236.பூமாதுர
236
சீகாழி
தானாதன தானன தானன
தானாதன தானன தானன
தானாதன தானன தானன தந்ததான
பூமாதுர மேயணி மான்மறை
வாய்நாலுடை யோன்மலி வானவர்
கோமான்முநி வோர்முதல் யாருமி யம்புவேதம்
பூராயம தாய்மொழி நூல்களும்
ஆராய்வ திலாதட லாசுரர்
போரால்மறை வாயுறு பீதியின் வந்துகூடி
நீமாறரு ளாயென ஈசனை
பாமாலைக ளால்தொழு தேதிரு
நீறார்தரு மேனிய தேனியல் கொன்றையோடு
நீரேர்தரு சானவி மாமதி
காகோதர மாதுளை கூவிள
நேரோடம் விளாமுத லார்சடை யெம்பிரானே
போமாறினி வேறெது வோதென
வேயாரரு ளாலவ ரீதரு
போர்வேலவ நீலக லாவியி வர்ந்துநீடு
பூலோகமொ டேயறு லோகமு
நேரோர்நொடி யேவரு வோய்சுர
சேனாபதி யாயவ னேயுனை யன்பினோடுங்
காமாவறு சோம ஸமானன
தாமாமண மார்தரு நீபசு
தாமாவென வேதுதி யாதுழல் வஞ்சனேனைக்
காவாயடி நாளசு ரேசரை
யேசாடிய கூர்வடி வேலவ
காரார்தரு காழியின் மேவிய தம்பிரானே
பதம் பிரித்தல்
சுருக்க உரை
விளக்கக் குறிப்புகள்
236
சீகாழி
தானாதன தானன தானன
தானாதன தானன தானன
தானாதன தானன தானன தந்ததான
பூமாதுர மேயணி மான்மறை
வாய்நாலுடை யோன்மலி வானவர்
கோமான்முநி வோர்முதல் யாருமி யம்புவேதம்
பூராயம தாய்மொழி நூல்களும்
ஆராய்வ திலாதட லாசுரர்
போரால்மறை வாயுறு பீதியின் வந்துகூடி
நீமாறரு ளாயென ஈசனை
பாமாலைக ளால்தொழு தேதிரு
நீறார்தரு மேனிய தேனியல் கொன்றையோடு
நீரேர்தரு சானவி மாமதி
காகோதர மாதுளை கூவிள
நேரோடம் விளாமுத லார்சடை யெம்பிரானே
போமாறினி வேறெது வோதென
வேயாரரு ளாலவ ரீதரு
போர்வேலவ நீலக லாவியி வர்ந்துநீடு
பூலோகமொ டேயறு லோகமு
நேரோர்நொடி யேவரு வோய்சுர
சேனாபதி யாயவ னேயுனை யன்பினோடுங்
காமாவறு சோம ஸமானன
தாமாமண மார்தரு நீபசு
தாமாவென வேதுதி யாதுழல் வஞ்சனேனைக்
காவாயடி நாளசு ரேசரை
யேசாடிய கூர்வடி வேலவ
காரார்தரு காழியின் மேவிய தம்பிரானே
பதம் பிரித்தல்
சுருக்க உரை
இலக்குமியை மார்பில் வைத்துள்ள திருமாலும்,வேதங்களை ஓதும் பிரமனும், தேவர்களின் தலைவனான இந்திரனும், முனிவர்களும், நல்ல நூல்களை ஆராய்ந்து கற்காத அசுரர்களுக்குப் பயந்து,பகைவர்களிடமிருந்து உய்ய எங்களுக்கு வேறு வழி இல்லை, அசுரர்களை அழிக்க வல்ல ஒருவனை நீங்கள் அளிக்க வேண்டும் என்று கங்கை, நிலவு, பாம்பு,வில்வம், விளா முதலியவற்றை அணிந்த சடையை உடைய சிவ பெருமானிடம் முறை இட, அவர் தந்தருளிய வேலவனே
நீல மயிலின் மேல் ஏறி, ஏழு உலகங்களையும் சுற்றி வந்தவனே, தேவர்கள் சேனாபதியே, அழகனே, மணம் வீரும் கடப்ப மாலை அணிந்தவனே, என்று உன்னைத் துதியாமல் திரிகின்ற வஞ்சகனாகிய என்னைக் காத்தருள்க. வேலாயுதத்தைக் கையில் ஏந்தியவனே,சீகாழியில் வீற்றிருக்கும் தம்பிரானே, இந்த வஞ்சகனைக் காத்தருள்க

இந்தப் பாடலில் கந்த புராணச் சுருக்கம் கூறப்பட்டுள்ளது
பூலோகமொடு அறு லோகமும்
பூலோகம், புவ லோகம், சுவர்க்க லோகம், மக லோகம், தவ லோகம், சன லோகம், சத்திய லோகம்
ஒப்புக:
1 அவர் ஈதரு போர் வேலவ
எப்படைக்கும் நாயகமாவதொரு தனிச் சுடர் வேல் நல்கியே
மதலைகக் கொடுத்தான் ...... கந்த புராணம்
இருண்ட கண்டர் தந்த அயில் வேலா ............ .. திருப்புகழ், கனங்கள்
2 பூமாதுரமே அணி
திரு மரு மார்பில் அவனும் திகழ் தரு மா மலரோனும்
......சம்பந்தர் தேவாரம்
3. சானவி மா மதி
சானவி~ ஜான்வி = கங்கை சன்னு( ஜன்நு) முனிவரிடத்தினின்று தோன்றியவள்