Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    207.வாலவயதாகி


    207
    இராமேசுரம்


    தானதன தானதன தானதன தானதன
    தானதன தானதன தானதன தானதன
    தானதன் தானதன தானதன தானதன தனதான


    வாலவய தாகியழ காகிமத னாகிபணி
    வாணிபமொ டாடிமரு ளாடிவிளை யாடிவிழல்
    வாழ்வுசத மாகிவலு வாகிமட கூடமொடு பொருள்தேடி
    வாசபுழு கேடுமல ரோடுமன மாகிமகிழ்
    வாசனைக ளாதியிட லாகிமய லாகிவிலை
    மாதர்களை மேவியவ ராசைதனி லேசுழல சிலநாள்போய்த்
    தோல்திரைக ளாகிநரை யாகிகுரு டாகியிரு
    கால்கள்தடு மாறிசெவி மாறிபசு பாசபதி
    சூழ்கதிகள் மாறிசுக மாறிதடி யோடுதிரி யுறுநாளிற்
    சூலைசொறி யீளைவலி வாதமொடு நீரிழிவு
    சோகைகள் மாலைசுர மோடுபிணி தூறிருமல்
    சூழலுற மூலகசு மாலமெனெ நாறியுட லழிவேனோ
    நாலுமுக னாதியரி யோமெனஅ தாரமுரை
    யாதபிர மாவைவிழ மோதிபொரு ளோதுகென
    நாலுசிர மோடுசிகை தூளிபட தாளமிடு மிளையோனே
    நாறிதழி வேணிசிவ ரூபகலி யாணிமுத
    லீணமக வானைமகிழ் தோழவன மீதுசெறி
    ஞானகுற மாதைதினை காவில்மண மேவுபுகழ் மயில்வீரா
    ஓலமிடு தாடகைசு வாகுவள ரேழுமரம்
    வாலியொடு நீலிபக னோடொருவி ராதனெழ
    மோதகட லோடுவிறல் ராவணகு ழாமமரில் பொடியாக
    ஓகைதழல் வாளிவிடு மூரிதநு நேமிவளை
    பாணிதிரு மார்பனரி கேசன்மரு காஎனவே
    யோதமறை ராமெசுர மேவுகும ராவுமரர் பெருமாளே




    பதம் பிரித்தல்


    வால வயதாகி அழகாகி மதனாகி பணி
    வாணிபமோடு ஆடி மருளாடி விளையாடி விழல்
    வாழ்வு சதமாகி வலுவாகி மட கூடமோடு பொருள் தேடி


    வால வயது ஆகி = கட்டிளமை வயதை அடைந்து அழகாகி = அழகு நிரம்பப் பெற்றுமதனாகி = மன்மதன் போல் விளங்கி பணி வாணிபமொடு ஆடி = (ஊதியம் தரும் பல) வாணிபப் பணிகளை மேற்கொண்டு நடத்திமருள் ஆடி = மயக்க அறிவைப் பெற்றுவிளையாடி = காம விளையாட்டுக்கள் ஆடிவிழல் வாழ்வு = பயனற்ற வாழ்க்கையையே. சதமாகி = நிலையானது என்று கருதி வலுவாகி = அதிலேயே மனம் உறுதி பெற்று மட கூடமோடு = மாட கூடம் கொண்ட செல்வனாய்பொருள் தேடி = பொருளைத் தேடி.


    வாசனை புழுகு ஏடு மலரோடு மனமாகி மகிழ்
    வாசனைகள் ஆதி இடல் ஆகி மயலாகி விலை
    மாதர்களை மேவி அவர் ஆசை தனில் சுழல சில நாள் போய்


    வாச புழுகு = நறு மணம் உள்ள புனுகு ஏடு மலரோடு = இதழ்களோடு கூடிய மலர்களில்மனமாகி = மனத்தைச் செலுத்தியவனாக மகிழ் = மிகிழ்ச்சியுடன் வாசனைகள் ஆதி வாசனைப் பொருள்கள் முதலியவற்றை இடலாகி =அணிந்தவனாய் மயலாகி = காமப் பற்றைக் கொண்டு விலை மாதர்களை மேவி = பொது மகளிரை விரும்பி அவர் ஆசை தனிலே =அவர்கள் மீது மோகம் கொண்டு சுழல =(அவர்கள் பின்) சுழல சில நாள் போய் =(அங்ஙனம்) சில நாட்கள் கழிய.


    தோல் திரைகள் ஆகி நரையாகி குருடாகி இரு
    கால்கள் தடுமாறி செவி மாறி பசு பாச பதி
    சூழ் கதிகள் மாறி சுகம் மாறி தடியோடு திரி உறு நாளில்


    தோல் திரைகளாகி = உடலில் தோல் சுருங்கலுற்று நரையாகி = மயிர் வெண்ணிறம் பூண்டு குருடாகி = கண்கள் பார்வை இழந்துஇரு கால்கள் தடுமாறி = இரண்டு கால்களும் தடுமாற்றம் அடைந்து. செவி மாறி = காதுகள் கேட்கும் தொழில் அற்று பசு பாச பதி = உயிர்,தளை, கடவுள் என்னும் முதற் பொருள்களைப் பற்றிய சூழ் கதிகள் = அறிவு யாவும் மாறி =மறைதலுற்று சுகம் மாறி = சுகமெல்லாம் கெட்டு தடியோடு = (கையில்) தடி ஏந்தி திரியுறு நாளில் = திரிகின்ற முதுமைப் பருவத்தில்.


    சூலை சொறி ஈளை வலி வாதமோடு நீரிழிவு
    சோகைகள் மாலை சுரமோடு பிணி தூறிருமல்
    சூழல் உற மூல கசுமாலம் என நாறி உடல் எழுவேனோ


    சூலை = சூலை நோய் சொறி = சொறி நோய்.ஈளை = கோழை வலி வாதமோடு = இழுப்பு,வாயு மிகுதலால் வரும் பிணிகள் நீரிழிவு =நீரிழிவு. சோகைகள் = இரத்தமின்மையால் வரும் சோகை மாலை = கண்ட மாலைசுரமோடு சூழ் = வெப்பு இவைகளுடன் சேர்ந்துள்ள தூறிருமல் = கிளைத்தெழுகின்ற இருமல் சூழல் உற = இவை எல்லாம் சூழ்ந்து பற்றி மூல = அடிக்காரணமாகிய கசுமாலம் என = ஆபாசம் என்னும்படியான நாறி உடல் = இந்த உடல் துர் நாற்றம் அடைந்து. அழிவேனோ =மடிந்து போவேனோ?


    நாலுமுகம் ஆதி அரி ஓம் என ஆதாரம் உரையாத
    பிரமாவை விழ மோதி பொருள் ஓதுக என
    நாலு சிரமோடு சிகை தூளிபட தாளம் இடு இளையோனே


    நாலு முகன் = நான்கு முகங்களைக் கொண்டவனும் ஆதி அரி ஓம் என ஆதாரம் =யாவற்றுக்கும் ஆதாரமான பொருளைஉரையாத பிரமாவை = சொல்லத் தெரியாதவனுமாகிய பிரமனை விழ மோதி =விழும்படித் தாக்கி பொருள் ஓதுக என =சரியான பொருளைச் சொல்லுக என்று நாலு சிரமோடு = அவனுடைய நான்கு முகங்களுடன்சிகை தூளி பட = குடுமியும் சிதறுண்டு அலையதாளம் இடு இளையோனே = தாளமிடுவது போல் குட்டிய இளையவனே.




    நாறு இதழி வேணி சிவ ரூபக கல்யாணி முதல்
    ஈண மகவானை மகிழ் தோழ வனம் மீது செறி
    ஞான குற மாதை தினை காவில் புகழ் மயில் வீரா


    நாறு இதழி = நறு மணம் வீசும் கொன்றையை அணிந்த. வேணி = சடையை உடைய. சிவ ரூப = சிவபெருமானுடைய பாகத்தில் அமைந்துள்ளகலியாணி = பார்வதி முதல் ஈண = முதலில் ஈன்ற மகவு யானை = குழந்தையாகிய கணபதிமகிழ் = மகிழும் தோழ = சகோதர நண்பனேவனம் மீது செறி = (வள்ளி மலைக்) காட்டில் பொருந்தி இருந்த ஞான குற மாதை = ஞானக் குற மாதாகிய வள்ளியை தினை காவில் =தினைப் புனச் சோலையில் மணம் மேவும் =மணம் பூண்ட புகழ் மயில் வீரா = புகழைக் கொண்ட மயில் வீரனே.


    ஓலம் இடு தாடகை சுவாகு வளர் ஏழு மரம்
    வாலியோடு நீலி பகனோடு ஒரு விராதன் எழும்
    ஓத கடலோடு விறல் ராவண குழாம் அமரில் பொடியாக


    ஓலம் இடு தாடகை = கூச்சலிட்டு வந்த தாடகை. சுவாகு = சுவாகு வளர் ஏழு மரம் =வளர்ந்திருந்த மரா மரங்கள் ஏழு வாலியோடு =வாலி மற்றும் நீலி பகனோடு = நீலி, பகன். ஒரு = ஒப்பற்ற விராதன் = விராதன் எழு = எழுந்துமோத கடலோடு = அலைகள் விசும் கடல் இவைகளுடன் விறல் = வலிமை வாய்ந்த.ராவணன் குழாம் = இராவணனுடைய கூட்டம். அமரில் பொடியாக = போரில் இறந்து பொடிபட்டழிய.


    ஓகை தழல் வாளிவிடு மூரி தநு நேமி வளை
    பாணி திரு மார்பன் அரி கேசன் மருகா எனவே
    ஓத மறை ராமேசுர மேவும் குமரா அமரர் பெருமாளே.


    ஓகை = களிப்புடன் தழல் வாளி விடு = நெருப்பு அம்பை வீசும் கையை உடையவன் மூரி தநு =வலிமை வாய்ந்த வில் நேமி = சக்கரம் வளை =சங்கு. பாணி = (இவைகளைக்) கையில் ஏந்தியவன். திரு மார்பன் = இலக்குமியை மார்பில் உடையவன் அரி = அரி. கேசன் =கேசவன் (ஆகிய திருமாலின்). மருகா =மருகனே எனவே = என்று மறை ஓத =வேதங்கள் ஓதிப் புகழும் ராமேசுரம் மேவும் குமரா = இராமேசுரத்தில் வீற்றிருக்கும்குமரனே அமரர் பெருமாளே = தேவர்கள் பெருமாளே.










    1. தடியொடு திருயுறு நாளிற்....


    தடி கொண்டு குரங்கெனவே நடந்து சொல்
    ...திருப்புகழ்,காராட.


    2. ஆதாரம் உரையாத பிரமாவை....


    மறையன்றலை யுடையும்படி நடனங்கொளு மாழைக் கதிர்வேலா
    ... - திருப்புகழ், முகசந்தி


    தூமறைக் கெலாம் ஆதியும் அந்தமும் சொல்லும்
    ஓமெனப்படும் ஓரெழுத் துண்மையை உணரான்
    மாமலர்ப் பெருங் கடவுளும் மயங்கினான் ...கந்த புராணம்


    3. தாடகை சுவாகு.....
    வெடுத்த தாடகை சினத்தை யோர்கணை
    விடுத்து யாகமும் நடத்தி யேயொரு
    மிகுத்த வார்சிலை முறித்தா மாயவன் மருகோனே
    ...திருப்புகழ் தொடுத்தவாளெ.
    வேள்விச் சாலைய ளித்தல்பொ ருட்டெதிர்
    காதத் தாடகை யைக்கொல்க்ரு பைக்கடல் மருகோனே.
    . .திருப்புகழ் வேலைப்போல்


    4. ஏழு மரம்.....
    வடிவுடைய மானு மிகல்கர னுந்திக
    ழெழுவகை மராமரமு நிகரொன்றுமில்
    வலியதிறல் வாலி யுரமுநெ டுங்கட லவையேழும்
    ....திருப்புகழ், விடமும்வடி


    5. பகன்..
    கண்ணனைக் கொல்ல கம்சனால் அனுப்பப்பட்ட கொக்கு உருக் கொண்ட அரக்கன். இவன் கண்ணனால் வாய் பிளவுண்டு இறந்தான்.
    பள்ளத்தில் மேயும் பறவை யுருக் கொண்டு
    கள்ள அசுரன் வருவானைத் தான்கண்டு
    புள்ளிது என்று பொதுக்கோ வாய்கீண்டிட்ட பிள்ளை..
    .பெரியாழ்வார்




    6. கடலோடு....


    பரவை பரவை கொல் பரவை வண அரி
    பரவு மிமையவர் பெருமாளே ... .திருப்புகழ், குழலடவி.


    விளக்கக் குறிப்புகள்


    விராதன்... இவன் வீணை வாசிக்கும் தும்புரு என்னும் கந்தருவன். ரம்பையுடன் காம விகாரத்தால் ஊடல் கொள்ள குபேரன் இவனை அரக்கனாகும்படி சபித்தான்
Working...
X