235.தினமணி
235
சீகாழி
தனதன தாந்ததான தனதன தாந்ததான
தனதன தாந்ததான தனதான
தினமணி சார்ங்கபாணி யெனமதிள் நீண்டுசால
தினகர னேய்ந்தமாளி கையிலாரஞ்
செழுமணி சேர்ந்தபீடி கையிலிசை வாய்ந்தபாடல்
வயிரியர் சேர்ந்துபாட இருபாலும்
இனவளை பூண்கையார்க வரியிட வேய்ந்துமாலை
புழுககில் சாந்து பூசி யரசாகி
இனிதிறு மாந்துவாழு மிருவினை நீண்டகாய
மொருபிடி சாம்பலாகி விடலாமோ
வனசர ரேங்கவான முகடுற வோங்கிஆசை
மயிலொடு பாங்கிமார்க ளருகாக
மயிலொடு மான்கள்சூழ வளவரி வேங்கையாகி
மலைமிசை தோன்றுமாய வடிவோனே
கனசமண் மூங்கர்கோடி கழுமிசை தூங்கநீறு
கருணைகொள் பாண்டிநாடு பெறவேதக்
கவிதரு காந்தபால கழுமல பூந்தராய
கவுணியர் வேந்ததேவர் பெருமாளே
பதம் பிரித்து உரை
சுருக்க உரை

சூரியன், திருமால் என்னு சொல்லும்படி ஒளி மிகுந்த மதில்களை உடைய மாளிகையில் முத்தாலும்,இரத்தினத்தாலும் அலங்கரிக்கப்பட்ட பீடிகையில் அமர்ந்து, பாணர்கள் இரு பக்கங்களிலும், அமர்ந்து இசை முழங்கவும், மாதர்கள் கவரி வீசவும், வாசனைப் பொருட்களை அணிந்து பெருமையுடன் வாழ்கின்ற,வினைக்கு ஏதுவான இவ்வுடல் எரிந்து சாம்பலாக, நான் அழிந்து படலாமோ
வேடர்கள் திகைக்க வள்ளி மலையில் வேங்கை மரமாகிய மாய வடிவத்தனே, சமணர்கள் கழுவில் ஏறவும், பாண்டிய நாட்டில் வேதப் பொருள் பரவவும்,சம்பந்தராக வந்து தேவாரப் பாடல்களை அருளியவனே,கழுமலம், பூந்தராய் என்னும் பெயர்களைக் கொண்ட சீகாழியில் வீற்றிருப்பவனே, கவுணிய குலத்தவனே,தேவர் பெருமாளே, உடல் அழிந்து நான் சாம்பலாகி விடலாமோ?