226.ஞால மெங்கும்
226
கோடைநகர்
வல்லக்கோட்டை என தற்சமயம் அழைக்கப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூரிலிருந்து 10 கி.மீ தூரம். 2 மீட்டர் உயரத்துடன் சரணாகதி காட்டும் கர முருகனின் சிலை அமைப்பு வேறுயெங்கும் காண முடியாதது
தான தந்த தனத்த தத்த தனதான
ஞால மெங்கும் வளைத்த ரற்று கடலாலே
நாளும் வஞ்சி யருற்று ரைக்கும் வசையாலே
ஆல முந்து மதித்த ழற்கும் அழியாதே
ஆறி ரண்டு புயத்த ணைக்க வருவாயே
கோல மொன்று குறத்தி யைத்த ழுவுமார்பா
கோடை யம்பதி யுற்று நிற்கு மயில்வீரா
கால னஞ்ச வரைத்தொ ளைத்த முதல்வானோர்
காலவி லங்கு களைத்த றித்த பெருமாளே.
பதம் பிரித்து உரை
சுருக்க உரை

பூமியன் எல்லா பக்கங்களிலும் வளைந்து ஒலிக்கும் கடலாலும்,
தினந்தோறும் மாதர்கள் சேர்ந்து சொல்லும் வசை மொழியாலும்,விடத்தைச் செலுத்தும் சந்திரனின் நெருப்பாலும், இந்தப் பெண் அழியாமல், இவளை உனது பன்னிரு தோள்களால் அணைக்க வந்தருளுக.
அழகு வாய்ந்த வள்ளியைத் தழுவும் மார்பனே, கோடை நகரில் வீற்றிருக்கும் மயில் வீரா, காலனும் அஞ்சும்படி கிரௌஞ்ச மலையைத் தொளைத்த முதல்வனே, தேவர்களின் கால் விலங்கை உடைத்து எறிந்த பெருமாளே, இப் பெண்ணை அணைக்க வருவாயே.

ஒப்புக
இப்பாடல் அகப் பொருள் துறையைச் சேர்ந்தது.
1. தழற்கும் அழியாதே...
காமம் கொண்டவரை வருத்துவன... கடல் ஒலி, மாதர் வசை, எறி நிலவு முதலியன.
தெருவினில் நடவா மடவார்
திரண்டொ றுக்கும் வசையாலே........ திருப்புகழ்,தெருவினில்
துள்ளுமத வேள்கைக் கணையாலே
தொல்லை நெடு நீலக் கடலாலே...... திருப்புகழ், துள்ளுமத
2. கால்விலங்கு களைத்த றித்த பெருமாளே....
அரியரி பிரமாதியர் கால் விலங்க விழ்க்கும் பெருமாளே
...திருப்புகழ், தெருவினில்