249.இருவினை யஞ்ச
249
திருப்பந்தணைநல்லூர்
தனதன தந்த தனதன தந்த
தனதன தந்த தனதான
இருவினை யஞ்ச வருவினை கெஞ்ச
இருள்பிணி துஞ்ச மலமாய
எனதிடர் மங்க வுனதருள் பொங்க
இசைகொடு துங்க புகழ்கூறித்
திருமுக சந்த்ர முருகக டம்ப
சிவசுத கந்த குகவேல
சிவசிவ என்று தெளி வுறு நெஞ்சு
திகழந டஞ்செய் கழல்தாராய்
மருதொடு கஞ்ச னுயிர்பலி கொண்டு
மகிழரி விண்டு மருகோனே
வதைபுரி கின்ற நிசிசரர் குன்ற
வலம்வரு செம்பொன் மயில்வீரா
அருகுறு மங்கை யொடுவிடை யுந்து
மமலனு கந்த முருகோனே
அருள்செறி பந்த ணையிலிரு மங்கை
அமளிந லங்கொள் பெருமாளே
பதம் பிரித்தல்
சுருக்க உரை
விரிவுரை குகஸ்ரீ ரசபதி
விளக்கக் குறிப்புகள்
249
திருப்பந்தணைநல்லூர்
தனதன தந்த தனதன தந்த
தனதன தந்த தனதான
இருவினை யஞ்ச வருவினை கெஞ்ச
இருள்பிணி துஞ்ச மலமாய
எனதிடர் மங்க வுனதருள் பொங்க
இசைகொடு துங்க புகழ்கூறித்
திருமுக சந்த்ர முருகக டம்ப
சிவசுத கந்த குகவேல
சிவசிவ என்று தெளி வுறு நெஞ்சு
திகழந டஞ்செய் கழல்தாராய்
மருதொடு கஞ்ச னுயிர்பலி கொண்டு
மகிழரி விண்டு மருகோனே
வதைபுரி கின்ற நிசிசரர் குன்ற
வலம்வரு செம்பொன் மயில்வீரா
அருகுறு மங்கை யொடுவிடை யுந்து
மமலனு கந்த முருகோனே
அருள்செறி பந்த ணையிலிரு மங்கை
அமளிந லங்கொள் பெருமாளே
பதம் பிரித்தல்
சுருக்க உரை
இருவினைகள் ஒழிய, வருவினைகள் வராதிருக்க, நோய்கள் விலக, உனது திருப்புகழைக் கூறி , சிவபெருமான் குமரேனே, குகனே, வேலனே, சிவசிவ என்று தௌiவு உற்று என் மனம் பொலிவு பெற, நடனம் செய்யும் உன் கழல் தாராய் மருத மரத்தையும் கம்சனையும் பலி கொண்ட திருமால் மகிழும் மருகனே அசுரர்களை வதைத்த செம்பொன் மயில் வீரனே பக்கத்தில் பார்வதியுடன் விடை மேல் ஏறி வரும் சிவபெருமானின் குழந்தையே வள்ளி, தேவசேனையுடன் இன்பத்தை அனுபவிக்கும் பெருமாளே
நடனம் செய்யும் உன் கழல் தாராய்
நடனம் செய்யும் உன் கழல் தாராய்
விரிவுரை குகஸ்ரீ ரசபதி
விளக்கக் குறிப்புகள்
இருவினை 1) சஞ்சித வினை ( அனுபவித்து போக எஞ்சி இருப்பது இது
குருவின் திருநோக்கால் அழிந்து போம் 2) ஆகாமிய வினை (இனி உறும் பிறப்பில் வரும் புண்ணிய பாவங்கள் மேல் வரும் ஆகாமியமும் ஆகும்
சஞ்சிதம் எல்லாம் ஞானத்தழல் சுட்டு வெண்ணீறாக்கும் கிஞ்சிலா
காமியந்தான் கிட்டாமல் விட்டுப் போகும் விஞ்சின பிராரத்வத்தின்
வினை அனுபவித்துத் தீரும் - கைவல்யநவநீதம்
ஒப்புக:
நெஞ்சு திகழ
எத்தால் நினைக்கின்றேன் மனத்துன்னை வைத்தாய்
– சுந்தரர் தேவாரம்
ஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் நினையாதொரு போதும் இருந்தறியேன் -திருநாவுக்கரசர் தேவாரம்