222.தரையினில்
222
கூந்தலூர்
(பூந்தோட்டம், திருவீழிமலை அருகில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து 16 கி.மீ தொலைவில். சூரசம்காரத்திற்கு முன்பே மயில் வாகனாமாக இருந்தது இத்தலத்தில் அறியலாம்)
தனதன தனதன தாந்த தானன
தனதன தனதன தாந்த தானன
தனதன தனதன தாந்த தானன தனதான
தரையினில் வெகுவிழி சார்ந்த மூடனை
வெறியனை நிறைபொறை வேண்டி டாமத
சடலனை மகிமைகள் தாழ்ந்த வீணனை மிகுகேள்வி
தவநெறி தனைவிடு தாண்டு காலியை
யவமதி யதனில்பொ லாங்கு தீமைசெய்
சமடனை வலியா சாங்க மாகிய தமியேனை
விரைசெறி குழலியர் வீம்பு நாரியர்
மதிமுக வனிதையர் வாஞ்சை மோகியர்
விழிவலை மகரொ டாங்கு கூடிய வினையேனை
வெகுமல ரதுகொடு வேண்டி யாகிலு
மொருமல ரிலைகொடு மோர்ந்து யானுனை
விதமுறு பரிவொடு வீழ்ந்து தாடொழ அருள்வாயே
ஒருபது சிரமிசை போந்த ராவண
னிருபது புயமுட னேந்து மேதியு
மொருகணை தனிலற வாங்கு மாயவன் மருகோனே
உனதடி யவர்புக ழாய்ந்த நூலின
ரமரர்கள் முனிவர்க ளிந்த பாலகர்
உயர்கதி பெறஅரு ளோங்கு மாமயி லுறைவோனே
குரைகழல் பணிவொடு கூம்பி டார்பொரு
களமிசை யறமது தீர்ந்த சூரர்கள்
குலமுழு தனைவரு மாய்ந்து தூளெழு முனிவோனே
கொடுவிட மதுதனை வாங்கி யேதிரு
மிடறினி லிருவென ஏந்து மீசுரர்
குருபர னெனவரு கூந்த லூருறை பெருமாளே
222 - கூந்தலுர்
...சம்பந்தர் தேவாரம்.

சுருக்க உரை
தீய ஒழுக்கம் கொண்ட மூடனாகிய என்னை, குடி வெறி பிடித்தனை,
நிறையும் பொறையும் அற்ற மதங் கொண்ட அறிவிலியை, ஒரு விதப்
பெருமையும் இல்லாத பயனற்றவனை, தாழ் நிலையில் இருக்கும் வீணனை, தவநெறிகளை விட்டி விலகித் திரிபவனை, பிறருக்குக் கோடும் தீமையும் செய்யும் கதிற்றவனை, விலைமாதர்களுடன் கூடுவதைத் தொழிலாகக் கொண்டவனை, உன்னைத் தியானித்து ஒரு பூவோ இலையோ கொண்டு உன் திருவடியில் விழுந்து தொழுமாறு செய்ய அருள் புரிவாயாக.
இராவணனுடைய பத்து தலைகளையும், இருபது தோள்களையும் ஒரே அம்பால் அற்று விழும்படி செலுத்திய திருமாலின் மருகனே, உன்
அடியார்களுடைய ஆய்ந்து கற்றோர்களும், தேவர்களும்,முனிவர்களும் நற் கதியைப் பெற அருள் விங்கும் மயிலில் வீற்றிருப்பவனே, சூரர்கள் குலத்தைப் பொடியாக்கியவனே, பொல்லாத விடத்தை ஏற்று, அதைக் கண்டத்தில் நிறுத்திய சிவபெருமானுக்குக் குருவாக வந்தவனே, கூந்தலு\ரில் உறையும்பெருமாளே, உன் தாள்களைத் தொழ அருள் புரிவாயாக.

ஒப்புக
1. ஒரு கணை தனில் அற வாங்கு மாயவன்....
தனி யொரம் பைத்தொட் டுச்சுரர் விக்னங் களைவோனும்
...திருப்புகழ், கனகதம்பத்து
2. கொடுவிட மதுதனை வாங்கியே திரு...
கனத்து ஆர் திரை மாண்டு அழல் கான்ற நஞ்சை
என் அத்தா என வாங்கி அது உண்ட கண்டன். .. சம்பந்தர் தேவாரம்
நஞ்சைக் கண்டத்து அடக்குமதவும் நன்மைப் பொருள் போலும்