255.அமரும் அமரரினில்
255திருமயிலை
தனன தனனதன தனன தனனதன
தனன தனனதன தனதான
அமரு மமரரினி லதிக னயனுமரி
யவரும் வெருவவரு மதிகாளம்
அதனை யதகரண விதன பரிபுரண
மமைய னவர்கரண அகிலேச
நிமிர வருள்சரண நிபிட மதெனவுள
நிமிர சமிரமய நியமாய
நிமிட மதனிலுண வலசி வசுதவர
நினது பதவிதர வருவாயே
சமர சமரசுர அசுர விதரபர
சரத விரத அயில் விடுவேனே
தகுர்த தகுர்ததிகு திகுர்த திகுர்ததிகு
தரர ரரரரிரி தகுர்தாத
எமர நடனவித மயிலின் முதுகில்வரு
மிமைய மகள்குமர எமதீச
இயலி னியல்மயிலை நகரி லினிதுறையு
மெமது பரகுரவ பெருமாளே.
பதம் பிரித்து உரை
சுருக்க உரை
விளக்கக் குறிப்புகள்
255திருமயிலை
தனன தனனதன தனன தனனதன
தனன தனனதன தனதான
அமரு மமரரினி லதிக னயனுமரி
யவரும் வெருவவரு மதிகாளம்
அதனை யதகரண விதன பரிபுரண
மமைய னவர்கரண அகிலேச
நிமிர வருள்சரண நிபிட மதெனவுள
நிமிர சமிரமய நியமாய
நிமிட மதனிலுண வலசி வசுதவர
நினது பதவிதர வருவாயே
சமர சமரசுர அசுர விதரபர
சரத விரத அயில் விடுவேனே
தகுர்த தகுர்ததிகு திகுர்த திகுர்ததிகு
தரர ரரரரிரி தகுர்தாத
எமர நடனவித மயிலின் முதுகில்வரு
மிமைய மகள்குமர எமதீச
இயலி னியல்மயிலை நகரி லினிதுறையு
மெமது பரகுரவ பெருமாளே.
பதம் பிரித்து உரை
சுருக்க உரை
மேம்பட்ட இந்திரன், பிரமன், திருமால் ஆகியோர் அஞ்சும்படி வருகின்ற ஆலகால விடத்தை உண்டு அதை அழித்தவனே. சாந்தம் அமைந்தவர்கள் மனத்தில் இருப்பவனே. சகலத்துக்கும் ஈசனே, எங்கள் தாழ்வு நீங்கி நாங்கள் உயர அருள் செய்ய வேண்டும்.
விஷம் வருகின்றது என்று தேவர்கள் முறையிட, நிமிடத்தில் வாயு வேகத்தில் சரணம் அடைந்தவர்களைக் காப்பதே முறைமை என்று விஷத்தை உண்ட சிவபெருமானின் சிறந்த குமாரனே, உனது திருவடி நிலையை தந்து அருள வேண்டும். சுரர்கள் வாழவும், அசுரர்கள் அழியவும் வேலைச் செலுத்தியவனே, முருகன் அடியார்க்கு வேண்டியதும், பல நடன வகைகள் கொண்டதுமான மயில் மீது ஏறி வரும் பார்வதியின் மகனே, எங்கள் ஈசனே, இயற்றமிழ் விளங்கும் மயிலையில் உறையும் குரு மூர்த்தியே உனது பதவி தர வருவாயே.

சமர சமரசுர அசுர விதரபர....
சமரச அமர சுர - ஒற்றுமையான பெருந்தன்மையுடைய தேவர்களுக்கு. அசுர இதர பர - பகைவர்களாகிய கீழான அசுரர்மேல்
பழய காலத்தில் தமிழர்கள் கையாண்ட கால அளவுகள்
2 கண்ணிமை =1 நொடி
2 கைநொடி = 1 மாத்திரை
2 மாத்திரைகள் = 1 குரு
2 குருக்கள் = 1 உயிர்
2 உயிர்கள் = 1 சணிகம்
12 சணிகங்கள் =1 விநாடி
60 தற்பரைகள் = 1 விநாடி
60 விநாடிகள் =1 நிமிடம்