219.வேழம் உண்ட
219
காசி
தான தந்த தனாதன தனதான
வேழ முண்ட விளாகனி யதுபோல
மேனி கொண்டு வியாபக மயலூறி
நாளு மிண்டர் கள்போல்மிக அயர்வாகி
நானு நைந்து விடாதருள் புரிவாயே
மாள அன்று மணீசர்கள் கழுவேற
வாதில் வென்ற சிகாமணி மயில்வீரா
காள கண்ட னுமாபதி தருபாலா
காசி கங்கை யில்மேவிய பெருமாளே
- 219 காசி
219
காசி
தான தந்த தனாதன தனதான
வேழ முண்ட விளாகனி யதுபோல
மேனி கொண்டு வியாபக மயலூறி
நாளு மிண்டர் கள்போல்மிக அயர்வாகி
நானு நைந்து விடாதருள் புரிவாயே
மாள அன்று மணீசர்கள் கழுவேற
வாதில் வென்ற சிகாமணி மயில்வீரா
காள கண்ட னுமாபதி தருபாலா
காசி கங்கை யில்மேவிய பெருமாளே
- 219 காசி
சுருக்க உரை
வேழம் என்னும் நோய் போன்று உள்ளிருக்கும் சத்து அற்ற விழாம் பழம் போன்ற மேனியை அடைந்து காமப் பற்று உடலெங்கும் பரவி,நாள் தோறும் அறிவின்மையால் திண்மை கொண்ட மூடர்கள் போன்று, உடல் தளர்ந்து, நானும் மெலிந்து வாட்டமுறாத வண்ணம் அருள் புரிவாயாக.
சமணக் குருக்கள் கழுவில் ஏறி மாள, அவர்களை வாதத்தில் வென்ற சிகாமணியே, மயில் வீரனே. விடம் உண்ட கண்டனும், உமா தேவியின் பதியாகிய சிவ பெருமான் பெற்ற பிள்ளையே, காசியில் வீற்றிருக்கும் பெருமாளே, நான் காம நோயால் மெலிந்து வாட்டமுறாமல் அருள் புரிவாயாக.

வேழம் என்னும் நோய் பரவிய விளாம்பழத்தில், உள்ளிருக்கும் பழம் நீங்கி, ஓடு மட்டும் மிஞ்சுமோ, அதுபோல என் உடம்பில் காம இச்சை காரணமாக, நாள்தோறும் உடல்தளர்ச்சி மேலோங்குகிறது. மூடர்களைப் போல உடல் பலவீனத்தை அடியேனும் அடைந்து விடாதபடி அருள்புரிவாயாக.
விளக்கம்: அவல் உடலுக்கு சத்துள்ள ஆகாரம். நெல்லைக் குத்தினால் தரமான அவல் கிடைக்கும். இதுபோல், மனதுக்கு சத்துள்ள ஆகாரம் ஒன்று இருக்கிறது. அதுதான் "பக்தி' என்னும் அவல். அதிலும் முருகபக்தி என்னும் அவல் கிடைத்து விட்டால் அது சம்பா அவல் சாப்பிட்டது போல இன்னும் பிரமாதமாக இருக்கும். நாம் வயிற்றுக்கான சாப்பாட்டு விஷயத்தில் நிறைய வகைகளை கண்டுபிடிக்கிறோம். மனதுக்கான சாப்பாட்டுக்கும் "மெனு' கண்டுபிடிக்க வேண்டும். நல்ல மனம், நல்ல பேச்சு, நல்ல எண்ணங்கள் ஆகிய "மெனு' மனதுக்குரியதாக உள்ளன. இவற்றை சாப்பிட வேண்டுமானால், நம் பக்திச்செம்மல்கள் நமக்காக விட்டுச்சென்றிருக்கும் புராணங்களையும், அறநூல்களையும் படிக்க வேண்டும். செய்வோமா!

சமணர்களுடன் திருஞானசம்பந்தர் வாது செய்து அதில் வெற்றி பெற்றார். அதனால் சமணர்கள் தாங்கள் முன்னமே நியமித்துக் கொண்டபடி கழுவேறித் தங்களை மாய்த்துக் கொண்டனர், இதனை "அங்கத்தைப் பாவை செய் தேயுயர் சங்கத்திற் றேர்தமி ழோதிட அண்டிக்கிட் டார்கழு வேறினர் ஒருகோடி பந்தப்பொற் பாரப யோதர “– (பந்தப்பொற் பாரப யோதர அவிநாசி பாடல் என்று அருணகிரிநாதர் சுவாமிகள் பாடியுள்ளார், இவ்வாறு சமணர்கள் கழுவேறிய இடம் "கழுவர்படைவீடு" என்று அழைக்கப்பட்டது, இப்பொழுது "கழுகேர்கடை" என்று அழைக்கப்படுகிறது, இவ்வூர் திருப்பூவணத்திற்கு அருகே உள்ளது, இவ்வூர் திருவிளையாடற் புராணத்திலும், திருப்புகழிலும் திருப்பூவணத்துடன் இணைத்தே பாடப்பெற்றுள்ளது. திருப்பூவணத்தில் 10நாள் திருவிழாவில் கழுவேறுதல் 6ஆம்நாள் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது