234.சருவி யிகழ்ந்து
234
சீகாழி
உமது சொரூப தடத்த 16 இயல்புகளை என்றுமே மறவேனே என்று கூறும் பாங்கு அழகானது
தனதன தந்தன தந்தன தந்தன
தனதன தந்தன தந்தன தந்தன
தனதன தந்தன தந்தன தந்தன தனதான
சருவி யிகழ்ந்து மருண்டு வெகுண்டுறு
சமயமு மொன்றிலை யென்றவ ரும்பறி
தலையரு நின்றுக லங்கவி ரும்பிய தமிழ்கூறுஞ்
சலிகையு நன்றியும் வென்றியு மங்கள
பெருமைக ளுங்கன முங்குண மும்பயில்
சரவண மும்பொறை யும்புக ழுந்திகழ் தனிவேலும்
விருதுது லங்கசி கண்டியி லண்டரு
முருகிவ ணங்கவ ரும்பத மும்பல
விதரண முந்திற முந்தர முந்தினை புனமானின்
ம்ருகமத குங்கும கொங்கையில் நொந்தடி
வருடிம ணந்துபு ணர்ந்தது வும்பல
விஜயமு மன்பின்மொ ழிந்துமொ ழிந்தியல் மறவேனே
கருதியி லங்கைய ழிந்துவி டும்படி
அவுணர டங்கம டிந்துவி ழும்படி
கதிரவ னிந்துவி ளங்கிவ ரும்படி விடுமாயன்
கடகரி யஞ்சிந டுங்கிவ ருந்திடு
மடுவினில் வந்துத வும்புய லிந்திரை
கணவன ரங்கமு குந்தன்வ ருஞ்சக டறமோதி
மருதுகு லுங்கிந லங்கமு னிந்திடு
வரதன லங்கல்பு னைந்தரு ளுங்குறள்
வடிவனெ டுங்கடல் மங்கவொ ரம்புகை தொடுமீளி
மருகபு ரந்தர னுந்தவ மொன்றிய
பிரமபு ரந்தனி லுங்குக னென்பவர்
மனதினி லும்பரி வொன்றிய மர்ந்தருள் பெருமாளே
பதம் பிரித்து உரை
சுருக்க உரை
குகஸ்ரீ ரசபதி விரிவுரை
ஒப்புக

மயங்கி நிற்கும் சமய வாதிகளும், கலங்கி நிற்கும் சமயங்களும், சமயம்
என்பதே இல்லை என்று சொல்லுவோரும், மயிர் நீங்கிய தலையை
உடைய சமணர்களும், மற்றும் யாவரும் விரும்பத் தக்க தமிழ்ப்
பாடல்களைச் சொல்லும் உன்னுடைய வாக்குத் திறன், உபகார சிந்தை,
வெற்றி, பெருமை, நற்குணம், பொறுமை, புகழ், ஒப்பற்ற வேல் ஆகியவை
வெற்றிச் சின்னங்களாக விளங்க, மயில் மீது வருகின்ற முருகனே
தேவர்களும் வணங்கும் உனது திருவடியையும், உன் கொடைத்
தன்மையையும், திறமையையும், மேன்மையையும், வள்ளியை மணந்து
நின்றதையும், பல முறை போற்றித் துதித்து உன் பெருமைகளை
மறக்கவே மாட்டேன்
இராவணன் செய்த பிழைக்காக இலங்கையை அழிந்து போகும்படியும்,
அரக்கர்கள் யாவரும் இறக்கவும், சூரிய சந்திரர்கள் மீண்டும்
விளக்கத்துடன் வரவும் செய்த திருமால், மடுவில் கஜேந்தரனுக்கு
உதவயிவர் சீரங்கத்தில் பள்ளி கொண்டிருப்பவர் தன்னைக் கொல்ல
வந்த அசுரன் மாளும்படி வண்டியை உதைத்த வரதர் வாமன மூர்த்தி
கடலும் வாட்டமுற ஒரு அம்பைச் செலுத்தியவர் அந்தத் திருமாலின்
மருகனே சீகாழியிலும், குகன் என்று சொல்லுவோர் மனத்திலும்
அமர்ந்தருளும் பெருமாளே உன் பெருமைகளை நான் மறவேன்

1 கடகரி அஞ்சி நடுங்கி
நுதி வைத்தக ராம லைந்திடு களிறுக்கரு ளேபுரிந்திட
நொடியிற்பரி வாகவந்தவன் மருகோனே....................... திருப்புகழ். பகர்தற்கரி
2 மருது குலுங்கி நலங்க முனிந்திடு
கஞ்சன்வி டுஞ்சக டாசு ரன்பட
வென்றுகு ருந்தினி லேறி மங்கையர்........................... திருப்புகழ், வஞ்சனைமி
3 குறள் வடிவவென
குறியவன் செப்பப் பட்ட எவர்க்கும் பெரியவன் ............. திருப்புகழ். செறிதரும்
4 கடல் மங்க ஓரம்பு கை தொடுமீளி
பரவு பரவை கொல் பரவை வண அரி, .............................திருப்புகழ், குழலடவி
5 குகன் என்பவர் மனதினிலும்
குகனென்று மொழிந்துருகுஞ் செயல்தந் துணர்வென்
றருள்வாய்) ............................................................................கந்தர் அனுபூதி
விளக்கக் குறிப்புகள்
பிரமபுரந் தனிலும் சீகாழி = இந்திரன் தவமிருந்த தலம்
திரு வளரும் கழுமலமே கொச்சை
தேவேந்திரன்ஊர் அயன் ஊர் தெய்வத்
தரு வளரும் பொழில் புறவம் சிலம்பன் ஊர்
காழி தகு சண்பை ஒண்பா
உரு வளர் வெங்குரு புகலி ஓங்கு தராய்
தோணிபுரம் சம்பந்தர் தேவாரம்