை எனக்கு பரிசளித்ததால், உங்களுக்கு நூறு யாகம் செய்த பலன் கிடைக்கும்’, என்றார்.


    இன்னோரு வரலாறும் உண்டு. சிவபுராணத்தில் முருகனை பற்றிய கதை தான் அது. நாரதர் எங்கோயோ ஒடிப்போய்வீட்ட தன்னுடைய ஆட்டைப்பற்றிக் கேட்டார் ஒருமுறை. அதைக்கண்டு பிடிக்குமாறு தன்படையை அனுப்பினான் முருகன். அந்த ஆட்டை விஷ்ணு இருந்த இடத்தில் கண்டு அதை எடுத்து வந்தனர். முருகன் அதன் மீது அமர்ந்து உலகை வலம் வந்து திரும்பினான். நாரதர் அந்த ஆட்டை திருப்பித்தர வேண்ட ‘இனி ஆடுகளை பலிதர வேண்டாம்’ என கூறிவிட்டு எதற்காக ஆட்டை பலி கொடுத்தார்களோ அந்த நோக்கம் நிறைவேறிவிட்டதாக சொல்லி முடித்தார்.


    அக்கினிக்கு வாகனம் ஆடு. அக்கினி சொருபமான முருகனுக்கு ஆடு வாகனம் பொருத்தம்தானே.
Working...
X