211.சந்தனம் திமிர்ந்து
211
எண்கண்
(திருவாரூருக்கு அருகில் உள்ளது)
தந்தனந் தனந்த தந்த தந்தனந் தனந்த தந்த
தந்தனந் தனந்த தந்த தனதான
சந்தனந் திமிர்ந்த ணைந்து குங்குமங் கடம்பி லங்கு
சண்பகஞ் செறிந்தி லங்கு திரடோளுந்
தண்டையஞ் சிலம்ப லம்ப வெண்டையஞ் சலன்ச லென்று
சஞ்சிதஞ் சதங்கை கொஞ்ச மயிலேறித்
திந்திமிந் திமிந்தி மிந்திதந் தனந்த னென்று
சென்றசைந் துகந்து வந்து க்ருபையோடே
சிந்தையங் குலம்பு குந்து சந்ததம் புகழ்ந்து ணர்ந்து
செம்பதம் பணிந்தி ரென்று மொழிவாயே
அந்தமந் திகொண்டி லங்கை வெந்தழிந் திடும்ப கண்டன்
அங்கமுங் குலைந்த ரங்கொள் பொடியாக
அம்பகும் பனுங்க லங்க வெஞ்சினம் புரிந்து நின்று
அம்புகொண் டுவென்ற கொண்டல் மருகோனே
இந்துவுங் கரந்தை தும்பை கொன்றையுஞ் சலம்பு னைந்தி
டும்பரன் றனம்பில் வந்த குமரேசா
இந்திரன் பதம்பெ றண்டர் தம்பயங் கடிந்து பின்பு
எண்கணங் கமர்ந்தி ருந்த பெருமாளே
திம் - திசை முழுவதும்,
திம் - பெருகி உள்ளது பேரருள்,
இந்தி - அஷ்ட லக்ஷமிகளின்,
மிந்தி - உறவு,
மிந்தி - இனி அதிகரிக்கும்,
தம் தனம் - பேரின்பம் என்பது எமது பெரும் செல்வம்,
தனந்தன் என்று
சென்று - யாமே பிரபு எனும் குறிப்பு வெளி பட்டு,
211
எண்கண்
(திருவாரூருக்கு அருகில் உள்ளது)
மூலவர் ஆறுமுகன் தனியாக மயில் வாகனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார். மூலவர் இருபுறத்திலும் வள்ளி தேவயானை தனியாக காட்சி அளிக்கின்றனர். ஆறுமுகங்கள் : முன்புறம் மூன்று பின்புறம் மூன்று முகங்கள் பன்னிருகரங்களில் வேல், அம்பு, கத்தி, சக்கரம், பாசம், சூலம், வில், கேடயம்,சேவற்கொடி, அங்குசம் போன்ற ஆயுதங்களைத் தரித்திருக்கிறார். கரங்களில் விரல்கள் கூட தனித்தனியாய் இடைவெளியுடன் இருப்பது மெய்மறக்க வைக்கிறது. அது மட்டுமல்ல, அத்தனை சிறப்பு வாய்ந்த முருகப்பெருமானின் முழு எடையையும் அவரை தாங்கி நிற்கும் மயிலின் இரண்டு கால்கள்தான் தாங்கியிருக்கிறது. கால்களில் புடைத்திருக்கும் நரம்புகள் அதை தெளிவாக்கிறது. இத்தனை அற்புதமும் சிறப்பும் வாய்ந்த மூன்று சிலைகளை ஒரே சிற்பி வடிவமைத்த காரணம் அ‘னேகமாக எல்லோரும் அறிந்ததே. எனினும் பலர் அறியாதது விஷயம் அவர் அமைத்த எல்லாவற்றிலும் மிகப் பெரியது பொறவாச்சேரியில் உள்ளது. (சிலர் சிக்கல் என்று தவறாகக் கருதுகின்றனர்) மற்ற இரண்டும் எட்டிக்குடியும் எண்கண்ணும் இருக்கும் சிலைகளாகும்
தந்தனந் தனந்த தந்த தந்தனந் தனந்த தந்த
தந்தனந் தனந்த தந்த தனதான
சந்தனந் திமிர்ந்த ணைந்து குங்குமங் கடம்பி லங்கு
சண்பகஞ் செறிந்தி லங்கு திரடோளுந்
தண்டையஞ் சிலம்ப லம்ப வெண்டையஞ் சலன்ச லென்று
சஞ்சிதஞ் சதங்கை கொஞ்ச மயிலேறித்
திந்திமிந் திமிந்தி மிந்திதந் தனந்த னென்று
சென்றசைந் துகந்து வந்து க்ருபையோடே
சிந்தையங் குலம்பு குந்து சந்ததம் புகழ்ந்து ணர்ந்து
செம்பதம் பணிந்தி ரென்று மொழிவாயே
அந்தமந் திகொண்டி லங்கை வெந்தழிந் திடும்ப கண்டன்
அங்கமுங் குலைந்த ரங்கொள் பொடியாக
அம்பகும் பனுங்க லங்க வெஞ்சினம் புரிந்து நின்று
அம்புகொண் டுவென்ற கொண்டல் மருகோனே
இந்துவுங் கரந்தை தும்பை கொன்றையுஞ் சலம்பு னைந்தி
டும்பரன் றனம்பில் வந்த குமரேசா
இந்திரன் பதம்பெ றண்டர் தம்பயங் கடிந்து பின்பு
எண்கணங் கமர்ந்தி ருந்த பெருமாளே
சுருக்க உரை
சந்தனம், குங்குமம், கடம்பு இவை அணிந்த தோள்கள் விளங்க,சிலம்புகள் ஒலிக்க, சதங்கை கிண்கிணி கொஞ்சுவது போல ஒலி செய்ய, மயிலின் மீது ஏறி மகிழ்ச்சியுடன் வந்து உன் செவ்விய பதங்களைப் பணிந்து இருப்பாயாக என்று மொழிந்தருளுக.
அனுமனின் துணையால் இலங்கை வெந்து அழியவும், கொடிய வனாகிய இராவணனுடைய உடல் அழிந்து பொடியாகவும்,கும்பகர்ணன் மனம் கலங்க அம்பைச் செலுத்தி வெற்றி கொண்ட திருமாலின் மருகனே. பிறை, திருநீறு, தும்பை,கொன்றை, கங்கை இவற்றை அணிந்த சிவபெருமானின் அன்பால் தோன்றிய குமரனே, இந்திரன் தன் பதவி திரும்பப் பெறவும், தேவர்கள் பயம் ஒழியவும் செய்து முடித்த பின்னர்,எண்கண் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. செம்பதம் பணிந்திடுவாய் என்று மொழிந்து அருளுக.