Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    217.மதியால்
    217
    கருவூர்


    தனதானத் தனதான தனதானத் தனதான


    மதியால்வித் தகனாகி மனதாலுத் தமனாகிப்
    பதிவாகிச் சிவஞான பரயோகத் தருள்வாயே
    நிதியேநித் தியமேயென் நினைவேநற் பொருளாயோய்
    கதியேசொற் பரவேளே கருவூரிற் பெருமாளே




    பதம் பிரித்து உரை


    மதியால் வித்தகனாகி மனதால் உத்தமனாகி
    பதிவாகி சிவ ஞான பர யோகத்து அருள்வாயே


    மதியால் = என் புத்தியைக் கொண்டுவித்தகனாகி = (நான்) ஒரு பேரறிவாளா னாகாகிமனதால் = எம் மனம் நன்னெறி யையே பற்றஉத்தமனாகி = நான் ஒரு உத்தம குணம் படைத்த மேலோனாகி.


    சிவ ஞான பதிவாகி = சிவ ஞானத்தில் என் மனம் ஊன்றுவதாகி பர யோகத்து = மேலான வாழ்க்கையை. அருள்வாயே = நான் பற்றும்படி அருள் புரிவாயாக.


    நிதியே நித்தியமே என் நினைவே நல் பொருள் ஆயோய்
    கதியே சொல் பர வேளே கரிவூரில் பெருமாளே.




    நிதியே = என் செல்வமே நித்தியமே =அழிவில்லாப் பொருளே என் நினைவே = என் தியானப் பொருளே நல் பொருள் ஆயோய் =சிறந்த பேரின்பப் பொருள் ஆனவனே.


    கதியே = என் புகலிடமே சொல் =எல்லோராலும் புகழப்படும் பர வேளே =மேலான செவ்வேளே கருவூரில் பெருமாளே =கருவூர்த் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.






    விளக்கக் குறிப்புகள்


    நிதியே...


    நிதி ஒப்பானை நிதியில் கிழவனை...
    கதி ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே.. . திருநாவுக்கரசர் தேவாரதம்.

    நிதியினைப் பவளத் தூணை
    நெறியினால் நினைய வல்லார்
    கதியினைக் கஞ்சன் மாளக்
    கண்டுமுன் அண்டமாளும்).................. திருமங்கை ஆழ்வார்,திருகுறுத்தாண்டகம்


    கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.......... .கந்தர் அநுபூதி .
    Last edited by soundararajan50; 21-01-18, 07:11.
Working...
X