203.கருகியறிவகல
203
அத்திப்பட்டு
(புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது.
நெய்வேலிக்கு அருகில் வில்லுடையான்பட்டியே அத்திப்பட்டு
என்பது வலையப்பட்டி கிருஷ்ணன் கருத்து)
தனதனன தனதனன தத்தத் தத்ததன
தனதனன தனதனன தத்தத் தத்ததன
தனதனன தனதனன தத்தத் தத்ததன தனதான
கருகியறி வகலவுயிர் விட்டுக் கிக்கிளைஞர்
கதறியழ விரவுபறை முட்டக் கொட்டியிட
கனகமணி சிவிகையில மர்த்திக் கட்டையினி லிடைபோடாக்
கரமலர்கொ டரிசியினை யிட்டுச் சித்ரமிகு
கலையையுரி செய்துமறைகள் பற்றப் பற்றுகனல்
கணகணென எரியவுடல் சுட்டுக் கக்ஷியவர் வழியேபோய்
மருவுபுனல் முழுகிமனை புக்குத் துக்கமறு
மனிதர்தமை யுறவுநிலை சுட்டுச் சுட்டியுற
மகிழ்வுசெய்து அழுதுபட வைத்தத் துட்டன் மதன்மலராலே
மயல்விளைய அரிவையர்கள் கைப்பட் டெய்த்துமிக
மனமழியு மடிமையைநி னைத்துச் சொர்க்கபதி
வழியையிது வழியெனவு ரைத்துப் பொற்கழல்கள் தருவாயே
பொருவின்மலை யரையனருள் பச்சைச் சித்ரமயில்
புரமெரிய இரணியத னுக்கைப் பற்றியியல்
புதியமுடு கரியதவ முற்றுக் கச்சியினி லுறமேவும்
புகழ்வனிதை தருபுதல்வ பத்துக் கொத்துமுடி
புயமிருப தறவுமெய்த சக்ரக் கைக்கடவுள்
பொறியரவின் மிசைதுயிலு சுத்தப் பச்சைமுகில் மருகோனே
அரியமர கதமயிலி லுற்றுக் கத்துகட
லதுசுவற அசுரர்கிளை கெட்டுக் கட்டையற
அமரர்பதி யினியகுடி வைத்தற் குற்றமிகு மிளையோனே
அருணமணி வெயில்பரவு பத்துத் திக்குமிக
மழகுபொதி மதர்மகுட தத்தித் தத்திவளர்
அணியகய லுகளும்வயல் அத்தப் பட்டிலுறை பெருமாளே.
-203 அத்திப்பட்டு

சுருக்க உரை
உயிர் பிரிந்தவுடன் உடலைச் சுடுகாட்டில் எரித்த பின்னர், கூட
வந்தவர்கள் நீரில் முழுகி விட்டு வீட்டுக்குப் போய்த் துக்கம் நீக்குகின்ற மனிதர்களைக் கண்டால் ஒரு புறம் மகிழ்ச்சியும் மற்றொரு புறம் அழுகையும் ஏற்படும்படி காம உணர்ச்சி உண்டாகப் ஏற்படும்படி பெண்களின் வசப்பட்டு மனம் நொந்தலைக் கொள்ளும் அடிமையை, சொர்க்க லோகத்துக்கு இது தான் வழி என்று காட்டி உனது திருவடியைத் தந்து அருள்க.
மலையரசன் பர்வதராஜன் மகளும், அரிய தவத்தை மேற் கொண்டவளும் ஆகிய பார்வதியின் புதல்வனே, இராவணனுடைய பத்துத் தலைகளும் அற்று விழ, சக்ராயுதத்தை ஏந்திய கைகளை உடையவனும், ஆதிசேடன் மேல் பள்ளி கொள்வராகிய திருமாலின் மருகனே, கடல் வற்றவும், அசுரர்கள் கூட்டம் அழியவும், இந்திரன் தன் ஊருக்குக் குடி போகவும் மயில் மீது வந்து உதவிய இளையவனே, கயல் மீன்கள் குதிக்கும் வயல்கள் சூழ்ந்த அத்திப்பட்டில் வீற்றிருக்கும் பெருமாளே, உன் அழகிய திருவடியைத் தாராய்.

ஒப்புக
1. புனல் மூழ்கி மனை புக்குத் துக்கம் அறு.....
...இட்டே யனற்குளெரி பட்டா ரெனத்தழுவி
நீரிற் படிந்துவிடு பாசத் தகன்றுனது... திருப்புகழ், இத்தாரணிக்குள்
செத்துக் கிடக்கும் பிணத்தருகே இனிச்
சாம்பிணங்கள் கத்தும் கணக்கென்ன காண் கயிலாபுரிக் காளத்தியே-
----------- பட்டினத்தார்
2. புரமெரிய இரணிய தனுக்கைப் பற்றி...
...இமயகிரிமயில் குலவரை தநுவென
அதிகை வருபுர நொடியினி லெரிசெய்த அபிராமி
---திருப்புகழ், முகிலுமிரவுயு
வாளிசேர் அடங்கார் மதில் தொலைய நூறிய வம்பின் வேய்த்
தொளி பாகம் அமர்ந்தவர் ---- சம்பந்தர் தேவாரம்.
3. அரிய தவ முற்றுக் கச்சியினி லுறமேவும்....
அனனியம் பெற்றற் றற்றொரு பற்றுந்
தெளிதருஞ் சித்தர்க் குத்தெளி சிற்கொந்
தமலைதென் கச்சிப் பிச்சி மலர்க்கொந் தளபாரை)- -- திருப்புகழ், கனிதருங்கொக்கு