240.உரைத்த சம்ப்ரம
240
தனிச்சயம்
சோழவந்தான் அருகில்
தனத்த தந்தன தனதன தந்தத்
தனத்த தந்தன தனதன தந்தத்
தனத்த தந்தன தனதன தந்தத் தனதான
உரைத்த சம்ப்ரம வடிவு திரங்கிக்
கறுத்த குஞ்சியும் வெளிறிய பஞ்சொத்
தொலித்தி டுஞ்செவி செவிடுற வொண்கட் குருடாகி
உரத்த வெண்பலு நழுவிம தங்கெட்
டிரைத்து கிண்கிணெ னிருமலெ ழுந்திட்
டுளைப்பு டன்தலை கிறுகிறெ னும்பித் தமுமேல்கொண்
உரத்த மின்றிய புழுவினும் விஞ்சிப்
பழுத்து ளஞ்செயல் வசனம் வரம்பற்
றடத்த பெண்டிரு மெதிர்வர நிந்தித் தனைவோரும்
அசுத்த னென்றிட வுணர்வது குன்றித்
துடிப்ப துஞ்சிறி துளதில தென்கைக்
கவத்தை வந்துயி ரலமரு மன்றைக் கருள்வாயே
திரித்தி ரிந்திரி ரிரிரிரி ரின்றிட்
டுடுட்டு டுண்டுடு டுடுடுடு டுண்டுட்
டிகுட்டி குண்டிகு டிகுடிகு டிண்டுட் டிகுதீதோ
திமித்தி மிந்திமி திமிதிமி யென்றிட்
டிடக்கை துந்துமி முரசு முழங்கச்
செருக் களந்தனில் நிருதுர் தயங்கச் சிலபேய்கள்
தரித்து மண்டையி லுதிர மருந்தத்
திரட்ப ருந்துகள் குடர்கள் பிடுங்கத்
தருக்கு சம்புகள் நிணமது சிந்தப் பொரும்வேலா
தடச்சி கண்டியில் வயலிய லன்பைப்
படத்த நெஞ்சினி லியல்செறி கொங்கிற்
றனிச்ச யந்தனி லினிதுறை கந்தப் பெருமாளே
பதம் பிரித்து உரை
சுருக்க உரை
ஒப்புக

உடல் வன்மை குறைந்து, தலைமயிர் வெளுத்து, காது செவிடாகி,
கண்கள் குருடாகி, இருமல் மிகுந்து, இரத்தம் குன்றி,மனம், வாக்கு, செயல் இவை ஒரு அளவு ஒழுங்கீனமான நிலையைக் கடந்து, நாடி குறைந்துத் துன்பப்படும் அந்நாளில் எனக்கு அருள் புரிவாயாக பறைகள் முழங்க போர்க்களத்தில் அசுரர்கள் கலங்க, பேய்களும், நரிகளும் மாமிசத்தையும், இரத்தத்தையும் உண்ணும்படி போர் புரிந்த வேலா மயில் மீதும், வயலூரிலும் அன்பு நிறைந்த அன்பர்கள் மனத்திலும், தனிச்சயம் என்னும் தலத்திலும் உறையும் பெருமாளே என் உயிர் அலமரும் அன்றைக்கு அருள்வாய்

உயிர் அலமரும் அன்றைக்கு
மிழலையுள்ளிர் இறக்கின்று நும்மை மறக்கினும் என்னைக் குறிக்
கொண்மினே -- திருநாவுக்கரசர் தேவாரம்
மிழலையுள்ளிர் இறக்கின்று நும்மை மறக்கினும் என்னைக் குறிக்
கொண்மினே -- திருநாவுக்கரசர் தேவாரம்