200.பாதாள
200
விராலிமலை
தானான தான தான தனதன
தானான தான தான தனதன
தானான தான தான தனதன தனதான
பாதாள மாதி லோக நிகிலமு
மாதார மான மேரு வெனவளர்
படீர பார மான முலையினை விலைகூறிப்
பாலோடு பாகு தேனெ னினியசொ
லாலேய நேக மோக மிடுபவர்
பாதாதி கேச மாக வகைவகை கவிபாடும்
வேதாள ஞான கீனன் விதரண
நாதானி லாத பாவி யநிஜவன்
வீணாள்ப டாத போத தவமிலி பசுபாச
வ்யாபார மூடன் யானு முனதிரு
சீர்பாத தூளி யாகி நரகிடை
வீழாம லேசு வாமி திருவருள் புரிவாயே
தூதாள ரோடு காலன் வெருவிட
வேதாமு ராரி யோட அடுபடை
சோரா வலாரி சேனை பொடி பட மறைவேள்விச்
சோமாசி மார்சி வாய நமவென
மாமாய வீர்ர கோர முடனிகல்
சூர்மாள வேலை யேவும் வயலியி லிளையோனே
கூதாள நீப நாக மலர்மிசை
சாதாரி தேசி நாம க்ரியைமுதல்
கோலால நாத கீத மதுகர மடர்சோலை
கூராரல் தேரு நாரை மருவிய
கானாறு பாயு மேரி வயல்பயில்
கோனாடு சூழ்வி ராலி மலையுறை பெருமாளே
200
விராலிமலை
தானான தான தான தனதன
தானான தான தான தனதன
தானான தான தான தனதன தனதான
பாதாள மாதி லோக நிகிலமு
மாதார மான மேரு வெனவளர்
படீர பார மான முலையினை விலைகூறிப்
பாலோடு பாகு தேனெ னினியசொ
லாலேய நேக மோக மிடுபவர்
பாதாதி கேச மாக வகைவகை கவிபாடும்
வேதாள ஞான கீனன் விதரண
நாதானி லாத பாவி யநிஜவன்
வீணாள்ப டாத போத தவமிலி பசுபாச
வ்யாபார மூடன் யானு முனதிரு
சீர்பாத தூளி யாகி நரகிடை
வீழாம லேசு வாமி திருவருள் புரிவாயே
தூதாள ரோடு காலன் வெருவிட
வேதாமு ராரி யோட அடுபடை
சோரா வலாரி சேனை பொடி பட மறைவேள்விச்
சோமாசி மார்சி வாய நமவென
மாமாய வீர்ர கோர முடனிகல்
சூர்மாள வேலை யேவும் வயலியி லிளையோனே
கூதாள நீப நாக மலர்மிசை
சாதாரி தேசி நாம க்ரியைமுதல்
கோலால நாத கீத மதுகர மடர்சோலை
கூராரல் தேரு நாரை மருவிய
கானாறு பாயு மேரி வயல்பயில்
கோனாடு சூழ்வி ராலி மலையுறை பெருமாளே
சுருக்க உரை
எல்லா உலகங்களுக்கும் ஆதாரமாயிருக்கும் மேரு மலையைப் போல் உயர்ந்த கொங்கைகளை விலை கூறி, இனிய பேச்சுக்களைப் பேசி, காம மோகம் தரும் விலை மாதர்களின் அங்கங்களைப் பல வகைகளில் வர்ணித்துக் கவிகளைப் பாடும் பேயன் நான். ஞானம் குறைந்தவன். விவேகம் இல்லாதவன். பொய்யன். அறமும்,தவமும் இல்லாதாவன். பதி ஞானம் சிறிதும் இல்லாதவன். இத்தகைய மூடனாகிய என்னை உனது அழகிய பாதங்களின் தூளியாகும் பேற்றை அளித்து, நான் நரகில் வீழாமல் விழாதவாறு திருவருள் புரிவாயாக.
யமன் அஞ்சவும், பிரமனும், திருமாலும் பயந்து ஓடவும், இந்திரனுடைய படைகள் சோர்ந்து போகவும், சோமயாகம் செய்யும் பெரியோர்கள் பஞ்சாக்ஷரத்தை ஓதி நிற்கவும், சூரன் மாளவும் வேலாயுதத்தைச் செலுத்திய இளையோனே. கூதாளம்,நீபம், நாகம் ஆகிய மலர்களின் மீது, பல வித இராகங்களைப் பாடும் வண்டுகள் நிறைந்த சோலைகளும், ஏரிகளும், வயல்களும் நிறைந்த கோனாட்டில் உள்ள விராலி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. நான் நரகில் வீழாமல் திருவருள் புரிவாயாக.

விளக்கக் குறிப்புகள்
சோமாசிமார் சிவான நம என.....
சோமாசிமார் = சோம யாகம் செய்பவர்கள். வேதாகமங்களில் விதித்தவாறு சிவ யாகங்களை நியதியுடன் செய்யும் மறையோர். சோமயாகம் தேவர்கள் பொருட்டுச் சோமரசம் அளிக்கும் வேள்வி வகை
சோமாசிமார் சிவான நம என.....
சோமாசிமார் = சோம யாகம் செய்பவர்கள். வேதாகமங்களில் விதித்தவாறு சிவ யாகங்களை நியதியுடன் செய்யும் மறையோர். சோமயாகம் தேவர்கள் பொருட்டுச் சோமரசம் அளிக்கும் வேள்வி வகை
Last edited by soundararajan50; 14-12-17, 07:57.