221.செனித்திடும் சலம்
221
கும்பகோணம்
சிவ யோகமும் ஞானமும் அருள்வாயே
தனத்த தந்தன தானன தானன
தனத்த தந்தன தானன தானன
தனத்த தந்தன தானன தானன தனதான
செனித்த டுஞ்சல சாழலு மூழலும்
விளைத்தி டுங்குடல் பீறியு மீறிய
செருக்கொ டுஞ்சதை பீளையு மீளையு முடலூடே
தெளித்தி டம்பல சாதியும் வாதியும்
இரைத்தி டுங்குல மேசில கால்படர்
சினத்தி டும்பவ நோயென வேயிதை யனைவோருங்
கனைத்தி டுங்கலி காலமி தோவென
வெடுத்தி டுஞ்சுடு காடுபு காவென
கவிழ்த்தி டுஞ்சட மோபொடி யாய்விடு முடல்பேணிக்
கடுக்க னுஞ்சில பூடண மாடைகள்
இருக்கி டுங்கலை யேபல வாசைகள்
கழித்தி டுஞ்சிவ யோகமு ஞானமு மருள்வாயே
தனத்த னந்தன தானன தானன
திமித்தி திந்திமி தீதக தோதக
தகுத்து துந்துமி தாரைவி ராணமொ டடல்பேரி
சமர்த்த மொன்றிய தானவர் சேனையை
வளைத்து வெஞ்சின வேல்விடு சேவக
சமத்து ணர்ந்திடு மாதவர் பாலருள் புரிவோனே
தினைப்பு னந்தனி லேமய லாலொரு
மயிற்ப தந்தனி லேசர ணானென
திருப்பு யந்தரு மோகன மானினை யணைவோனே
சிவக்கொ ழுஞ்சுட ரேபர னாகிய
தவத்தில் வந்தருள் பாலக்ரு பாகர
திருக்கு டந்தையில் வாழ்முரு காசுரர் பெருமாளே.

சுருக்க உரை
பிறப்பு என்னும் பொய்ம்மையோடு கூடிய கூத்துக்கள் என்ன. ஆபாசம் என்ன? பிறப்பில் ஏற்படும் குடலைக் கிழித்து மேலெழும் ஆணவம் என்ன? சதை, பீளை, ஈளை இவைகள் என்ன? சாதிகள் எத்தனை? அதைக் குறித்து வாதிப்பவர் எத்தனை. கூச்சலிட்டுப் பேசும் குலத்தவர் என்ன? பிறப்பு ஒரு நோய் என்று கூறுவாரும்,இறந்தபின் உடனே சுடுகாட்டுக்கு எடுங்கள் என்று கூறுவாரும்,சுடுகாட்டில் எரிக்கப்பட்ட பின் சாம்பலாகும் இவ்வுடலை ஆடை,ஆபரணங்களுடன் பேணுவது என்ன/ வேத சாத்திர நூல்களைக் கற்பது என்ன? மூவாசைகளை விரும்புவது என்ன? இத்தகைய நிலையில்லாத மாயைகளை அழிக்க வல்ல சிவ யோகத்தையும்,சிவஞானத்தையும் எனக்கு அருள் புரிவாயாக.
பேரொலியோடு பல விதமான பறைகள் முழங்க போருக்கு வந்த அசுரர்கள் அழிய வேலைச் செலுத்தியவனே, உன் திறமையை உணர்ந்த முனிவர்களுக்கு அருள் பாலிப்பவனே, தினைப்புனத்தில் காம ஆசையால் வள்ளியின் பாதத்தில் நான் அடைக்கலம் என்று கூறி அவளை அணிபவனே, சிவனிடமிருந்து தோன்றி,தவத்தோருக்கு அருள் செய்யும் குழந்தையே, கும்பகோணத்தில் வாழும் தேவர்கள் பெருமாளே.

விளக்கக் குறிப்புகள்
சாழல் = மகளிர் விளையாட்டு. கேள்வியும், கேள்விக்கேற்ற பதிலும் சொல்லி
பாடக்கூடிய ஆட்டம்
ஒப்புக
மயலால் ஒரு மயில் பதத்தினில்....
பணியா என வள்ளி பாதம் பணியும தணியா
அதி மோக தயாபரனே... கந்தர் அனுபூதி .
சாழல் = மகளிர் விளையாட்டு. கேள்வியும், கேள்விக்கேற்ற பதிலும் சொல்லி
பாடக்கூடிய ஆட்டம்
ஒப்புக
மயலால் ஒரு மயில் பதத்தினில்....
பணியா என வள்ளி பாதம் பணியும தணியா
அதி மோக தயாபரனே... கந்தர் அனுபூதி .