257. இகலவருதிரை
257திருமயிலை
அடியவருடன் கலந்து நலம் பெற அருள்புரிவீர்
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன தனதான
இகல வருதிரை பெருகிய சலநிதி
நிலவு முலகினி லிகமுறு பிறவியி
னினிமை பெறவரு மிடருறு மிருவினை யதுதீர
இசையு முனதிரு பதமலர் தனைமன
மிசைய நினைகிலி யிதமுற வுனதரு
ளிவர வுருகிலி அயர்கிலி தொழுகிலி உமைபாகர்
மகிழு மகவென அறைகிலி நிறைகிலி
மடமை குறைகிலி மதியுணர் வறிகிலி
வசன மறவுறு மவுனமொ டுறைகிலி மடமாதர்
மயம தடரிட இடருறு மடியனு
மினிமை தருமுன தடியவ ருடனுற
மருவ அருள்தரு கிருபையின் மலிகுவ தொருநாளே
சிகர தனகிரி குறமக ளினிதுற
சிலத நலமுறு சிலபல வசனமு
திறைய அறைபயி லறுமுக நிறைதரு மருணீத
சிரண புரணவி தரணிவி சிரவண
சரணு சரவண பவகுக சயனொளி
திரவ பரவதி சிரமறை முடிவுறு பொருணீத
அகர உகரதி மகரதி சிகரதி
யகர அருளதி தெருளதி வலவல
அரண முரணுறு மசுரர்கள் கெடஅயில் விடுவோனே
அழகு மிலகிய புலமையு மகிமையும்
வளமு முறைதிரு மயிலையி லநுதின
மமரு மரகர சிவசுத அடியவர் பெருமாளே.
பதம் பிரித்தல்
சுருக்க உரை
விளக்கக் குறிப்புகள்

இரு வினைகள் ஒழிய உனது பாதங்களை நினையாதவனும், உன்னை
வணங்காதவனும், பேதையுமாகிய அடியேன் உன் அடியார்களுடன் கூடி இருக்கும் அருளுக்குப் பாத்திரமாவது என்று கிடைக்குமோ.
வள்ளியுடன் இனிய பேச்சுக்களை வீசிய அறுமுக வேளே. பெருமையும் தயாள குணமும் கேள்வியும் உடைவனே. உன்னை அடைக்கலம் புகுதற்கு உரியவனே. சிவபெருமான் குமாரனே. அகர, உகர, மகர, யகர சக்திகள் அடங்கிய சிவமாகிய அறிவே. அசுரர்கள் அழிய வேலைச் செலுத்தினவனே. மயிலையில் நிலையாக வீற்றிருக்கும் பெருமாளே. உனது கிருபை எனக்கு என்று கிடைக்கும்?

1. உனது அருள் இவர உருகிலி....
இவர்தல் = பொருந்துதல்.
மாதிவர் பாகன் மறை பயின்ற..............மாணிக்கவாசகர் திருவாசகம்
2. சரணு சரவணபவ குக...
சரண்+உ = சரணு. உ = இறைவன்.
உண்ணா முலை உ மைந்து ஆசு அரண் --- .........கந்தர் அந்தாதி
இவர்தல் = பொருந்துதல்.
மாதிவர் பாகன் மறை பயின்ற..............மாணிக்கவாசகர் திருவாசகம்
2. சரணு சரவணபவ குக...
சரண்+உ = சரணு. உ = இறைவன்.
உண்ணா முலை உ மைந்து ஆசு அரண் --- .........கந்தர் அந்தாதி