242.சுருதி யாயிய
242
திருக்குடவாயில்
பரம மாயையின் நேர்மையாய் யாவரும்
அறிய ஒணாததை நீ குருவாய் இது
பகருமாறு செய்தாய்
தனன தானன தானன தானன
தனன தானன தானன தானன
தனன தானன தானன தானன தனதான
சுருதி யாயிய லாயியல் நீடிய
தொகுதி யாய்வரு வாய்வெகு பாஷைகொள்
தொடர்பு மாயடி யாய்நடு வாய்மிகு துணையாய்மேல்
துறவு மாயற மாய்நெறி யாய்மிகு
விரியு மாய்விளை வாயருள் ஞானிகள்
சுகமு மாய்முகி லாய்மழை யாயெழு சுடர்வீசும்
பருதி யாய்மதி யாய்நிறை தாரகை
பலவு மாய்வெளி யாயொளி யாயெழு
பகலி ராவிலை யாய்நிலை யாய்மிகு பரமாகும்
பரம மாயையி னேர்மையை யாவரு
மறியொ ணாததை நீகுரு வாயிது
பகரு மாறுசெய் தாய்முதல் நாளுறு பயனோதான்
கருது மாறிரு தோள்மயில் வேலிவை
கருதொ ணாவகை யோரர சாய்வரு
கவுணி யோர்குல வேதிய னாயுமை கனபாரக்
களப பூண்முலை யூறிய பாலணு
மதலை யாய்மிகு பாடலின் மீறிய
கவிஞ னாய்விளை யாடிடம் வாதிகள் கழுவேறக்
குருதி யாறெழ வீதியெ லாமலர்
நிறைய தாய்விட நீறிட வேசெய்து
கொடிய மாறன்மெய் கூனிமி ராமுனை குலையாவான்
குடிபு கீரென மாமது ராபுரி
யியலை யாரண வூரென நேர்செய்து
குடசை மாநகர் வாழ்வுற மேவிய பெருமாளே
பதம் பிரித்தல்
சுருக்க உரை
விளக்கக் குறிப்புகள்
[div5]சம்பந்தர் வரலாறு
பால் உ(ண்)ணு மதலையாய் மிகு பாடலின் மீறிய கவிஞனாய்
7-ம் நூற்றாண்டில் சைவம் தழைப்பதற்காகவே அவதரித்தவர் திருஞானசம்பந்தர். அவதரித்த ஸ்தலம் சீர்காழி என்ற இந்த பாடல் பெற்ற ஊர். சிவபாத ஹிருதயருக்கும் பகவதியம்மைக்கும் மகனாகப் பிறந்த சம்பந்தருக்கு இக்கோவில் திருக்குளக்கரையில் இறைவன் சிவபெருமான் விரும்பியபடி, உமாதேவி சிவஞானத்தை அமுதமாகக் குழைத்து பாலாகக் கொடுக்க, அதை உண்ட ஞானசம்பந்தர் இறையருள் பெற்றார் குழந்தையின் வாயில் பால் வழிவதைக் கண்ட தந்தை, ‘பால் கொடுத்தது யார்?’ என்று வினவினார் "தோடுடைய செவியன்" என்று தொடங்கும் பதிகத்தை சம்பந்தர் பாடி பாலூட்டியது உமாதேவியென்றும் தான் இறையருள் பெற்றதையும் கூறினார். சம்பந்தரின் முதல்
தேவாரப் பதிகம் இதுதான்
உலகமாதா பெரியநாயகி அம்மை குழந்தை சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டிய வரலாற்றை நினைவு படுத்தும் விதமாக, சீர்காழியில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் இரண்டாம் நாள் திருவிழா திருமுலைப்பால் உற்சவம் என்று இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது சித்திரை பிரம்மோற்சவத்தில் இரண்டாம் நாள் திருவாதிரை நட்சத்திரத்தன்று இவ்விழா
நடைபெறும்[/link]

”பால் கொடுத்தது யார்” என தந்தை கேட்க “அவர் தான்” என தந்தைக்கு சுட்டிகாட்டும் சம்பந்தர் – கோயில் சிற்பம்
வேதமாய், தமிழாய், இயற்றமிழையும் மிக்கான பல பகுதிகளாய், பல மொழிகளின் சம்பந்தம் உடையதாய்,அடியாய், நடுவாய், துறவாய், நெறியாய், விரிவாய்,விரிவு உடையதாய், ஞானிகள் அனுபவிக்கும் சுகப் பொருளாய், மேகமாய், மழையாய், ஒளியாய், ஆகாய வெளியாய், சோதியாய், பகல் இரவு இல்லாததாய்,மாயையின் உண்மைத் தத்துவமாய், எவரும் அறிய முடியாததை, நீ குருவாக வந்து, அதை உலகத்தாருக்குஎடுத்து ஓதுமாறு எனக்குத் திருவருள் புரிந்தது நான் முற் பிறப்பில் செய்த தவத்தின்
பயனோ?
உன்னுடைய பன்னிரு தோள்களும், மயில், வேல் இவைகளை மறைத்து, கவுணிய குலத்தைச் சேர்ந்த காழிப்பதியின் அரசனாய்த் தோன்றி, உமையின்f பாலை உண்டு, பல திருவளையாடல்கள் செய்த சமயத்தில்,வாதுக்கு வந்த சமணர்களை வென்று அவர்களைக் கழுவில் ஏற்றி, பாண்டியனின் உடல் கூனையும் நீக்கி,சமண் பகையை அழித்து, தேவர்கள் பொன்னுலகத்தில் குடி போகச்செய்து, மதுரையின் பெயரை வேத புரியாக மாற்றி, திருக்குட வாயிலில் வீfற்றிருக்கும் பெருமாளே நீ குருவாய் வந்தது நான் செய்த பயன் தான்