238. ஒருவழிபடாது
238
சோமநாதன் மடம்
(புத்தூர் அருகில் உள்ளது)
தனதனன தான தான தனதனன தான தான
தனதனன தான தான தனதான
ஒருவழிப டாது மாயை யிருவினைவி டாது நாளு
முழலுமநு ராக மோக அநுபோகம்
உடலுமுயிர் தானு மாயு னுணர்விலொரு காலி ராத
வுளமுநெகிழ் வாகு மாறு அடியேனுக்
கிரவுபகல் போன ஞான பரமசிவ யோக தீர
மெனமொழியும் வீசு பாச கனகோப
எமபடரை மோது மோன வுரையிலுப தேச வாளை
யெனதுபகை தீர நீயும் அருள்வாயே
அரிவையொரு பாக மான அருணகிரி நாதர் பூசை
அடைவுதவ றாது பேணும் அறிவாளன்
அமணர்குல கால னாகும் அரியதவ ராஜ ராஜன்
அவனிபுகழ் சோமநாதன் மடமேவும்
முருகபொரு சூரர் சேனை முறியவட மேரு வீழ
முகரசல ராசி வேக முனிவோனே
மொழியுமடி யார்கள் கோடி குறைகருதி னாலும் வேறு
முனியஅறி யாத தேவர் பெருமாளே
பதம் பிரித்தல்
சுருக்க உரை
விளக்கக் குறிப்புகள்

ஒரு வழியில் நிற்க முடியாமல் மாயைகளும் இரு வினைகளும் என்னை விடாமல், காம போகத்தில் ஈடுபட்டு, என் உடல் உயிரைப் பற்றிய சிந்தையே உள்ளவனாக, நீ உள்ளாய் என்னும் உணர்ச்சியே ஒரு போதும் இல்லதவனாய், நான் அலைச்சல் உறுகின்றேன் ஆதலால் என் உள்ளம் நெகிழ்ந்து கசியும்படி, இரவு பகல் கடந்த ஞான யோகத்தைக் காட்டி, யம தூதர்களை வெருட்டத் தக்கதான மௌன ஞான உபதேசத்தைத் தந்தருளி உட்பகை, புறப்ககை யாவும் ஒழிந்து பட அருள் புரிய வேண்டும்
அருணாசல மூர்த்தியின் பூசை முறைகளைத் தவறாமல் போற்றும் அறிவாளியும், சமண குலத்துக்கு ஒரு யமன் போன்றவனாகத் தோன்றும் முருகனே அடியார்கள் குறைகளைத் தீர்க்கும் பெருமாளே, மௌன உபதேச வாளை எனக்குக் கொடுத்து அருள்வாயே
அருணாசல மூர்த்தியின் பூசை முறைகளைத் தவறாமல் போற்றும் அறிவாளியும், சமண குலத்துக்கு ஒரு யமன் போன்றவனாகத் தோன்றும் முருகனே அடியார்கள் குறைகளைத் தீர்க்கும் பெருமாளே, மௌன உபதேச வாளை எனக்குக் கொடுத்து அருள்வாயே
விளக்கக் குறிப்புகள்
அவனிபுகழ் சோமநாதன் மடமேவும்
புத்தூரில் உள்ள சிவாலயத்தில் காணும் சாசனம் ஒன்று சோமநாத ஜீயருக்கு
இக்கோயில் உரிமையானது என்ற சாசனம் உள்ளது இவர் அண்ணாமலை யாரைத் தவறாது பூசித்து வந்ததோடு, தமக்கு உரிய கோயிலில் முருகனையும் வழிபட்டு வந்தார் -வசு செங்கல்வராய பின்ளை
ஒப்புக
1 ஒருவழிடாது மாயை
பொய்ம் மாயப்பெருங்கடலில் புலம்பாநின்ற
புண்ணியங்காள், தீவினைகாள், திருவே நீங்கள்
இம்மாயப்பெருங்கடலை அரித்துத் தின்பீர் ---..... திருநாவுக்கரசர் தேவாரம்
2 எமபடரை மோது மோன
எனது மனசிற் பரம சுக மவுன கட்கமதை
யமன்முடி துணிக்க விதியா வைத்த பூபதியும்---வேடிச்சி காவலன் வகுப்பு 18