202.மாலாசை
202
விராலிமலை
தானான தான தானான தான
தானான தான தனதான
மாலாசை கோப மோயாதெ நாளு
மாயா விகார வழியேசெல்
மாபாவி காளி தானேனு நாத
மாதா பிதாவு மினிநீயே
நாலான வேத நூலாக மாதி
நானோதி னேனு மிலைவீணே
நாள்போய் விடாம லாறாறு மீதில்
ஞானோப தேச மருள்வாயே
பாலா கலார ஆமோத லேப
பாடீர வாக அணிமீதே
பாதாள பூமி யாதார மீன
பானீய மேலை வயலூரா
வேலா விராலி வாழ்வே சமூக
வேதாள பூத பதிசேயே
வீரா கடோர சூராரி யேசெ
வேளே சுரேசர் பெருமாளே.
202
விராலிமலை
தானான தான தானான தான
தானான தான தனதான
மாலாசை கோப மோயாதெ நாளு
மாயா விகார வழியேசெல்
மாபாவி காளி தானேனு நாத
மாதா பிதாவு மினிநீயே
நாலான வேத நூலாக மாதி
நானோதி னேனு மிலைவீணே
நாள்போய் விடாம லாறாறு மீதில்
ஞானோப தேச மருள்வாயே
பாலா கலார ஆமோத லேப
பாடீர வாக அணிமீதே
பாதாள பூமி யாதார மீன
பானீய மேலை வயலூரா
வேலா விராலி வாழ்வே சமூக
வேதாள பூத பதிசேயே
வீரா கடோர சூராரி யேசெ
வேளே சுரேசர் பெருமாளே.
மயக்கம் ஆசை கோப முதலியவை ஓயாது, என்றும் மாயா விகார வழியில் செல்லுகின்ற பெரிய பாவியும் விஷ குணமுள்ளவன் எனினும் தலைவரே! எனக்கு தாயும் தந்தையும் நீர்தான். வேதாகமம் முதலிய நூல்களை அடியேன் ஓதினேனில்லை. வீணே நாள் கழித்து போகாமல் முப்பத்தாறு தத்துவங்கட்கும் அப்பாலுள்ள ஞானத்தை உபதேசித்தருளுவீர்.இளங் குமாரரே! செங்கழுநீசர் மலர் மாலையில் அன்புள்ளவரே! ஆபரணங்கள் மீது சந்தனக் கலவை யணிந்துள்ளவரே! பாதலத்துக்கும் பூதலத்துக்கும் தலைவரே! மீன் நிறைந்த தண்ணீர் சூழ்ந்த மேலை வயலூரில் வாழ்பவரே! வேலாயுதரே விராலி மலைச் செல்வனே! பூத கூட்டங்களின் தலைவராய சிவ குமாரரே! வீர மூர்த்தியே! கொடுமையான சூரபன்மனுக்குப் பகைவரே! செவ்வேட் பரமரே! தேவர்தலைவராகிய பெருமிதமுடையவரே!
விளக்கக் குறிப்புகள்
1. காளி = விட குணமுள்ளவன். ...காளம் – விஷம்
2. ஆறுஆறு மீதில்....
(கனத்த தத்துவமுற் றழியாமல்).............................திருப்புகழ்,நினைத்ததெ.
3. சமூக வேதாள் பூத பதி சேயே...
(பூத பதியாகிய புராணமுனி)...சம்பந்தர் தேவாரம்
.
1. காளி = விட குணமுள்ளவன். ...காளம் – விஷம்
2. ஆறுஆறு மீதில்....
(கனத்த தத்துவமுற் றழியாமல்).............................திருப்புகழ்,நினைத்ததெ.
3. சமூக வேதாள் பூத பதி சேயே...
(பூத பதியாகிய புராணமுனி)...சம்பந்தர் தேவாரம்