Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    215.தசையாகிய
    215
    கருவூர்


    தனனா தனனத் தனனா தனனத்
    தனனா தனனத் தனதான


    தசையா கியகற் றையினால் முடியத்
    தலைகா லளவொப் பனையாயே
    தடுமா றுதல்சற் றொருநா ளுலகிற்
    றவிரா வுடலத் தினைநாயேன்
    பசுபா சமும்விட் டறிவா லறியப்
    படுபூ ரணநிட் களமான
    பதியா வனையுற் றநுபூ தியிலப்
    படியே யடைவித் தருள்வாயே
    அசலே சுரர்புத் திரனே குணதிக்
    கருணோ தயமுத் தமிழோனே
    அகிலா கமவித் தகனே துகளற்
    றவர்வாழ் வயலித் திருநாடா
    கசிவா ரிதயத் தமிர்தே மதுபக்
    கமலா லயன்மைத் துனவேளே
    கருணா கரசற் குருவே குடகிற்
    கருவூ ரழகப் பெருமாளே
    .


    - 215 கருவூர்



    பதம் பிரித்து உரை


    தசையாகிய கற்றையினால் முடிய
    தலை கால் அளவு ஒப்பனையாயே


    தசை ஆகிய =மாமிசமாகிய கற்றையினால் =திரளால் முடிய =முழுமையும் தலை கால் அளவு = தலை முதல் கால் வரையும் ஒப்பனையாயே
    = அலங்காரமாகவே (அமையப் பெற்று).


    தடு மாறுதல் சற்று ஒரு நாள் உலகில்
    தவிரா உடலத்தினை நாயேன்


    தடுமாறுதல் = சஞ்சலம் உறுதல் சற்று ஒரு நாள் = கொஞ்சமேனும் ஒரு நாள் கூட உலகில் தவிரா = இந்த உலகத்தில் நீங்காதஉடலத்தினை = (இந்த) உடம்பை நாயேன் =அடியேன்


    பசு பாசமும் விட்டு அறிவால் அறியப்படு
    பூரண நிட்களமான


    பசு =தற்போதத்தையும் (அகங்காரத்தையும்)பாசமும் = பந்தத்தையும் விட்டு = விடுத்துஅறிவால் = ஞானத்தால் அறியப்படு =அறியப்படுகின்ற பூரண= பரிபூரணமானதும்
    நிட்களமான = உருவில்லாததுமான


    பதி பாவனை உற்று அநுபூதியில்
    அப்படியே அடைவித்து அருள்வாயே


    பதி பாவனை = பரம் பொருளாகிய கடவுள் தியானத்தை உற்று=மேற்கொண்டு அநுபூதியில்= அநுபவ ஞானத்தில் அப்படியே அடைவித்து = அந்தத்தியான நிலையிலேயே என்னை ஒப்படைத்துச் சேர்ப்பித்து அருள்வாயே = அருள் புரிவாயாக


    அசல ஈசுரர் புத்திரனே குண திக்கு
    அருணோதய முத்தமிழோனே


    அசலேசுரர் = கயிலை மயிலைக் கடவுளாகிய சிவபெருமானின் (அசைவற்றிருக்கும் தாணுவாம் சிவபெருமானின்) புத்திரனே= மகனே குண திக்கு = கிழக்குத் திசையில் தோன்றும் அருணோதய = உதய சூரியனுடைய ஒளியை உடையவனே முத்
    தமிழோனே = முத்தமிழ்க் கடவுளே


    அகில ஆகம வித்தகனே துகள்
    அற்றவர் வாழ் வயலித் திருநாடா


    அகில ஆகம = எல்லா ஆகமங்களிலும்வித்தகனே = வல்லவனே துகள் அற்றவர் =குற்றமற்றவர்கள் வாழ் = வாழும் வயலித்
    திருநாடா = வயலூர் என்னும் அழகிய ஊரில்வீற்றிருப்பவனே.


    கசிவார் இதயத்து அமிர்தே மதுப(ம்)
    கமலாலயன் மைத்துன வேளே


    கசிவார் = உள்ளம் உருகுபவர்களுடையஇதயத்து அமிர்தே = மனத்தில் ஊறும் அமுதமேமதுப(ம்) = வண்டு மொய்க்கின்ற
    கமலாலயன் = தாமரையில் வீற்றிருக்கும் பிரமனின் மைத்துன வேளே = மைத்துன னாகிய முருக வேளே.


    கருணாகர சற் குருவே குடகில்
    கருவூர் அழக பெருமாளே.


    கருணகர = கருணாகரனே சற் குருவே = சற் குரு மூர்த்தியே குடகில் = மேற்குத் திசையில் உள்ளகருவூர் = கருவூரில் வீற்றிருக்கும் அழகப் பெருமாளே = அழகிய பெருமாளே.






    ஒப்புக


    1. பசுபாசமும் விட்டு அறிவால் அறிய......


    இவ்வடிகள் சன் மார்க்க நிலையை திருமூலரின் திருமந்திரத்தில் உள்ளவாறு
    விளக்குகின்றன.


    பசுபாச நீக்கிப் பதியுடன் கூட்டிக்
    கசியாத நெஞ்சம் கசியக் கசிவித்
    தொசியாத வுண்மைச் சொரூபோ தயத்துற்
    றசைவான தில்லாமை யான சன்மார்க்கமே....................... திருமந்திரம்


    பசுபாசமு மகிலாதிக பரிபூரண புரணாகர
    பதிநேருநி னருளால் மெய் உணர்ந்திடேனோ........... திருப்புகழ், குயிலோமொழி.




    2. அநுபூதியில் அப்படியே அடைவித்து.....


    மீளா அடிமை உமக்கே ஆளாய்.......................................... சுந்தரர் தேவாரம்.


    3. மதுபக் கமலா லயன் மைத்துன வேளே.....


    வேதாமைத் துனவேளே வீராசற் குணசீலா...................... திருப்புகழ், நீதானெத்.
Working...
X