227.தோழமை கொண்டு
227
கோடைநகர்
ஸ்ரீபெரும்ப்துரிலிருந்து 10 கி.மீ தூரம். வல்லக்கோட்டை என தற்சமயம் அழைக்கப்படுகிறது.. முருகனின் சிலை 2 மீட்டர் உயரத்தில் சரணாகதி காட்டும் கர அமைப்புடன் இருப்பதை வேறுயெங்கும் காண முடியாதது
தானன தந்தன தந்த தந்தன
தானன தந்தன தந்த தந்தன
தானன தந்தன தந்த தந்தன தனதான
தோழமை கொண்டுச லஞ்செய் குண்டர்கள்
ஓதிய நன்றிம றந்த குண்டர்கள்
சூழ்விர தங்கள்க டிந்த குண்டர்கள் பெரியோரைத்
தூஷண நிந்தைப கர்ந்த குண்டர்கள்
ஈவது கண்டுத கைந்த குண்டர்கள்
சூளுற வென்பதொ ழிந்த குண்டர்கள் தொலையாமல்
வாழநி னைந்துவ ருந்து குண்டர்கள்
நீதிய றங்கள்சி தைந்த குண்டர்கள்
மானவ கந்தைமி குந்த குண்டர்கள் வலையாலே
மாயையில் நின்றுவ ருந்து குண்டர்கள்
தேவர்கள் சொங்கள்க வர்ந்த குண்டர்கள்
வாதைந மன்றன்வ ருந்தி டுங்குழி விழுவாரே
ஏழும ரங்களும் வன்கு ரங்கெனும்
வாலியு மம்பர மும்ப ரம்பரை
ராவண னுஞ்சது ரங்க லங்கையு மடைவேமுன்
ஈடழி யும்படி சந்த்ர னுஞ்சிவ
சூரிய னுஞ்சுர ரும்ப தம்பெற
ராமச ரந்தொடு புங்க வன்திரு மருகோனே
கோழிசி லம்பந லம்ப யின்றக
லாபந டஞ்செய மஞ்சு தங்கிய
கோபுர மெங்கும்வி ளங்கு மங்கல வயலூரா
கோமள அண்டர்கள் தொண்டர் மண்டலர்
வேலனெ னும்பெய ரன்பு டன்புகழ்
கோடையெ னும்பதி வந்த இந்திரர் பெருமாளே.
பதம் பிரித்தல்
சுருக்க உரை
ஒப்புக

நண்பர்களுக்கு வஞ்சகம் செய்பவர்களும், போதித்த நன்றியை
மறந்தவர்களும், விரதங்களை அனுட்டிக்காதவர்களும், பெரியோரை இகழ்ந்து பேசுபவர்களும், பிறருக்கு ஈகை செய்வதைத் தடுப்பவர்களும்,உண்மையைப் பேசாதவர்களும், நீதியும் தருமமும் இல்லாதவர்களும், ஆணவம் மிக்கவர்களும், கடவுளர்களது சொத்தை அபகரிப்பவர்களும், கீழ் மக்கள் ஆவர். இவர்கள் யாவரும் யமனுடைய நரகக் குழியில் விழுவார்கள்.
மராமரம் ஏழும், வலிமை மிக்க குரங்காகிய வாலியும், கடலும்,
இராவணனும் அவனுடைய நான்கு படைகளும், இலங்கையும், வலிமை குன்றி அழியும்படியும், தேவர்களும், சூரிய சந்திரர்களும் தத்தம் பதவியில் நிலை பெறவும் ஒப்பற்ற அம்பைச் செலுத்திய இராமனின் மருகனே, கோழி ஒலி செய்ய, மயில் நடமிட, உயர்ந்த கோபுரங்கள் மிகுந்த வயலூரில் வாழ்பவனே,தேவர்களும், மண்டலாதிபதிகளும் உன்னை வேலன் என்று போற்றுகின்ற கோடை நகரில் வீற்றிருக்கும் பெருமாளே, கீழோர்கள் நரகுக்குச் செல்லுவார்கள் என்பதை நான் உணர்வேனாக.

1 நரகில் விழவோர்கள் அட்டவணையை மற்றத் திருப்புகழ்ப் பாடல்களிலும் காணலாம்.
மாதர்வச,இரதமான, காதிமோதி, ஓதுவித்தவர்.
2. ஏழு மரங்களும் ....
மராமரங்கள் .. இவை கிட்கிந்தைக்கு அருகில் இருந்த ஏழு ஆச்சா மரங்கள். இவற்றை
இராமர் ஒரு பாணத்தால் பிளந்தார்.
வடிவுடைய மானு மிகல்கர னுந்திக
ழெழுவகைம ராம ரமுநிக ரொன்றுமில்
வலியதிறல் வாலி யுரமுநெ டுங்க லவையேழும்.............திருப்புகழ், விடமும்வடி.