232.பிறவியான
232
சிறுவை
(சின்னம்பேடு, சிறுவரம்பேடு)
ஆலயத்தின் கொடி மரம் தாண்டி சதுரமான கூண்டில் மரகதப் பச்சை மயில் சிலா ரூபமாக கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது. இத்தகைய மரகதப் பச்சை மயில் வாகனத்தை உலகில் வேற எங்கும் காண முடியாது
தனன தான தனன தந்த தனன தான தனன தந்த
தனன தான தனன தந்த தனதான
பிறவி யான சடமி றங்கி வழியி லாத துறைசெ றிந்து
பிணிக ளான துயரு ழன்று தடுமாறிப்
பெருகு தீய வினையி னொந்து கதிக டோறு மலைபொ ருந்தி
பிடிப டாத ஜனன நம்பி யழியாதே
நறைவி ழாத மலர்மு கந்த வரிய மோன வழிதி றந்த
நளின பாத மெனது சிந்தை யகலாதே
நரர்சு ராதி பரும்வ ணங்கு மினிய சேவை தனைவி ரும்பி
நலன தாக அடிய னென்று பெறுவேனோ
பொறிவ ழாத முநிவர் தங்கள் நெறிவ ழாத பிலனு ழன்று
பொருநி சாச ரனைநி னைந்து வினைநாடிப்
பொருவி லாம லருள்பு ரிந்து மயிலி னேறி நொடியில் வந்து
புளக மேவ தமிழ்பு னைந்த முருகோனே
சிறுவ ராகி யிருவ ரந்த கரிய தாதி கொடுபொ ருஞ்சொல்
சிலையி ராம னுடனெ திர்ந்து சமராடிச்
செயம தான நகர மர்ந்த அளகை போல வளமி குந்த
சிறுவை மேவி வரமி மிகுந்த பெருமாளே
பதம் பிரித்து உரை
சுருக்க உரை
விளக்கக் குறிப்புகள்

பிறப்புக்கு ஏற்பட்ட உடலில் புகுந்து, தீய நெறிகளில் ஒழுகி, நோய் வாய்ப்பட்டு, வேதனை அடைந்து, பிறப்புகள் தோறும் அலைச்சல் உற்று, மீண்டும் பிறப்பை விரும்பி நான் அழிந்து போகாமல், அருமையான மவுன வழியைத் திறந்து காட்டிய உனது தாமரைத் திருவடிகள் என் மனத்தை விட்டு நீங்காமல், மனிதரும் தேவர்களும் வணங்கும் உன் தரிசனத்தை விரும்பும் பாக்கியத்தை என்று நான் பெறுவேனோ?
ஐம்பொறிகளும் வழுவா வண்ணம், எப்போதும் தியானத்தை மேற்கொண்ட நிலையில் இருந்த நக்கீரர் குகையில் அரக்கனிடமிருந்து பிழைக்கும் வழியை நாடியவுடன், மயில் மேல் ஏறிச் சென்று அவருக்கு உதவி செய்து, அவர் திருமுருகாற்றுப் படையைப் புனையச் செய்த முருகனே, சிறுவர்களான லவ குசர், இராமனிடம் போர் செய்து வெற்றி பெற்ற சிறுவை என்னும் நகரில் வீற்றிருக்கும் பெருமாளே, உன் கமல பாதங்களை என்று காணப் பெறுவேனோ?

1. சிறுவராகி யிருவர் அந்த...
இராமனின் புதல்வர்களாகிய லவ குசன் என்னும் சிறுவர்கள், இரமனுடன் போர் புரிந்து வெற்றி பெற்ற தலம் சிறுவை ஆகும். ஆதலின் இத்தலம் சிறுவர் அம்பெடு (சிறுவரம்பேடு) எனப் பெயர் பெற்றது.
2. பொறி வழாத முநிவர்....
(மலைமு கஞ்சு மந்த புலவர் செஞ்சொல் கொண்டு
வழி திறந்த செங்கை வடிவேலா)......திருப்புகழ் (முலைமுகந்தி).
(பொருதச மர்த்தா குத்திர துரகமு கக்கொ தைக்கிடை
புலவரில் நக்கீ ரர்க்குத வியவேளே)......திருப்புகழ் (அகல்வினை).