220.கறுத்த குஞ்சியும்
220
கும்பகோணம்
திருவடி தனை என்று உற்றிடுவேனோ
கறுத்த குஞ்சியும் வெளிறியெ ழுங்கொத்
துருத்த வெண்பலு மடையவி ழுந்துட்
கருத்து டன்திகழ் மதியும ருண்டுச் சுருள்நோயாற்
கலக்க முண்டல மலமுற வெண்டிப்
பழுத்தெ ழும்பிய முதுகுமு டங்கக்
கழுத்தில் வந்திளை யிரும லொதுங்கக் கொழுமேனி
அறத்தி ரங்கியொர் தடிகைந டுங்கப்
பிடித்தி டும்புறு மனைவியு நிந்தித்
தடுத்த மைந்தரும் வகள் விளம்பச் சடமாகி
அழுக்க டைந்திடர் படுமுடல் பங்கப்
பிறப்பெ னுங்கட லழியலொ ழிந்திட்
டடுத்தி ருந்திரு வடிதனை யென்றுற் றிடுவேனோ
புறத்த லம்பொடி படமிக வுங்கட்
டறப்பெ ருங்கடல் வயிறுகு ழம்பப்
புகட்ட ரங்கிய விரகது ரங்கத் திறல்வீரா
பொருப்பு ரம்படர் கிழிபட வென்றட்
டரக்கர் வன்றலை நெரியநெ ருங்கிப்
புதைக்கு றுந்தசை குருதிகள் பொங்கப்பொரும்வேலா
சிறுத்த தண்டைய மதலையொ ரஞ்சச்
சினத்து மிஞ்சரி திரிதரு குன்றத்
தினைப்பு னந்திகழ் குறமகள் கொங்கைக் கிரிமேவிச்
செருக்கு நெஞ்சுடை முருகசி கண்டிப்
பரிச்சு மந்திடு குமரக டம்பத்
திருக்கு டந்தையி லுறைதரு கந்தப் பெருமாளே

சுருக்க உரை
மயிர் வெளுத்து, பற்கள் விழுந்து, மதி மருண்டு, நோய்கள் மிகுந்து,
இவ்வாழ்க்கை போதும் என்ற மன நிலை வர, முதுகு வளைந்து,மேனி சுருங்கி, மனைவி நிந்திக்க, பிள்ளைகள் வசை மொழிகள் பேச, வேதனைப்படும் உடல் பிறப்பு என்னும் கடலில் அழிந்து போவது ஒழிய, உனது திருவடிகளைச் சரணம் புகுந்து என்று நான் பொருந்தி இருப்பேனோ ?
அசுரர்களை அழித்து , கடலை அவர்கள் மீது புகவிட்ட வலிமை வாய்ந்த வீரனே, கிரௌஞ்ச மலை அழியும்படி அதைப் பிளவு செய்து, அசுரர்களின் சதை, இரத்தம் இவைகள் மேல் எழ, போர் செய்த வேலனே, வள்ளி மலையில் தினைப் புனம் காத்த வள்ளியின் தனங்களை விரும்பியவனே குடந்தையில் வீற்றிருக்கும் பெருமாளே, உன் திருவடிதனை என்று உற்றிடுவேனோ?

விளக்கக் குறிப்புகள்
வெண்டி = நீர் வற்றி. இடும்பு = அவமதிப்பு. புகட் டரங்கிய = புகவிட்டு அரங்கிய. அரங்கிய = அரக்கிய.
ஒப்புக
மனைவியும் நிந்தித்து......
..மனையவள் மனம் வேறாய்
....மாதர் சீயெனா வாலர் சீயெனா...................................... திருப்புகழ், அறுகுநுனி
ஏலவார் குழலினார் இகழ்ந்துரைப்பதன் முனம்............................சம்பந்தர் தேவாரம்