229.மனமெ னும்பொருள்
229
சிவபுரம்
(குடந்தைக்கு அருகில் உள்ளது)
மயிலின் மீது கால் வைத்து நின்ற திருக்கோலத்தில் உற்சவ விக்ரகம்
தனன தந்தன தானன தானன
தனன தந்தன தானன தானன
தனன தந்தன தானன தானன தனதான
மனமெ னும்பொருள் வானறை கால்கனல்
புனலு டன்புவி கூடிய தோருடல்
வடிவு கொண்டதி லேபதி மூணெழு வகையாலே
வருசு கந்துய ராசையி லேயுழல்
மதியை வென்றுப ராபர ஞானநல்
வழிபெ றும்படி நாயடி யேனைநி னருள்சேராய்
செனனி சங்கரி ஆரணி நாரணி
விமலி யெண்குண பூரணி காரணி
சிவைப ரம்பரை யாகிய பார்வதி அருள்பாலா
சிறைபு குஞ்சுரர் மாதவர் மேல்பெற
அசுரர் தங்கிளை யானது வேரற
சிவனு கந்தருள் கூர்தரு வேல்விடு முருகோனே
கனக னங்கையி னாலறை தூணிடை
மனித சிங்கம தாய்வரை பார்திசை
கடல்க லங்கிட வேபொரு தேயுகிர் முனையாலே
கதற வென்றுடல் கீணவ ராருயி
ருதிர முஞ்சித றாதமு தாயுணு
கமல வுந்திய னாகிய மால்திரு மருகோனே
தினக ரன்சிலை வேளருள் மாதவர்
சுரர்க ளிந்திர னாருர காதிபர்
திசைமு கன்செழு மாமறை யோர்புக ழழகோனே
திரும டந்தையர் நாலிரு வோர்நிறை
அகமொ டம்பொனி னாலய நீடிய
சிவபு ரந்தனில் வாழ்குரு நாயக பெருமாளே.
பதம் பிரித்து உரை
சுருக்க உரை
விரிவுரை குகஸ்ரீ ரசபதி
ஓப்புக

மனம் என்னும் பொருளுடன், ஐம்பூதங்களையும் சேர்த்து, உடல் என்னும் உருவத்தைக் கொண்டு, அதில் 91 தத்துவக் கூட்டங்களின் கூறுபாடுகளால் ஏற்படும் இன்பம், துன்பம், ஆசை என்னும் இவற்றில் அலைச்சல் உறுகின்ற என் புத்தியை வென்று அடக்கி, மிக மேலான ஞானம் எனும் நன்னெறியைப் பெறும்படியாக, நாயடியேனுக்கு உன் திருவருளைத் தருவாயாக.
ஜனனி, சங்கரி, ஆரணி, விமலி, சிவை, எல்லாவற்றுக்கும் காரணமானவளாகிய பார்வதி அருளிய குழந்தையே, சிறையில் அடைபட்டத் தேவர்களும், முனிவர்களும், சுகம் பெறவும், அசுரர்கள் அழியவும் சிவபெருமான் மகிழ்ந்து உனக்கு அருளிய வேலைச் செலுத்தியவனே, இரணியன் தூணை அறைந்து நாராயாணனைக் காட்டுக என்று கேட்க, அந்தத் தூணிலிருந்து நரசிங்கமாக வெளி வந்த திருமாலின் அழகிய மருகனே, சூரியன், வேள், முனிவர்கள், தேவர்கள், இந்திரர்கள், பிரமன், மறையோர் யாவரும் போற்றும் அழகனே. அஷ்ட இலக்குமிகள் நிறைந்து விளங்கும் வீடுகளும், பொன்னால் ஆன கோயில்களும் விளங்கும் சிவபுரம் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே, ஞான நல் வழியை நான் அடையுமாறு அடியேனுக்கு அருள் புரிக.

1. பதி மூணு ஏழு வகையாலே...
அறையு மறையெனஅ ருந்தத்து வங்களென
அணுவி லணுவெனநி றைந்திட்டு நின்றதொரு சம்ப்ரதாயம்
... திருப்புகழ், அதலவிதல
2. எண் குண பூரணி....
தன் வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வினனாதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை.
கோளில் பொறியில் குணமிலவே எண் குணத்தான்
தாளை வணங்காத் தலை).......................................................... திருக்குறள் .
3. சிவன் உகந்து அருள் கூர் வேல்விடு முருகோனே...
எப் படைக்கும் நாயகமாவதொரு தனிச் சுடர் வேல் நல்கியே மதலைகைக் கொடுத்தான்....................................................................... கந்த புராணம்
4. கனக னங்கையி லாறை தூணிடை....
கூடமுறை நீடு செம்பொன் மாமதலை யூடெழுந்த
கோபவரி நார சிங்கன் மருகோனே....................... திருப்புகழ், நீலமயில்.
5. அகமொ டம்பொனி னாலய...
நகர் மதிள் கனம் மருவிய சிவபுரம்........................ . சம்பந்தர் தேவாரம்.
விளக்க குறிப்புகள்
தத்துவங்கள் 96. இவற்றுள் சிவ தத்துவம் ஐந்து நீங்க மற்ற 91 தத்துவக் கூட்டங்களால் ஆகிய உடல்.
எட்டு இலக்குமிகள் --- தன லக்ஷ்மி, தானிய லக்ஷ்மி, தைரிய லக்ஷ்மி, வீர லக்ஷ்மி, வித்தியா லக்ஷ்மி, கீர்த்தி லக்ஷ்மி விஜய லக்ஷ்மி, ராஜ்ய லக்ஷ்மி.