205.மனத்தி ரைந்
205
அவிநாசி
செந்தமிழால் உன்னையே தினந்தோறும் நினைக்கவும் உன்னுடைய நிறைந்த திருவருளைத் தந்தருளுக.
தனத்த தந்தன தானன தானன
தனத்த தந்தன தானன தானன
தனத்த தந்தன தானன தானன தனதான
மனத்தி ரைந்தெழு மீளையு மேலிட
கறுத்த குஞ்சியு மேநரை யாயிட
மலர்க்க ணண்டிரு ளாகியு மேநடை தடுமாறி
வருத்த முந்தர தாய்மனை யாள்மக
வெறுத்தி டங்கிளை யோருடன் யாவரும்
வசைக்கு றுஞ்சொலி நால்மிக வேதின நகையாட
எனைக்க டந்திடு பாசமு மேகொடு
சினத்து வந்தெதிர் சூலமு மேகையி
லெடுத்தெ றிந்தழல் வாய்விட வேபய முறவேதான்
இழுக்க வந்திடு தூதர்க ளானவர்
பிடிக்கு முன்புன தாள்மல ராகிய
இணைப்ப தந்தர வேமயில் மீதினில் வரவேணும்
கனத்த செந்தமி ழால்நினை யேதின
நினைக்க வுந்தரு வாயுன தாரருள்
கருத்தி ருந்துறை வாயென தாருயிர் துணையாகக்
கடற்ச லனந்தனி லேயொளி சூரனை
யுடற்ப குந்திரு கூறென வேயது
கதித்தெ ழுந்தொரு சேவலு மாமயில் விடும்வேலா
அனத்த னுங்கம லாலய மீதுறை
திருக்க லந்திடு மாலடி நேடிய
அரற்க ரும்பொருள் தானுரை கூறிய குமரேசா
அறத்தை யுந்தரு வோர்கன பூசுரர்
நினைத்தி னந்தொழு வாரம ராய்புரி
யருட்செ றிந்தவி நாசியுள் மேவிய பெருமாளே

சுருக்க உரை
கொடிய கோழை அதிகரிக்கவும், தலை மயிர் நரை கொண்டு வெளுக்கவும், கண்கள் பஞ்சடைந்து பார்வை குறையவும், நடை தடுமாறவும், தாய், மனைவி, மக்கள், சுற்றத்தார் யாவரும் பழிச் சொற்களைப் பேசிப் பரிகசித்துச் சிரிக்கவும், கோபத்துடன் யம தூதர்கள் சூலத்தைக் கையில் ஏந்தி என் எதிரே வந்து, அதை என் மேல் வீசி, என்னை பயமுறுத்தி இழுப்பதற்கு முன்பாக, உன் இரண்டு தாமரைத் திருவடிகளையும் அடியானுக்குத் தந்தருள வேண்டும்.
பொருள் செறிந்த செந்தமிழால் தினந்தோறும் உன்னை நினைக்கவும், உன் திருவருளைத் தந்தருள வேண்டும். என் உயிருக்குத் துணையாக நீ என் உள்ளத்தில் பொருந்தி வீற்றிருக்க வேண்டும். கடலில் ஒளிந்த சூரன் உடல் இரு கூறாகப் பிளக்கும்படியும், அவை சேவலாகவும், மயிலாகவும் எழும்படியும் செலுத்திய வேலாயுதத்தைச் செலுத்தியவனே, பிரமனும், இலக்குமி உறையும் மார்பனான திருமாலும் தேடிக் காணாத திருவடியை உடைய சிவபெருமானுக்குப் பிரணவப் பொருளை உபதேசித்த குமரனே, அற நெறியை உபதேசிக்கும் அந்தணர்கள் உன்னை நாள் தோறும் தொழும் அவிநாசியில் விரும்பி வீற்றிருக்கும் பெருமாளே, நான் இறக்கு முன் என் முன்னே மயில் மேல் ஏறி வர வேண்டுகின்றேன்.

ஒப்புக
கனத்த செந்தமிழால் நினையே தின நினைக்க...
செந்தமிழால் முருகனைப் பாட வேண்டும் என்பது அருணகிரி நாதர் பேராசை.
வேலுஞ்செஞ் சேவலும் செந்தமிழாற் பகரார்வம்.......
...கந்தர் அலங்காரம்
பின் வரும் திருப்புகழ்ப் பாக்களிலும் இக்கருத்தைக் காணலாம்.
செந்தமிழ் வழுத்தி உனை
அன்பொடு துதிக்க மனம் அருள்வாயே....…. ஐங்கரனையொத்த
எனக் கென்றப் பொருட் டங்கத் தொடுக்குஞ் சொற்
றமிழ்த்தந்திப் படி ஆள்வாய்............. .... .............. பருத்தந்த
செந்தமிழ் பாடும் புலப்பட்டங் டுத்தற்கும்.. ...... பெருக்கச்சஞ்சலி
தமிழ்க் கொற்றப் புகழ்ச் செப்பித் திரிவேனோ… …கடத்தைப்பற்
சுத்தத் சித்தித் தமிழைத்
திட்டத் துக்குப் புகலப் பெறுவேனோ ..... கொக்குக்கொக்க
தமிழிசையதாகவே மொழி செய்தே நினைந்திடுமாறு
...அருள்வாயே ....... ...... .......... .... ......விதியதாகவே
தமிழால்...பாடென்று ஆட்கொ டருள்வாயே ........ வடிவதுநீல
சரணாரவிந்தமது பாட வண்டமிழ் விநோதம் அருள்வாயே ......அஞ்சுவித
செஞ்சொல் சேர் சித்ரத் தமிழாலுன் செம்பொனார்
வத்தைப் பெறுவேனோ ... …… ……. பஞ்சுநேர்
தமிழ்ச் சுவையிட்டு ... எய்த்திட ...அருள்வாயே……… …..வினைத்திரளு
சித்ரத் நித்தத் தமிழாலுன் நாமத்தை
கற்றுப் புகழ்க்கைக்குப் புரிவாயே............ .......... வானப்புக்கு
பகர்தற்கரி தான செந்தமி ழிசையிற்சில பாட ….பகர்தற்கரி தான