Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    237. பரிவுறு
    237
    சேலம்
    சுகவனேசுவர் திருக்கோயில் சுகவன சுப்பிரமணியரை தரிசித்து பாடிய பாடல்

    தனதன தானத் தனதன தானத்
    தனதன தானத் தனதான


    பரிவுறு நாரற் றழல்மதி வீசச்
    சிலைபொரு காலுற் றதனாலே
    பனிபடு சோலைக் குயிலது கூவக்
    குழல்தனி யோசைத் தரலாலே
    மருவியல் மாதுக் கிருகயல் சோரத்
    தனிமிக வாடித் தளராதே
    மனமுற வாழத் திருமணி மார்பத்
    தருள்முரு காவுற் றணைவாயே
    கிரிதனில் வேல்விட் டிருதொளை யாகத்
    தொடுகும ராமுத் தமிழோனே
    கிளரொளி நாதர்க் கொருமக னாகித்
    திருவளர் சேலத் தமர்வோனே
    பொருகிரி சூரக் கிளையது மாளத்
    தனிமயி லேறித் திரிவோனே
    புகர்முக வேழக் கணபதி யாருக்
    கிளையவி நோதப் பெருமாளே



    பதம் பிரித்தல்



    பரிவு உறு நார் அற்று அழல் மதி வீச
    சிலை பொரு கால் உற்று அதனாலே


    பனி படு சோலை குயில் அது கூவ
    குழல் தனி ஓசை தரலாலே


    மருவு இயல் மாதுக்கு இரு கயல் சோர
    தனி மிக வாடி தளராதே


    மனம் உற வாழ திரு மணி மார்பத்து
    அருள் முருகா உற்று அணைவாயே


    கிரி தனில் வேல் விட்டு இரு தொளை ஆக
    தொடு குமரா முத்தமிழோனே


    கிளர் ஒளி நாதர்க்கு ஒரு மகனாகி
    திரு வளர் சேலத்து அமர்வோனே


    பொரு கிரி சூர கிளை அது மாள
    தனி மயில் ஏறி திரிவோனே


    புகர் முக வேழ கணபதியாருக்கு
    இளைய விநோத பெருமாளே




    பரிவு உறு = இரக்கம் கொண்ட நார் = அன்பு அற்று =சற்றும் இல்லாமல் அழல் மதி = நெருப்பை நிலவுவீச = வீசுவதாலும் சிலை = (பொதிய) மலையினின்றும் பொரு = பொருந்தி வரும் கால் =தென்றல் காற்று உற்றதனாலே = மேலே படுவதாலும்


    பனிபடு = குளிர்ச்சியுள்ள சோலைக் குயில் அது =சோலையில் குயில் கூவுவதாலும் குழல் =புல்லாங்குழலின் தனி ஓசை = ஒப்பற்றஇன்னிசையை தரலாலே = தருவதாலும்


    மருவு இயல் மாதுக்கு = பொருந்திய தன்மையில் உள்ள இந்தப் பெண்ணின் இரு கயல் = இரண்டு கயல் மீன் போன்ற கண்களும் சோர = சோர்வு அடையும்படி தனி = தனியே கிடந்து மிக வாடி =மிகவும் வாட்டமுற்று தளராதே = தளர்ச்சி உறாமல்


    மனம் உற = மனம் ஒருமைப்பட்டு வாழ = வாழும் பொருட்டு திரு மணி மார்பத்து = (உனது) அழகிய இரத்தின மாலை அணிந்த மார்பில் அருள் முருகா = அருள் மூர்த்தியாகிய முருகனே உற்று = நீ வந்துஅணைவாயே = அணைந்து அருள்வாயாக


    கிரிதனில் = கிரவுஞ்ச மலை மீது வேல் விட்டு =வேலயுதத்தைச் செலுத்தி இரு = பெரிய தொளையாக = தொளைபடும்படி தொடு குமரா =செலுத்திய குமரனே முத்தமிழோனே = முத்தமிழ்ப் பெருமானே


    கிளர் ஒளி = பேரொளிச் சொருபனாகிய நாதர்க்கு =தேவனாகிய சிவ பெருமானுக்கு ஒரு = ஒப்பற்றமகனாகி = பிள்ளையாகி திரு வளர் = செல்வம் பெருகி ஓங்கும் சேலத்து அமர்வோனே =சேலத்தில் வீற்றிருப்பவனே


    பொரு கிரி = போருக்கு எழுந்த எழு கிரியும் சூரக் கிளை அது = சூரனும் அவனுடைய சுற்றத்தாரும்மாள = இறக்க தனி மயில் ஏறி = ஒப்பற்ற மயிலின் மேல் ஏறி திரிவோனே = (உலகை) வலம் வந்தவனே


    புகர் முக = புள்ளியை உடைய் முகத்தைக் கொண்டகணபதியாருக்கு = விநாயகப் பெருமானுக்குஇளைய பெருமாளே = தம்பியே விநோதப் பெருமாளே = அற்புதப் பெருமாளே/



    சுருக்க உரை





    விளக்கக் குறிப்புகள்


    நிலவு, தென்றல், குயில், குழல், இவை விரத தாபம் கொண்டவர்களுக்கு வேதனை தருவன. தெரிவினில் நடவார் என்ற திருப்புகழைப் பார்க்கவும்


    ஒப்புக:
    தனி மயில் ஏறித் திரிவோனே
    திருத்தி விட்டொரு நொடியினில் வலம் வரு மயில் வீரா
    ............... திருப்புகழ், தொடத்து
Working...
X