210.ஓங்கும் ஐம்புலன்
210
எட்டிகுடி
(திருவாரூர் அருகில் உள்ளது)
தாந்த தந்தன தான தனத்தம் தனதான
[hg2] ஓங்கு மைம்புல னோட நினைத்தின் பயர்வேனை
ஓம்பெ றும்ப்ரண வாதி யுரைத்தெந் தனையாள்வாய்
வாங்கி வெங்கணை சூரர் குலக்கொம் புகடாவி
வாங்கி நின்றன ஏவி லுகைக்குங் குமரேசா
மூங்கி லம்புய வாச மணக்குஞ் சரிமானு
மூண்ட பைங்குற மாது மணக்குந் திருமார்பா
காங்கை யங்கறு பாசில் மனத்தன் பர்கள்வாழ்வே
காஞ்சி ரங்குடி ஆறு முகத்தெம் பெருமாளே[/hd2]
காஞ்சிரங்குடி
http://www.vikatan.com/new/article.p...d=129&aid=4633
210
எட்டிகுடி
(திருவாரூர் அருகில் உள்ளது)
மயிலின் கால்களை மட்டுமே ஆதாரமாக கொண்ட ஒர் அற்புதமான சிலை அமைப்பு பார்க்கும் மனநிலைக்கு ஏற்ப தன் உருவத்தை மாற்றிக்கொண்டு காட்சி தருபவர் எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி. குழந்தையாக நினைத்து பார்த்தால் குழந்தை வடிவிலும், முதியவராக நினைத்து பார்த்தால் வயோதிக வடிவிலும், இளைஞனாக நினைத்து பார்த்தால் இளைஞர் வடிவிலும் இவர் காட்சி தருவார்.
தாந்த தந்தன தான தனத்தம் தனதான
[hg2] ஓங்கு மைம்புல னோட நினைத்தின் பயர்வேனை
ஓம்பெ றும்ப்ரண வாதி யுரைத்தெந் தனையாள்வாய்
வாங்கி வெங்கணை சூரர் குலக்கொம் புகடாவி
வாங்கி நின்றன ஏவி லுகைக்குங் குமரேசா
மூங்கி லம்புய வாச மணக்குஞ் சரிமானு
மூண்ட பைங்குற மாது மணக்குந் திருமார்பா
காங்கை யங்கறு பாசில் மனத்தன் பர்கள்வாழ்வே
காஞ்சி ரங்குடி ஆறு முகத்தெம் பெருமாளே[/hd2]
காஞ்சிரங்குடி
சுருக்க உரை
பெருகி வளரும் ஐம்புலங்களும் என்னை இழுக்க, அவ்வழியே ஓடி
அயர்வுறும் எனக்கு, ஓம் என்னும் பிரணவம் ஆகிய மந்திரங்களை
உபதேசித்து அருளுக.
கொடிய அம்புகளைக் கொண்ட சூரர்களின் கிளைஞர்கள் பாய்ந்து வர,
அந்த சேனை மீது அம்பு செலுத்திய குமரேசனே, தேவசேனையையும்
வள்ளியையும் மணம் கொண்ட திருமார்பனே, மனம் கொதிப்பு இல்லாத
அடியார்களின் செல்வமே, என்னை ஆண்டு கொள்வாயாக.

விளக்கக் குறிப்புகள்
காஞ்சிரங்குடி....
இதனை எட்டிகுடி என்று மாற்றி அழைக்கப்பட்டுள்ளது என்பது வ.சு.
செங்கல்வராயரரின் கருத்து.
பந்தணைநல்லூரைக் கந்துகாபுரி என்று அழைத்ததைப் போல (திருப்புகழ் - மதியஞ்சத்தி).
இந்த திருத்தலத்தின் மூலவர் முருகன் சிற்பத்தை வடித்தவர் சிறந்த சிற்பி எண்கண் மற்றும் சிக்கல் முருகன் சிலையை ( தற்சமயம் பொறாவாச்சேரியில் உள்ளது) வடித்துள்ளார். சிக்கல் தலத்தில் சிறந்த சிலையை அவர் வடித்தார். பின் அதை விட சிறந்ததாக எதுவும் அமைய விருப்பபடாத அரசன் சிற்பியின் வலது கட்டை விரலை துண்டித்து விட்டான். முருகனின் அருள் பெற்ற அந்த சிற்பி கட்டை விரலிலாத கைகளினால் எட்டுக்குடி என்ற தலத்தில் முருகன் சிற்பத்தை வடித்தார் .அது சிக்கல்ச் சிற்பத்தை விட சிறந்ததாக அமைந்ததை தொடர்ந்து. அதனால் பொறாமை கொண்ட அரசன் சிற்பியின் கண்களைக் குருடாக்கினான்.
அதன் பின் முருகன் மீதுள்ள மிகந்த பக்தியால் தன்னுடைய பெண் உதவியுடன் என்கண் திருத்தலத்தில் சிலையை வடித்தார். அருமையாக அமைந்த சிலையின் கண்களை திறக்கும் பொழுது உளி கண்களில் பட்டுக் கண்பார்வை மீண்டும் பெற்றார் என்பது வரலாறு கூறும் நிகழ்ச்சி