214.எந்தன்சடலம்
214
கந்தன்குடி
( பேரளம் – காரைக்கால் மார்கத்தில் இருக்கிறது. குமரக்குடி என்றும் அழைக்கப்படுகிறது. முருகனின் நாமம் கல்யாண சுந்தரர் )
வண்டன் தமியன் தன் பவம் ஒழியாதோ
தந்தந்தன தந்தந்தன தந்தந்தன தந்தந்தன
தந்தந்தன தந்தந்தன தனதான
எந்தன்சட லங்கம்பல பங்கம்படு தொந்தங்களை
யென்றுந்துயர் பொன்றும்படி யொருநாளே
இன்பந்தரு செம்பொன்கழ லுந்துங்கழல் தந்தும்பினை
யென்றும்படி பந்தங்கெட மயிலேறி
வந்தும்பிர சண்டம்பகி ரண்டம்புவி யெங்குந்திசை
மண்டும்படி நின்றுஞ்சுட ரொளிபோலும்
வஞ்சங்குடி கொண்டுந்திரி நெஞ்சன்துக ளென்றுங்கொளும்
வண்டன்தமி யன்றன்பவம் ஒழியாதோ
தந்தந்தன திந்திந்திமி யென்றும்பல சஞ்சங்கொடு
தஞ்சம்புரி கொஞ்சுஞ்சிறு மணியாரம்
சந்தந்தொனி கண்டும்புய லங்கன்சிவ னம்பன்பதி
சம்புந்தொழ நின்றுந்தினம் விளையாடும்
கந்தன்குக னென்றன்குரு வென்றுந்தொழு மன்பன்கவி
கண்டுய்ந்திட அன்றன்பொடு வருவோனே
கண்டின்கனி சிந்துஞ்சுவை பொங்கும்புனல் தங்குஞ்சுனை
கந்தன்குடி யின்தங்கிய பெருமாளே
- 214கந்தன்குடி

சுருக்க உரை
என் உடல் அங்கங்கள் பல வகை இடர்களில் படும் தொடர்புகள், துயர் நிலை இவை ஒழிய இன்பம் தரும் உன் திருவடிகளைத் தந்து எப்போதும் பாச பந்தங்கள் கெட, மயிலில் ஏறி வருக. அண்டங்கள் யாவும் நிறையும்படி சுடர் ஒளியாக நீ நிற்பதால், வஞ்சக மனத்தையடைய தமியேனாகிய என் பிறப்பு ஒழியாதா?
பலவகைத் தாள ஒலிகள் அடியார்களுக்கு அடைக்கலம் தருகின்றேன் என்று சொல்லுவது போலக் கொஞ்சி ஒலிக்கும் உன்னுடைய மணி ஆரங்களைக் கேட்டு, சிவன், திருமால்,பிரமன் ஆகிய மூவரும் தொழ நின்று அடியார் உள்ளத்தில் விளையாடும் கந்தனே, நக்கீரரைக் குகையினின்று விடுவித்து அவர் முன் வந்தவனே, தமியனாகிய என்னுடைய பிறவிகள் ஒழியாதோ?

அன்பன் கவி கண்டுய்ந்திட.... நக்கீரர் வரலாறு கூறப்பட்டுள்ளது.
மலைமு கஞ்சு மந்த புலவர் செஞ்சொல் கொண்டு
வழிதி றந்த செங்கை வடிவேலா--- திருப்புகழ் முலைமுகந்தி.