243.அலங்கார முடிக்கிரண
243
திருக்குரங்காடுதுறை
கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் இந்த தலம் 20வது கிமீ தூரத்தில் உள்ளது தஞ்சாவூரில் இருந்து 57 கிமீ கணபதி அக்கிரகாரத்திற்கு அருகில் அருகில் பட்டுக்குடி தலத்தில் இருக்கும அற்புதமான பன்னிருகரங்களுடனுமானத் திருக்கோலம் இந்த பாடலுக்கு உந்துதலாக இருந்திருக்கலாம் என்பது கருத்து
தனந்தான தனத்தனனத் தனந்தான தனத்தனனத்
தனந்தான தனத்தனனத் தனதான
அலங்கார முடிக்கிரணத் திரண்டாறு முகத்தழகிற்
கசைந்தாடு குழைக்கவசத் திரடோளும்
அலந்தாம மணித்திரளைப் புரண்டாட நிரைத்தகரத்
தணிந்தாழி வனைக்கடகச் சுடர்வேலுஞ்
சிலம்போடு மணிச்சுருதி சலங்கோசை மிகுத்ததிரச்
சிவந்தேறி மணத்தமலர்ப் புனைபாதந்
திமிந்தோதி திமித்திமிதித் தனந்தான தனத்தனனத்
தினந்தோறு நடிப்பதுமற் புகல்வேனோ
இலங்கேசர் வனத்துள்வனக் குரங்கேவி யுழற்புகையிட்
டிளந்தாது மலர்த்திருவைச் சிறைமீளும்
இளங்காள முகிற்கடுமைச் சரங்கோடு கரத்திலெடுத்
திருங்கான நடக்குமவற் கினியோனே
குலங்கோடு படைத்தசுரப் பெருஞ்சேனை யழிக்கமுனைக்
கொடுந்தாரை வெயிற் கயிலைத் தொடும்வீரா
கொழுங்காவின் மலர்ப்பொழிலிற் கரும்பாலை புணர்க்குமிசைக்
குரங்காடு துறைக்குமரப் பெருமாளே
பதம் பிரித்தல்
சுருக்க உரை
ஒப்புக:

அலங்காரமான கிரீடம் திரண்டுள்ள ஆறு முகங்களிலும் அசைந்தாடுகின்ற குழைகள், கவசம் திரண்டு தோள்களின் மேல்அணியப்பட்ட பூமாலைகள், ரத்தின மாலைகள் புரண்டு ஆட, வீர கடகமும் வேலும் திருக்கரத்தில் விளங்க, சிலம்பு,சதங்கை இவைகளின் ஓசை மிக, திருவடிகள் தாளத்துடன்
நடனம் செய்யும் அழகு இவைகளை நான் சொல்லி உன்னைத் துதிக்க மாட்டேனோ?
இராவணனுடைய அசோக வனத்தில் அனுமனை அனுப்பி, இலங்கை எரிபடச்செய்து, இலக்குமியை மீட்டவரும், கொடுமையான அம்பைக் கையில் ஏந்தியவரும், காட்டில் தந்தை சொற்படி நடந்தவரும் ஆகிய இராமனின் இனிய மருகனே செழிப்புள்ள சோலையில் கரும்பு ஆலைகள் வேலை செய்யும் ஒலி கேட்கும் குரங்காடு துறையில் உறையும் பெருமாளே உன் நடனத்தைப் புகல்வேனோ?

1 மன் புகல்வேனோ
கூசாது வேட னுமிழ்தரு நீராடி யூனு ணெனுமுரை
கூறாம னீய அசனுகர் தருசேடங் ---------- திருப்புகழ், ஆசாரவீன
2. குரங்கேவி யழற்புகைவிட்ட
இடுகனல் குரங்கொடு நெடுங்கடல் நடுங்கிட
எழுந்தருள் முகுந்தனன் மருகோனே --------- திருப்புகழ்,தலங்களில்
3. குரங்காடு துறைக் குமரப் பெருமாளே
குரையார் பொழில்சூழ் குரங்காடு துறையே ----- சம்பந்தர் தேவாரம்