216.நித்தப் பிணிகொடு
216
கருவூர்
தத்தத் தனதன தானன தானன
தத்தத் தனதன தானன தானன
தத்தத் தனதன தானன தானன தனதான
நித்தப் பிணிகொடு மேவிய காயமி
தப்புப் பிருதிவி வாயுவு தேயுவு
நிற்பொற் ககனமொ டாமிவை பூதக லவைமேவி
நிற்கப் படுமுல காளவு மாகரி
டத்தைக் கொளவுமெ நாடிடு மோடிடு
நெட்டுப் பணிகலை பூணிடு நானெனு மடவாண்மை
எத்தித் திரியுமி தேதுபொ யாதென
வுற்றுத் தெளிவுண ராதுமெய் ஞானமொ
டிச்சைப் படஅறி யாதுபொய் மாயையி லுழல்வேனை
எத்திற் கொடுநின தாரடி யாரொடு
முய்த்திட் டுனதரு ளாலுயர் ஞானமு
திட்டுத் திருவடி யாமுயர் வாழ்வுற இனிதாள்வாய்
தத்தத் தனதன தானன தானன
தித்தித் திமிதிமி தீதக தோதக
டத்தக் குடகுகு தாகுட தீகுட வெனபேரிச்
சத்தத் தொலிதிகை தாவிட வானவர்
திக்குக் கெடவரு சூரர்கள் தூள்பட
சர்பப்ச் சதமுடி நாணிட வேலதை யெறிவோனே
வெற்றிப் பொடியணி மேனியர் கோகுல
சத்திக் கிடமருள் தாதகி வேணியர்
வெற்புப் புரமது நீறெழ காணிய ரருள்பாலா
வெற்புத் தடமுலை யாள்வளி நாயகி
சித்தத் தமர்கும ராஎமை யாள்கொள
வெற்றிப் புகழ்கரு வூர்தனில் மேவிய பெருமாளே.
- 216 கருவூர்

சுருக்க உரை
நோய்கள் கூடிய, ஐம்பூதங்களின் சேர்க்கையால் ஆகிய இவ்வுடல்
நிலையானது அல்ல. இருப்பினும், இந்த உலகமெல்லாம் ஆள வேண்டும், விண்ணுலகத்தையும் வெல்ல வேண்டும் என்று ஆசை பூண்டு, அதன் பொருட்டு அங்குமிங்கும் ஓடியும்,ஆடியும், செருக்குடன் ஆடை அணி கலன்களை அணிந்தும்,நான் என்னும் அகங்காரத்துடன் வஞ்சித்துத் திரியும் நான், இது பொய்யானதல்ல என்னும் உண்மையைத் திடமாக உணராமல்,மெய்ஞ்ஞானத்தை விரும்பாமல், பொய்யான மாயையிலேயே அலைச்சல் உறுகின்றேன். என்னைத் தந்திரமாக ஆட்கொண்டு,உன்னுடைய அடியார்களோடு சேர்த்து, திருவருள் ஞான அமுதைத் தந்து, உன் திருவடியாகிய மேலான நிலையைத் தந்து அருளுக.
பேரொலி முழங்க, முரசுகள் ஒலிக்க, தேவர் உலகம் கலங்கிட,சூரர்கள் தூள் ஆக, ஆதிசேடனின் பணா முடிகள் நடுங்க,வேலைச் செலுத்தியவனே, திருநீற்றை அணிந்தவரும்,திருமாலுக்குத் தன் இட பாகத்தைத் தந்தவரும், திரிபுரங்களைச் சிரித்து அழித்தவரும் ஆகிய சிவபெருமான் அருளிய குழந்தையே, பெரிய கொங்கைகளை உடைய குறப் பெண்ணின் உள்ளத்தில் உறையும் குமரனே, கருவூரில் வீற்றிருக்கும் பெருமாளே. எனக்கு உயர் வாழ்வு தந்து அருள வேண்டும்.

ஒப்புக
1. அப்பு பிருதிவி வாயு...
ஐம்பெருமா பூதங்களா ஒருவீர் வேண்டிற்று
ஒருவீர் வேண்டீர் ஈண்டு இவ் அவனி எல்லாம்
உம் பரமே உம் வசமே ஆக்க வல்லீர்................. திருநாவுக்கரசர் தேவாரம்
2. நான் எனும் மட ஆண்மை....
நான் நான் இங்கு எனும் அகந்தை எனக்கு ஏன் வைத்தாய்
நல்வினை தீ வினை எனவே நடுவே காட்டி............... தாயுமானவர் பன்மாலை
முக்குணம் அது கெட நானா என வரு
முத்திரை அழிதர…………………………………….….. திருப்புகழ்,எட்டுடனொரு
3. அடியாரோடும் உய்த்திட்டு உனது...
பார்ப்பாயலையோ அடியாரோடு
சேர்ப்பாயலையோ……………………………………….……. திருப்புகழ்,கார்ச்சார்
துரும்பனேன் என்னினும் கைவிடுதல் நீதியோ
தொண்டரோடு கூட்டு கண்டாய்…………………………... தாயுமானவர்,சுகவாரி
ஆடியாமோடும் நின்னோடும் பிரிவின்றி
ஆயிரம் பல்லாண்டு……………… …... பெரியாழ்வார்,திருப்பல்லாண்டு காப்பு.
அப்பன் ஆண்டு கொண்டு அடியாரில் கூட்டிய
அதிசயம் கண்டாமே...................................... திருவாசகம், அதிசயப் பத்து
கெடுதல் இல்லாத் தொண்டரில் கூட்டியவா………….......... கந்தர் அலங்காரம்