Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    260.ஆங்கு டல்வளைந்து
    260திருமாந்துறை
    திருச்சி- லால்குடி மார்க்கம்
    முற்காலத்தில் முனிவர் ஒருவர் இங்கு தவம் இயற்றூம்போது சிவாபச்சாரம் புரிந்ததால் மானாகப் பிறக்கும் சாபம் பெற்றார். குட்டிமானை விட்டுவிட்டு தாயம், தந்தையும் இரைதேடச் சென்றுவிட்டன. வேடன் வடிவ வேடம் கொண்ட சிவன் அவற்றை அம்பால் வீழ்த்தி முக்தியளித்தார். இங்கு குட்டிமான் பசியில் அலறியது. குட்டிக்குப் பார்வதி பால்புகட்டினாள். சிவன் மானை ஆற்றுப்படுத்தினார். மானின் முன்வினைகள் தீர்ந்து மீண்டும் முனிவரானது. முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க இங்கு சிவன் கோவில் கொண்டார்.
    தாந்த தனதந்த தாந்த தனதந்த
    தாந்த தனதந்த தனதான


    ஆங்கு டல்வளைந்து நீங்கு பல்நெகிழ்ந்து
    ஆய்ஞ்சு தளர்சிந்தை தடுமாறி
    ஆர்ந்து ளகடன்கள் வாங்க வுமறிந்து
    ஆண்டு பலசென்று கிடையோடே
    ஊங்கி ருமல்வந்து வீங்கு குடல்நொந்து
    ஓய்ந்து ணர்வழிந்து உயிர்போமுன்
    ஓங்கு மயில்வந்து சேண்பெ றஇசைந்து
    ஊன்றி யபதங்கள் தருவாயே
    வேங்கை யுமுயர்ந்த தீம்பு னமிருந்த
    வேந்தி ழையினின்ப மணவாளா
    வேண்டு மவர்தங்கள் பூண்ட பதமிஞ்ச
    வேண்டி யபதங்கள் புரிவோனே
    மாங்க னியுடைந்து தேங்க வயல்வந்து
    மாண்பு நெல்விளைந்த வளநாடா
    மாந்தர் தவரும்பர் கோன்ப ரவிநின்ற
    மாந்து றையமர்ந்த பெருமாளே.


    பதம் பிரித்தல்

    ஆங்கு உடல் வளைந்து நீங்கு பல் நெகிழ்ந்து
    ஆய்ஞ்சு தளர் சிந்தை தடுமாறி


    ஆங்க = அங்ஙனே உடல் வளைந்து = உடல் வளைவுற்றுக் கூனி நீங்கு பல் = விழ வேண்டிய பற்கள் நெகிழ்ந்து = தளர்ச்சி உற்று ஆய்ஞ்சு = ஆராய்ந்து தளர் சிந்தை = ஓய்வுறும் மனம் தடுமாறி = தடுமாற்றம் அடைந்து.


    ஆர்ந்து உள கடன்கள் வாங்கவும் அறிந்து
    ஆண்டு பல சென்று கிடையோடே


    ஆர்ந்து உள = நிறைய இருந்த கடன்கள் வாங்கவும் அறிந்து = கடன்கள் வேண்டுவனவற்றை அறிந்து வாங்கி
    ஆண்டு பல சென்று = இப்படிப் பல ஆண்டுகள் செல்ல
    கிடையோடே = (படுக்கையில்) கிடந்து.


    ஊங்கி இருமல் வந்து வீங்கு குடல் நொந்து
    ஓய்ந்து உணர்வு அழிந்து உயிர் போ முன்


    ஊங்கி = மேம்பட்டு இருமல் வந்து = நிரம்ப இருமல் நோய் ஏற்பட்டு வீங்கு குடல் நொந்து = வீங்கும் குடலும் சோர்வு அடைந்து ஓய்ந்து உணர்வு அழிந்து = சோர்ந்து உணர்ச்சியும் அடங்கி உயிர் போ முன் = உயிர் போவதற்கு முன்பு.


    ஓங்கு மயில் வந்து சேண் பெற இசைந்து
    ஊன்றிய பதங்கள் தருவாயே


    ஓங்கு மயில் வந்து = விளங்கி நிற்கும் மயிலின் மீது வந்தருள சேண் பெற = விண்ணுலகை அடைய இசைந்து = நீ மனம் உவந்து ஒப்பி ஊன்றிய பதங்கள் தருவாயே = நிலை பெற்ற உன் திருவடியைத் தருவாயாக.


    வேங்கையும் உயர்ந்த தீம் புனம் இருந்த
    வேந்து இழையின் இன்ப மணவாளா


    வேங்கையும் = வேங்கை மரங்களும். உயர்ந்த தீம் புனம் = உயர்ந்து ஓங்கி உள்ள இனிய தினைப் புனம். வேந்து இழையின் இன்ப = தலைவியாகிய வள்ளியின் இன்பத்துக்கு உரிய நாயகனே.
    வேண்டும் அவர் தங்கள் பூண்ட பத மிஞ்ச
    வேண்டிய பதங்கள் புரிவோனே


    வேண்டுமவர் தங்கள் = வேண்டிக் கொள்ளும் அடியார்கள் பூண்ட = கொண்டுள்ள பதம் மிஞ்ச = பதவி மேfமபட்டு விளங்க வேண்டிய பதங்கள் புரிவாயே = அவர்கள் விரும்பிய திருவடியை அருள் புரிவோனே.


    மாங்கனி உடைந்து தேங்க வயல் வந்து
    மாண்பு நெல் விளைந்த வள நாடா


    மாங்கனி உடைந்து = மாம்பழம் உடைந்து வயல் தேங்க வந்து = வயலில் நிறைந்து தங்கும்படி சேர்ந்து மாண்பு நெல் விளைந்த வளநாடா = (அதனால்) நல்ல அழகிய நெல் விளையும் வளப்பம் உள்ள சோழ நாடனே.


    மாந்தர் தவர் உம்பர் கோன் பரவி நின்ற
    மாந்துறை அமர்ந்த பெருமாளே.




    மாந்தர் = மனிதர்களும் தவர் = தவசிகளும் உம்பர் கோன் = இந்திரனும் நின்ற = போற்ற நின்ற மாந்துறை அமர்ந்த பெருமாளே = திருமாந்துறையில் வீற்றிருக்கும் பெருமாளே.


    சுருக்க உரை
    Last edited by soundararajan50; 31-05-18, 13:04.
Working...
X