237. பரிவுறு
237
சேலம்
சுகவனேசுவர் திருக்கோயில் சுகவன சுப்பிரமணியரை தரிசித்து பாடிய பாடல்
தனதன தானத் தனதன தானத்
தனதன தானத் தனதான
பரிவுறு நாரற் றழல்மதி வீசச்
சிலைபொரு காலுற் றதனாலே
பனிபடு சோலைக் குயிலது கூவக்
குழல்தனி யோசைத் தரலாலே
மருவியல் மாதுக் கிருகயல் சோரத்
தனிமிக வாடித் தளராதே
மனமுற வாழத் திருமணி மார்பத்
தருள்முரு காவுற் றணைவாயே
கிரிதனில் வேல்விட் டிருதொளை யாகத்
தொடுகும ராமுத் தமிழோனே
கிளரொளி நாதர்க் கொருமக னாகித்
திருவளர் சேலத் தமர்வோனே
பொருகிரி சூரக் கிளையது மாளத்
தனிமயி லேறித் திரிவோனே
புகர்முக வேழக் கணபதி யாருக்
கிளையவி நோதப் பெருமாளே
பதம் பிரித்தல்
சுருக்க உரை
விளக்கக் குறிப்புகள்

அன்பு சற்றும் இல்லாமல் நிலவு நெருப்பை வீசுவதாலும்,தென்றல் காற்று மேலே படுவதாலும், சோலையில் குயில்கள் கூவுதலாலும், குழல் இன்னிசையைத் தருவதாலும், தனிமையில் இருக்கும் இந்தப் பெண்ணின் கயல் மீன் போன்ற கண்கள் சோர்ந்து வாட்டம் உறாமல்,அவள் நிம்மதியாக வாழும் பொருட்டு, முருகா, நீ வந்து,அவளை அணைந்தருள்வாயாக
கிரெளஞ்ச மலை மீது வேலாயுதத்தைச் செலுத்தி, அதைத் தொளை பட்டு அழியும்படிச் செய்த குமரனே, முத்தமிழ்ப் பெருமாளே, பேரொளி வடிவான சிவபெருமானுக்கு ஒப்பற்ற பிள்ளையாகி, செல்வம் பெருகி ஓங்கும் சேலத்தில் வீற்றிருப்பவனே, ஏழு கிரியும், சூரனும் அவன் சுற்றமும் இறக்க, மயில் மேல் ஏறி உலகை வலம் வந்தவனே, கணபதிக்குத் தம்பியே அற்புதப் பெருமாளே, காம நோயால் வாடும் இந்தப் பெண்ணை அணைந்தருள்வாயாக

நிலவு, தென்றல், குயில், குழல், இவை விரத தாபம் கொண்டவர்களுக்கு வேதனை தருவன. தெரிவினில் நடவார் என்ற திருப்புகழைப் பார்க்கவும்
ஒப்புக:
தனி மயில் ஏறித் திரிவோனே
திருத்தி விட்டொரு நொடியினில் வலம் வரு மயில் வீரா
............... திருப்புகழ், தொடத்து
ஒப்புக:
தனி மயில் ஏறித் திரிவோனே
திருத்தி விட்டொரு நொடியினில் வலம் வரு மயில் வீரா
............... திருப்புகழ், தொடத்து