218. தாரணிக்கதி
218
காசி
தான தத்தன தான தானன
தான தத்தன தான தானன
தான தத்தன தான தானன தனதான
தார ணிக்கதி பாவி யாய்வெகு
சூது மெத்திய மூட னாய்மன
சாத னைக்கள வாணி யாயிறு மதிமோக
தாப மிக்குள வீண னாய்பொரு
வேல்வி ழிச்சிய ராகு மாதர்கள்
தாமு யச்செயு மேது தேடிய நினைவாகிப்
பூர ணச்சிவ ஞான காவிய
மோது தற்புணர் வான நேயர்கள்
பூசு மெய்த்திரு நீறி டாஇரு வினையேனைப்
பூசி மெய்ப்பத மான சேவடி
காண வைத்தருள் ஞான மாகிய
போத கத்தினை யேயு மாறருள் புரிவாயே
வார ணத்தினை யேக ராவுமு
னேவ ளைத்திடு போது மேவிய
மாய வற்கித மாக வீறிய மருகோனே
வாழு முப்புற வீற தானது
நீறெ ழப்புகை யாக வேசெய்த
மாம திப்பிறை வேணி யாரருள் புதல்வோனே
கார ணக்குறி யான நீதிய
ரான வர்க்குமு னாக வேநெறி
காவி யச்சிவ நூலை யோதிய கதிர்வேலா
கான கக்குற மாதை மேவிய
ஞான சொற்கும ராப ராபர
காசி யிற்பிர தாப மாயுறை பெருமாளே.
218
காசி
தான தத்தன தான தானன
தான தத்தன தான தானன
தான தத்தன தான தானன தனதான
தார ணிக்கதி பாவி யாய்வெகு
சூது மெத்திய மூட னாய்மன
சாத னைக்கள வாணி யாயிறு மதிமோக
தாப மிக்குள வீண னாய்பொரு
வேல்வி ழிச்சிய ராகு மாதர்கள்
தாமு யச்செயு மேது தேடிய நினைவாகிப்
பூர ணச்சிவ ஞான காவிய
மோது தற்புணர் வான நேயர்கள்
பூசு மெய்த்திரு நீறி டாஇரு வினையேனைப்
பூசி மெய்ப்பத மான சேவடி
காண வைத்தருள் ஞான மாகிய
போத கத்தினை யேயு மாறருள் புரிவாயே
வார ணத்தினை யேக ராவுமு
னேவ ளைத்திடு போது மேவிய
மாய வற்கித மாக வீறிய மருகோனே
வாழு முப்புற வீற தானது
நீறெ ழப்புகை யாக வேசெய்த
மாம திப்பிறை வேணி யாரருள் புதல்வோனே
கார ணக்குறி யான நீதிய
ரான வர்க்குமு னாக வேநெறி
காவி யச்சிவ நூலை யோதிய கதிர்வேலா
கான கக்குற மாதை மேவிய
ஞான சொற்கும ராப ராபர
காசி யிற்பிர தாப மாயுறை பெருமாளே.
சுருக்க உரை
பூமியில் பெரிய பாபம் செய்பவனாக, வஞ்சனைகளில் மிக்கவனாக, மூடனாக, தீய எண்ணங்கள் உடையவனாக,காமமும், தாபமும் நிறைந்தவனாக, கூரிய கண்களை உடைய விலை மாதர்களையே நினைக்கும் இழி குணம் உடையவனாக இருக்கும் என்னை, சிவ ஞானத்தில் மிக்க அடியார்களிடம் சேர்த்து, திரு நீற்றை அணியும்படி செய்து, சிவ ஞான தத்துவங்களை உபதேசித்து அருள் செய்ய வேண்டுகின்றேன்.
முன்னொரு நாளில் தன் காலைப் பற்றிய கஜேந்திரனை முதலையிடமிருந்து காக்க விரைந்து சென்ற திருமாலின் மருகனே, வலிய முப்புரங்களை எரித்தவனும், பிறைச் சந்திரனைச் சடையில் தரித்தவனுமாகிய சிவ பெருமானின் மகனே, மூல காரணனாகிய சிவபெருமானின் சந்நிதிகளில் தேவாரத்தைச் (சம்பந்தராக வந்து) ஓதிய குமரனே, தயாளனே, காசியில் புகழுடன் வீற்றிருப்பவனே , தீய நெறியில் வாழும் என்னை அடியார்களோடு சேர்த்து ஞான உபதேசம் செய்து அருள வேண்டுகின்றேன்.

விளக்கக் குறிப்புகள்
பூரணச் சிவஞான காவியம் ஓது...
தேவார திருவாசக நூல்களைக் குறிக்கும்.
ஒப்புக
1. வாரணத்தினை யேக ராவுமு...
திவைத்தக ராம லைந்திடு களிறுக்கரு ளேபுரிந்திட ...திருப்புகழ்,பகர்தற்கரி
ஆனைமடு வாயிலன்று மூலமென வோல மென்ற .....திருப்புகழ்,சாலநெடு
கடகரி அஞ்சி நடுங்கி................................. திருப்புகழ், சருவியிகழ்ந்து
வரலாறு பாடல் 225 விள்க்கத்தில் பார்க்கவும்
2, வாழுமுப்புர வீற தானது...
அரிய திரிபுர மெரிய விழித்தவன்………………………….... திருப்புகழ், குருவியெனப்பல.