248.அறிவிலாத
248
திருநெல்வாயில்
(தற்சமயம் சிவபுரி என்று அழைக்கப்படுகிறது.
சிதம்பரம் அருகில்)
தனன தானன தானதாத் தனந்த
தனன தானன தானதாத் தனந்த
தனன தானன தானதாத் தனந்த தனதான
அறிவி லாதவ ரீனர்பேச் சிரண்டு
பகரும் நாவினர் லோபர்தீக் குணங்க
ளதிக பாதகர் மாதர்மேற் கலன்கள் புனையாதர்
அசடர் பூமிசை வீணராய்ப் பிறந்து
திரியு மானுடர் பேதைமார்க் கிரங்கி
யழியு மாலினர் நீதிநூற் பயன்கள் தெரியாத
நெறியி லாதவர் சூதினாற் கவர்ந்து
பொருள்செய் பூரியர் மோகனமாய்ப் ப்ரபஞ்ச
நிலையில் வீழ்தரு மூடர்பாற் சிறந்த தமிழ்கூறி
நினைவு பாழ்பட வாடிநோக் கிழந்து
வறுமை யாகிய தீயின்மேற் கிடந்து
நௌiயு நீள்புழு வாயினேற் கிரங்கி யருள்வாயே
நறிய வார்குழல் வானநாட் டரம்பை
மகளிர் காதலர் தோள்கள்வேட் டிணங்கி
நகைகொ டேழிசை பாடிமேற் பொலிந்து களிகூர
நடுவி லாதகு ரோதமாய்த் தடிந்த
தகுவார் மாதர்ம ணாளர்தோட் பிரிந்து
நசைபொ றாதழு தாகமாய்த் தழுங்கி யிடர்கூர
மறியு மாழ்கட லூடுபோய்க் கரந்து
கவடு கோடியின் மேலுமாய்ப் பரந்து
வளரு மாவிரு கூறதாய்த் தடிந்த வடிவேலா
மருவு காளமு கீல்கள்கூட் டெழுந்து
மதியு லாவிய மாடமேற் படிந்த
வயல்கள் மேவுநெல் வாயில்வீற்றிருந்த பெருமாளே
பதம் பிரித்து பொருள்
சுருக்க உரை
விளக்கக் குறிப்புகள்

அறிவு இல்லாதவர்கள், இழிவானவரகள், சொல் தவறியவர்கள்,
உலோபிகள், வீண் காலம் கழிப்போர், விலை மாதர் மீது இரக்கம்
கொண்டு, ஆசைப் பெருக்கால் ஆபரணங்களைப் புனைந்து உலக
இன்பத்தையே விரும்பும் மூடர்கள் இத்தகையோரிடம் சென்று தமிழ் பாடல்களைப் பாடி, தரித்திரம் என்கின்ற நெருப்பில் கிடந்து நெளிகின்ற புழுப் போல் ஆன, என் மீது இரங்கி அருள் புரிவாயாக
தேவலோகத்துப் பெண்கள் களிப்புற்று ஏழிசைகளைப் பாடவும், அசுரப் பெண்கள் தங்கள் கணவர்களின் பிரிவால் அழுது வருந்தவும், கடலுக்குள் மறைந்த மாமரமாகிய சூரனை இரு பிளவாகப் பிளந்த கூரிய வேலாயுதனே, வயல்கள் சூழ்ந்த திருநெல்வயிலில் வீற்றிருக்கும் பெருமாளே என் மீது இரக்கம் கொண்டு அருள் புரிவாயாக

ஏழிசை பாடி
ஏழு இசை = குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன
சப்த சுரம்( ஸ்வரம்) = ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், துவைதம், நிஷாதம் என்பன (ச, ரி, க, ம , ப, த, நி)
ஒப்புக
கவடு கோடியின் மேலுமாய்ப் பரந்த
கவடு கோத்தெழு முவரி மாத்திறல்
காய்வேல் பாடே னாடேன் ................... திருப்புகழ், கவடுகோத்தெழு
துன்னு பல் கவடு சூதமாய் அவுணன் நின்றான்-................. கந்த புராணம்