230. அண்டர்பதி
230
சிறுவை
சிறுவாபுரி – தற்சமயம் சின்னம்பேடு என்று அழைக்கப்படுகிறது
சென்னை – கும்மிடிப்பூண்டி வழியில் பொன்னேரிக்கு அருகில்
மங்கை உடன் அரி தானும் இன்பம் உற மகிழ் கூற
மைந்து மயிலுடன் ஆடி வரவேணும்
தந்ததன தனதான தந்ததன தனதான
தந்ததன தனதான தனதான
அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர்மன மகிழ்மீற வருளாலே
அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனு முமையாளு மகிழ்வாக
மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு
மஞ்சினனு மயனாரு மெதிர்காண
மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற
மைந்துமயி லுடனாடி வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள
புந்திநிறை யறிவாள வுயர்தோளா
பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு வடிவேலா
தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
தண்டமிழின் மிகுநேய முருகேசா
சந்தமு மடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தணில்மேவு பெருமாளே.
பதம் பிரித்து உரை
மரகத மயில்
மரகத மயில்
சிறுவையில் வாழும் பெருமான்
சுருக்க உரை
ஒப்புக

தேவர்கள் பொன்னுலகுக்குக் குடி போகவும் , அசுரர்கள் அழியவும், காளியுடன் சங்கரன் மகிழவும், விநாயகனும், உமையாளும் மகிழவும், உலகில் உள்ளோரும், முனிவர்களும், இந்திரனும் நின்று காணவும் இலக்குமியும் திருமாலும், இன்பமுறவும் மயில் மீது ஏறி ஆடி என் முன்னே வரவேண்டும்.
தாமரை போன்ற கண்களை உடையவனே. தேவசேனையின் கணவனே. ஞானம் நிறைந்தவனே, வடிவேலா. ஏழு மலைகளும் பிளக்கவும், கிரௌஞ்சத்தின் வலிமையை அழித்தவனே, அடியார்கள் மனத்தில் எப்போதும் வீற்றிருக்கும் பெருமாளே, சிறுவையில் வாழும் பெருமாளே. மயிலுடன் ஆடி வரவேண்டும்.
விளக்கக் குறிப்பகள்
மஞ்சினனும் அயனாரும் எதிர்காண... மஞ்சிளனம் - இந்திரன்.

1. புண்டரிக விழியாள...
முண்டக மலர்ந்தன்ன கண்ணனும் - கந்த புராணம்.
2. தண்டரள மணிமார்ப செம்பொனெழில்......
பரவி யுனதுபொற் கரமு முகமுமுத்
தணியு முரமுமெய்ப் ப்ரபையு மருமலர்ப் --- திருப்புகழ், பரவியுது
3. எழில் செறிரூப....
..அந்தம் வெகு வான ரூபக்கார எழிலான --- திருப்புகழ், முந்துதமிழ்மாலை
முத்தமிழ் வித்வதி நோதா கீதா
மற்றவ ரொப்பில ரூபா தீபா.. --- திருப்புகழ், மைக்குழலொத்த
4. தமிழின் நேய....
தமிழ்க்கு நல்ல தண்டமிழ் முருகன் --- திருவாலவா, திருவிளை.