245.வங்கார மார்பிலணி
245
திருசெங்காட்டங்குடி
(நன்னிலம் வட்டம் திருப்புகலூர் அருகில் உள்ளது)
தந்தான தானதன தானதன தானதன
தந்தான தானதன தானதன தானதன
தந்தான தானதன தானதன தானதன தனதான
வங்கார மார்பிலணி தாரொடுயர் கோடசைய
கொந்தார மாலைகுழ லாரமொடு தோள்புரள
வண்காதி லோலைகதிர் போலவொளி வீசியிதழ் மலர்போல
மஞ்சாடு சாபநுதல் வாளனைய வேல்விழிகள்
கொஞ்சார மோககிளி யாகநகை பேசியுற
வந்தாரை வாருமிரு நீருறவெ னாசைமய லிடுமாதர்
சங்காளர் சூதுகொலை காரர்குடி கேடர்சுழல்
சிங்கார தோளர்பண ஆசையுளர் சாதியிலர்
சண்டாளர் சீசியவர் மாயவலை யீட்டியெ னுழலாமற்
சங்கோதை நாதமொடு கூடிவெகு மாயையிருள்
வெந்தோட மூலஅழல் வீசவுப தேசமது
தண்காதி லோதியிரு பாதமலர் சேரஅருள் புரிவாயே
சிங்கார ரூபமயில் வாகனந மோநமென
கந்தாகு மாரசிவ தேசிகந மோநமென
சிந்தூர பார்வதிசு தாகரந மோநமென விருதோதை
சிந்தான சோதிகதிர் வேலவந மோநமென
கங்காள வேணிகுரு வானவந மோநமென
திண்சூர ராழிமலை தூள்படவை வேலைவிடு முருகோனே
இங்கீத வேதபிர மாவைவிழ மோதியொரு
பெண்காத லோடுவன மேவிவளி நாயகியை
யின்பான தேனிரச மார்முலைவி டாதகர மணிமார்பா
எண்டோளர் காதல்கொடு காதல்கறி யேபருகு
செங்கோடு மேவிபிர காசமயில் மேலழகொ
டென்காதல் மாலைமுடி ஆறுமுக வாவமரர் பெருமாளே
பதம் பிரித்தல்
சுருக்க உரை
விளக்கக் குறிப்புகள்

மார்பில் அணிந்துள்ள பொன் மாலைகளுடன், மலை போன்ற கொங்கைகள் அசைய, பூங்கொத்துக்கள் நிறைந்த கூந்தலும், மணி மாலையும் தோள்களில் புரள, காதில் சூரிய ஒளி வீசும் ஓலை மிளிர, வாயிதழ் குமுதம் போல் விளங்க, வில்லைப் போன்ற நெற்றி, வாள், வேல் போன்ற கண்கள், கிளி போல் பேசும் பேச்சு இவைகளைக் கொண்டு,வருவோரை, வாரும் என்று உபசரித்து, உறவு முறை கூறி, ஆசை மயக்கத்தை ஊட்டும் பொது மகளிர் கூடிக் களிப்பவர்கள் வஞ்சக ஒழுக்கத்தினர் குடியைக் கெடுப்பவர்கள் எங்கும் திரிபவர்கள் அலங்காரத் தோளினர் பண ஆசை பிடித்தவர்கள் சாதி பேதம் பாராத சண்டாளிகள் இத்தகைய இழிந்தோரின் மாய வலைகளில் நான் சிக்கி அலையாமல், யோக நிலையைப் பூண்டு, தச நாதங்களை அனுபவித்து, மாயையை வென்று,மூலாக்கினி வீசிடத் தக்க உபதேசத்தை என் காதுகளில் உரைத்து அருள் புரிக
மயில் வாகனனே, கந்தனே, குமரனே, சிவனுக்குக் குருவே, குங்குமம் அணிந்த பார்வதியின் மைந்தனே,இவ்வாறு கூறி உன்னை வணங்குகின்றேன். சோதி மயமான வேலாயுதனே, அசுரர்களையும் அவர்களின் மலைகளையும் அழித்தவனே, வள்ளியை அணைந்தவனே, சிவபெருமான் பிள்ளைக் கறி கேட்ட திருச்செங்காட்டைச் சேர்ந்து மயில் மேல் வீற்றிருந்து,என் தமிழ்ப் பாட்டுக்களை மாலையாக அணிந்தவனே,உன் திருவடிகளைத் தந்து அருளுக