239. உரியதவ
239
சோமீச்சுரம்
கும்பகோணம் வியாழச் சோமேஸ்வரர் கோயிலில் உள்ள ஆறுமுகன்.
போளூர் அருகில் உள்ள சோமேசர் கோயிலே அருணகிரியார் பாடிய தலம் எனக் கருத இடமிருக்கிறது என்பது வலையப்பட்டி கிருஷ்ணன் கருத்து
தனனதன தனனதன தானான தானதன
தனனதன தனனதன தானான தானதன
தனனதன தனனதன தானான தானதன தனதான
இரவினிடை துயிலுகினும் யாரோடு பேசுகினும்
இளமையுமு னழகுபுனை யீராறு தோள்நிரையும்
இருபதமு மறுமுகமும் யானோத ஞானமதை யருள்வாயே
உரியதவ நெறியில்நம நாராய ணாயவென
ஒருமதலை மொழியளவி லோராத கோபமுட
னுனதிறைவ னெதனிலுள னோதாய டாவெனுமு னுறுதூணில்
உரமுடைய அரிவடிவ தாய்மோதி வீழவிரல்
உகிர்புதைய இரணியனை மார்பீறி வாகைபுனை
உவணபதி நெடியவனும் வேதாவும் நான்மறையு முயர்வாக
வாரிளிக ளிசைமுரல வாகான தோகையிள
மயிலிடையில் நடனமிட ஆகாச மூடுருவ
வளர்கமுகின் விரிகுலைகள் பூணார மாகியிட மதில்சூழும்
மருதரசர் படைவிடுதி வீடாக நாடிமிக
மழவிடையின் மிசையிவரு சோமீசர் கோயில்தனில்
மகிழ்வுபெற வுறைமுருக னேபேணு வானவர்கள் பெருமாளே
படைவிடுதி இந்த பாடலில் குறிப்பிட்டிருப்பது சேயாற்றங்கறையில் நவிரம் என்னும் மலையில் காரியாண்டிக் கடவுள் கோயில் சேனைகளால் சூழப்பட்டிருந்ததைக் குறிக்கும் – வலையப்பட்டி கிருஷ்ணன்
சுருக்கவுரை

ரேகைகள் உள்ள வண்டுகள் இசை எழுப்ப ரிஷப அழகுள்ள தோகையை உடைய இள மயில் நடனம் செய்ய ஆகாயம் வரை ஊடுருவிச் செல்லும் அளவுக்கு வளர்ந்துள்ள கமுக மரங்களின் விரிந்த குலைகள் பூணுதற்குரிய ஹாரம் போல ஆபரணமாக விளங்கும்படியும், ரிஷப வாகனத்தின் மேல் வருகின்ற சோமீசர் என்ற நாமம் படைத்த சிவபிரான் வீற்றிருக்கும் மருதநிலத்து மன்னர்கள் பாசறையிடத்துக்குத் தக்க தலமாகவும் அமைந்த சோமீச்சுரம் என்னும் பதியில் மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கும்
முருகனே,சரியான தவ நெறியிலிருந்து நமோ நாராயணாய என்று ஒப்பற்ற குழந்தையாகிய(பிரகலாதன்) சொன்னதும் அறிவில்லாத கோபத்துடன் உன் கடவுள் எங்கு இருக்கிறான் சொல்லடா என்று கேட்டு முடியும் முன்னே, அங்கிருந்த தூணில் வலிமை உள்ள சிங்கத்தின் உருவமாய் வந்து இரணியன் மேல் மோதி அவனை வீழச் செய்து நகங்கள் பதிய மார்பைக் கிழித்துப் பிளந்து வெற்றிக் கொடி ஏற்றினவரும் கருடனுக்குத் தலைவருமான நெடியதிருமாலும் பிரமனும் நான்கு வேதங்களும் மேன்மை பெறும்படியாக வீற்றிருப்பவனே, கண் இமை கொட்டுதல் இன்றி இரவில் உறங்கினாலும்,எவருடன் பேசினாலும் இளமையும் அழகும் பூண்டுள்ள உனது பன்னிரண்டு தோள் வரிசையைகளையும், இரண்டு திருவடிகளையும்,ஆறு முகங்களையும் நான் ஓதும்படியான ஞானத்தைத் தந்து அருள்வாயாக.

இரவின் இடை துயில் உகினும் யாரோடு பேசுகினும்
இளமையும் உன் அழகு புனை ஈராறு தோள் நிரையும்
இரு பதமும் அறு முகமும் யான் ஓத ஞானம் அதை அருள்வாயே – மிக அருமையான துதி