244.வேதத்தில்
244
திருக்குற்றாலம்
(தென்காசிக்கு அருகில் உள்ளது)
தானத்தத் தானன தானன
தானத்தத் தானன தானன
தானத்தத் தானன தானன தனதான
வேதத்திற் கேள்வி யிலாதது
போதத்திற் காண வொணாதது
வீசத்திற் றூர மிலாதது கதியாளர்
வீதித்துத் தேடரி தானது
ஆதித்தற் காய வொணாதது
வேகத்துத் தீயில் வெகாதது சுடர்கானம்
வாதத்துக் கேயவி யாதது
காதத்திற் பூவிய லானது
வாசத்திற் பேரொளி யானது மதமூறு
மாயத்திற் காய மதாசல
தீதர்க்குத் தூரம தாகிய
வாழ்வைச்சற் காரம தாஇனி யருள்வாயே
காதத்திற் காயம தாகும
தீதித்தித் தீதிது தீதென
காதற்பட் டோதியு மேவிடு கதிகாணார்
காணப்பட் டேகொடு நோய்கொடு
வாதைப்பட் டேமதி தீதக
லாமற்கெட் டேதடு மாறிட அடுவோனே
கோதைப்பித் தாயொரு வேடுவ
ரூபைப்பெற் றேவன வேடுவர்
கூடத்துக் கேகுடி யாய்வரு முருகோனே
கோதிற்பத் தாரொடு மாதவ
சீலச்சித் தாதியர் சூழ்தரு
கோலக்குற் றாலமு லாவிய பெருமாளே
பதம் பிரித்தல்
சுருக்க உரை
ஒப்புக
244
திருக்குற்றாலம்
(தென்காசிக்கு அருகில் உள்ளது)
தானத்தத் தானன தானன
தானத்தத் தானன தானன
தானத்தத் தானன தானன தனதான
வேதத்திற் கேள்வி யிலாதது
போதத்திற் காண வொணாதது
வீசத்திற் றூர மிலாதது கதியாளர்
வீதித்துத் தேடரி தானது
ஆதித்தற் காய வொணாதது
வேகத்துத் தீயில் வெகாதது சுடர்கானம்
வாதத்துக் கேயவி யாதது
காதத்திற் பூவிய லானது
வாசத்திற் பேரொளி யானது மதமூறு
மாயத்திற் காய மதாசல
தீதர்க்குத் தூரம தாகிய
வாழ்வைச்சற் காரம தாஇனி யருள்வாயே
காதத்திற் காயம தாகும
தீதித்தித் தீதிது தீதென
காதற்பட் டோதியு மேவிடு கதிகாணார்
காணப்பட் டேகொடு நோய்கொடு
வாதைப்பட் டேமதி தீதக
லாமற்கெட் டேதடு மாறிட அடுவோனே
கோதைப்பித் தாயொரு வேடுவ
ரூபைப்பெற் றேவன வேடுவர்
கூடத்துக் கேகுடி யாய்வரு முருகோனே
கோதிற்பத் தாரொடு மாதவ
சீலச்சித் தாதியர் சூழ்தரு
கோலக்குற் றாலமு லாவிய பெருமாளே
பதம் பிரித்தல்
சுருக்க உரை
வேதங்களில் ஆராயப் படாதது அறிவு கொண்டு காண முடியாதது அடியார்கள் மனத்துகுள்ளேயே இருப்பது நற்கதி அடைய விரும்புவோர் பகுத்து ஆராய்ந்து தேட முடியாதது தீயில் வேகாதது காற்றில் அவிந்து போகாதது காத தூரத்துக்கு நறுமணம் வீசும் மலர் போன்றது சோதியாய் விளங்குவது ஆணவ மலம் என்னும் குற்றம் உள்ளவர்களால் எட்ட முடியாதது இத்தகைய பெருவாழ்வை அடியேனையும் மதித்து இனி அருள்வாயாக
கொலைத் தொழிலில் விருப்பம் கொண்ட அறிவைத் திருத்தி, இது தீயது, இது தீயது என்று பன்முறை புத்தி சொல்லிய போதிலும் நற்கதியைக் காணாதவர்கள் பொல்லாத (பிறவியாகிய) நோய் வாய்ப்பட்டுக் கேடுற்றுத் தடுமாறும்படி அவர்களை வருத்துபவனே ஒப்பற்ற வேடப் பெண்ணாகிய வள்ளியின் மேல் காமப் பித்து கொண்டு, அந்த வேடர்கள் இருக்கும் வீட்டுக்குக் குடி போந்த முருகனே குற்றமில்லாத பக்தர்களுடன்,தவ ஒழுக்கம் உள்ளவர்களும் வலம் வரும் குற்றாலத்தில் உலாவும் பெருமாளே எனக்கு பேரின்ப வாழ்வைத் தந்து அருள்வாயாக

1 வேதத்தில் கேள்வி யிலாதது
பரம் பொருள் இலக்கணம் கூறப்பட்ட மற்ற திருப்புகழ் பாடல்கள்: மக்கட்குக்கூற, சுருதியூடு,காணொணாதது, ஓலமறைகள, வாசித்து
நான்மறை யெட்டிற்ட் டாதெனவேவரு - திருப்புகழ், மக்கட்கு
வேதக் காட்சிக்கும் உபநிடத் துச்சியில் விரிந்த
போதக் காட்சிக்கும் காணலன் ... கந்த புராணம்
தேடொணாத் தேவனை என்னுள்ளே தேடிக் கண்டு கொண்டேன் ........ திருநாவுக்கரசர் தேவாரம்
2 வாதத்துக்கே அவியாதது
பவனம் வீசில் வீழாது சலியாது ..... திருப்புகழ், சுருதியூடு