206.வாட்பட
206
ஆய்க்குடி
தென் காசிக்கு அருகில் உள்ளது
பரமேட்டியை காவல் இடும் ஆய்க்குடி காவல
தாத்தனத் தானதன தாத்தனத் தானதன
தாத்தனத் தானதன தனதான
வாட்படச் சேனைபட வோட்டியொட் டாரையிறு
மாப்புடைத் தாளரசர் பெருவாழ்வும்
மாத்திரை போதிலிடு காட்டினிற் போமெனஇல்
வாழ்க்கைவிட் டேறுமடி யவர்போலக்
கோட்படப் பாதமலர் பார்த்திளைப் பாறவினை
கோத்தமெய்க் கோலமுடன் வெகுரூபக்
கோப்புடைத் தாகியல மாப்பினிற் பாரிவரு
கூத்தினைப் பூரையிட அமையாதோ
தாட்படக் கோபவிஷ பாப்பினிற் பாலன்மிசை
சாய்த்தொடுப் பாரவுநிள் கழல்தாவிச்
சாற்றுமக் கோரவுரு கூற்றுதைத் தார்மவுலி
தாழ்க்கவஜ் ராயுதனு மிமையோரும்
ஆட்படச் சாமபர மேட்டியைக் காவலிடு
மாய்க்குடி காவலவு ததிமீதே
ஆர்க்குமத் தானவரை வேர்கரத் தால்வரையை
ஆர்ப்பெழச் சாடவல பெருமாளே
206
ஆய்க்குடி
தென் காசிக்கு அருகில் உள்ளது
பரமேட்டியை காவல் இடும் ஆய்க்குடி காவல
தாத்தனத் தானதன தாத்தனத் தானதன
தாத்தனத் தானதன தனதான
வாட்படச் சேனைபட வோட்டியொட் டாரையிறு
மாப்புடைத் தாளரசர் பெருவாழ்வும்
மாத்திரை போதிலிடு காட்டினிற் போமெனஇல்
வாழ்க்கைவிட் டேறுமடி யவர்போலக்
கோட்படப் பாதமலர் பார்த்திளைப் பாறவினை
கோத்தமெய்க் கோலமுடன் வெகுரூபக்
கோப்புடைத் தாகியல மாப்பினிற் பாரிவரு
கூத்தினைப் பூரையிட அமையாதோ
தாட்படக் கோபவிஷ பாப்பினிற் பாலன்மிசை
சாய்த்தொடுப் பாரவுநிள் கழல்தாவிச்
சாற்றுமக் கோரவுரு கூற்றுதைத் தார்மவுலி
தாழ்க்கவஜ் ராயுதனு மிமையோரும்
ஆட்படச் சாமபர மேட்டியைக் காவலிடு
மாய்க்குடி காவலவு ததிமீதே
ஆர்க்குமத் தானவரை வேர்கரத் தால்வரையை
ஆர்ப்பெழச் சாடவல பெருமாளே
சுருக்க உரை
வாள் வீச்சால் சேனைகளை அழியும்படி ஓட்டி வெருட்டி,இறுமாப்பு மிக்க அரசர்களின் பெரிய வாழ்வும், ஒரு நொடிப் பொழுதில் சுடு காட்டுக்குப் போகும் என்று உணர்ந்து, இல்லற வாழ்க்கையைத் துறந்த அடியார்களைப் போல, ஒரு துணிவான முடிவை மேற் கொள்ளவும், உனது திருவடி மலரைக் கண்டு இளைப்பாறவும், வினையால் ஏற்படும் உடல் பல உருவங்களாகத் தோன்றி, அலங்காரங்களைப் பெற்று,துன்பங்கள் வளர்ந்து வரும் நாடகத்தில், இனியும் இந்தப் பயனற்றவனை நீ தள்ளுதல் ஒரு முடிவு பெறாதோ?
கால் பட்டால் கோபித்துச் சீறும் பாம்பைப் போல்,மார்க்கண்டனாகிய பாலகன் மீது யமன் தொடர்ந்தவுடன், தமது திருவடியை நீட்டி அவனை உதைத்த சிவபெருமான் தமது முடியைத் தாழ்த்தவும், இந்திரனும், மற்ற தேவர்களும் ஆட்பட்டு நிற்கவும், பிரமனைச் சிறையிலிட்ட ஆய்க்குடி என்னும் தலத்தில் வீற்றிருக்கும் அரசே, கடலில் போர் புரிந்த அசுரர்களையும் வேலாயுதத்தால் அழித்து, அவர்கள் இருந்த எழுகிரிகளையும் அழிக்க வல்ல பெருமாளே, இந்தப் பயனற்றவனை இனியும் உலக நாடகத்தில் வீழ்த்தி விடுதல் ஒரு முடிவுக்கு வராதோ?

விளக்கக் குறிப்புகள்
1. அரசர் பெரு வாழ்வும் மாத்திரைப் போதில் இடு காட்டினில்...
இனிதிறு மாந்து வாழு மிருவினை நீண்ட காய
மொருபிடி சாம்ப லாகி விடலாமோ... திருப்புகழ்,தினமணிசார்.
2. பாலன் மிசை சாய்த்தொடுப் பாரவு நின் கழல் தாவி....
மார்க்கண்டனுக்கு விதித்திருந்த பதினாறு ஆண்டுகள் முடிந்து என்று அவன் உயிரைக்
கவரக் காலன் வந்த போது அவர் சிவ பூசையில் செய்து கொண்டிருந்தார். அப்போது
சிவ பூசை செய்வதையும் மதியாமல் காலன் பாசத்தை வீசினான். இறைவன்
எழுந்தாருளி காலனக் காலால் உதைத்து அவனை வீழ்த்தினார்.
பதிமூன்றும் சிதைத்தான் வாமச் சேவடி தன்னால் சிறிதுந்தி உதைத்தான் கூற்றான் விண்முகில் போல் மண்ணுற வீழ்ந்தான் - கந்த புராணம்
மறலியி னாட்ட மறசர ணீட்டி.. திருப்புகழ், பாட்டிலுருகிலை

மூலவர் பாலசுப்பிரமணியர், இடப்புறம் திரும்பிய மயில் வாகனத்தின் மீது குழந்தை வடிவில் அமர்ந்த கோலத்தில் உள்ளார். இங்கு சிவன், சக்தி, சூரியன், விஷ்ணு, கணபதி ஆகிய பஞ்ச தேவதையர்கள் குடியிருக்கும் அரசு, வேம்பு, மாவிளக்கு, மாதுளை, கறிவேப்பிலை எனும் பஞ்ச விருட்சங்கள் இக்கோயிலில் உள்ளன.