251.
251திருபாண்டிக்கொடுமுடி
ஈரோடுலிருந்து 37 கிமீ தொலவில். கறையூர் என்று ஊரின் பெயர்,
பாண்டிக்கொடிமுடி என்பது கோயிலின் பெயர்
தனதனத் தனனத் தனதான
இருவினைப் பிறவிக் கடல்மூழ்கி
இடர்கள்பட் டலையப் புகுதாதே
திருவருட் கருணைப் ப்ரபையாலே
திரமெனக் கதியைப் பெறுவேனோ
அரியயற் கறிதற் கரியோனே
அடியவர்க் கெளி யற் புதநேயா
குருவெனச் சிவனுக் கருள்போதா
கொடுமுடிக் குமரப் பெருமாளே.
பதம் பிரித்தல்
சுருக்க உரை
ஒப்புக

இருவினைகளால் உண்டாகும் பிறவி என்னும் கடலில் மூழ்கி, துன்பங்களுக்கு ஆளாகாமல், உனது திருவருள் பெற்று நற் கதி அடைவேனோ. திருமாலும் பிரமனும் காண முடியாத உன் திருவடிகள் அடியவர்களாலும் எளியோர்களாலும் அறியப்படுவதன்றோ! சிவனுக்கு உபதேசித்த குரு நாதா, நன் நல்ல கதியைப் பெற அருள் செய்வாய்
.ஒப்புக
அரியயற்கு அறிதற்கு...
அரவினில் துயிதரும் அரியும் நற் பிரமனும் அன்று அயர்ந்து
குரைகழல் திருமுடி அளவிட அரியவர -- சம்பந்தர் தேவாரம்.
அண்ணல் அன்பு செய்வாரவர்க் கெளியவர் அரியவர் அல்லார்க்கு..- --
சம்பந்தர் தேவாரம்
அரவினில் துயிதரும் அரியும் நற் பிரமனும் அன்று அயர்ந்து
குரைகழல் திருமுடி அளவிட அரியவர -- சம்பந்தர் தேவாரம்.
அண்ணல் அன்பு செய்வாரவர்க் கெளியவர் அரியவர் அல்லார்க்கு..- --
சம்பந்தர் தேவாரம்