199.சீரான கோல
199விராலிமலை
தானான தான தான தனதன
தானான தான தான தனதன
தானான தான தான தனதன தனதான
சீரான கோல கால நவமணி
மாலாபி ஷேக பார வெகுவித
தேவாதி தேவர் சேவை செயுமுக மலராறும்
சீராடு வீர மாது மருவிய
ஈராறு தோளு நீளும் வரியளி
சீராக மோது நீப பரிமள இருதாளும்
ஆராத காதல் வேடர் மடமகள்
ஜீமூத மூர்வ லாரி மடமகள்
ஆதார பூத மாக வலமிட முறைவாழ்வும்
ஆராயு நீதி வேலு மயிலு மெய்ஞ்
ஞானாபி ராம தாப வடிவமும்
ஆபாத னேனு நாளு நினைவது பெறவேணும்
ஏராரு மாட கூட மதுரையில்
மீதேறி மாறி யாடு மிறையவர்
ஏழேழு பேர்கள் கூற வருபொரு ளதிகாரம்
ஈடாய வூமர் போல வணிகரி
லு\டாடி யால வரில் விதிசெய்த
லீலாவி சார தீர வரதர குருநாதா
கூராழி யால்முன் வீய நினைபவ
னீடேறு மாறு பாநு மறைவுசெய்
கோபால ராய னேய முளதிரு மருகோனே
கோடாம லார வார அலையெறி
காவேரி யாறு பாயும் வயலியில்
கோனாடு சூழ்வி ராலி மலையுறை பெருமாளே
199விராலிமலை
தானான தான தான தனதன
தானான தான தான தனதன
தானான தான தான தனதன தனதான
சீரான கோல கால நவமணி
மாலாபி ஷேக பார வெகுவித
தேவாதி தேவர் சேவை செயுமுக மலராறும்
சீராடு வீர மாது மருவிய
ஈராறு தோளு நீளும் வரியளி
சீராக மோது நீப பரிமள இருதாளும்
ஆராத காதல் வேடர் மடமகள்
ஜீமூத மூர்வ லாரி மடமகள்
ஆதார பூத மாக வலமிட முறைவாழ்வும்
ஆராயு நீதி வேலு மயிலு மெய்ஞ்
ஞானாபி ராம தாப வடிவமும்
ஆபாத னேனு நாளு நினைவது பெறவேணும்
ஏராரு மாட கூட மதுரையில்
மீதேறி மாறி யாடு மிறையவர்
ஏழேழு பேர்கள் கூற வருபொரு ளதிகாரம்
ஈடாய வூமர் போல வணிகரி
லு\டாடி யால வரில் விதிசெய்த
லீலாவி சார தீர வரதர குருநாதா
கூராழி யால்முன் வீய நினைபவ
னீடேறு மாறு பாநு மறைவுசெய்
கோபால ராய னேய முளதிரு மருகோனே
கோடாம லார வார அலையெறி
காவேரி யாறு பாயும் வயலியில்
கோனாடு சூழ்வி ராலி மலையுறை பெருமாளே
சுருக்க உரை
உனது சீரான, மணிகள் பொருந்திய மகுடத்தையும், தேவர்கள் போற்றும் ஆறு முகங்களையும், லட்சுமிகரம் பொருந்திய பன்னிரு தோள்களையும், வண்டுகள் இசை பாடும் கடப்ப மலர்களின் மணம் வீசும் திருவடிகளையும், உன் மேல் அளவில்லாத காதல் கொண்ட குறப் பெண் வள்ளியும், இந்திரன் மகள் தேவசேனையும், இரு பக்கங்களிலும் உறைகின்ற திருக்கோல வாழ்க்கையையும்,வேல், மயிலுடன் மெய்ஞ்ஞான சொரூபியான திருவுருவத்தையும், கீழோனாகிய நானும் நாள் தோறும் தியானிக்கும் படியான பேற்றைப் பெற வேண்டுகின்றேன்.
மதுரையில் வெள்ளி அம்பலத்தில் கால் மாற்றி நடனம் ஆடும் சிவபெருமான்,சங்கப் புலவர்களுக்கு இறையனார் அகப் பொருள் என்னும் நூலின் உண்மைப் பொருள் இது தான் என்று கூற, செட்டியின் குலத்தில் தோன்றிய ஊமைப் பிள்ளையாக வந்த திருவிளையாடலைச் செய்த குரு நாதரே. பாரதப்போரில் இறக்கவும் துணிந்த அருச்சுனனுக்கு உதவ வேண்டி, சூரியனை மறைத்து வைத்த கண்ணனின் மருகனே. வயலூரிலும், கோனாட்டில் உள்ள, விராலி மலையிலும் வீற்றிருக்கும் பெருமாளே உன்னைத் தியானிக்கும் பேற்றினை அருள்வாயாக.

விளக்கக் குறிப்புகள்
மாறியாடும் இறையவர்:-
மதுரையில் அரசு புரிந்த விக்கிரம பாண்டியனுடைய புதல்வன் இராஜசேகர பாண்டியன் ஆண்டு வந்தான். 64 கலைகளையும் கற்க வேண்டிய ஆவலில் அவன் பரதசாத்திரத்தை கற்று பழகினான்.
அப்போது தனக்கு ஏற்பட்ட கால்வலியை நோக்கி, “சிறிது நேரம் நாம் நடிப்பதற்கே கால்வலிக்கின்தே? நடராஜமூர்த்தி அனவரதம் ஓயாது நடிக்கின்றனரே? அவருக்கும் திருவடி வருந்துமே? தாண்டவத்தை நிறுத்தச் சொன்னால் உலகம் நடைபெறாதழியும். ஆதலின் கால் மாறியாடுமாறு பெருமானை வேண்டிக்கொள்வோம்” என்று எண்ணி, திருவாலயம் போய், வெள்ளியம்பலத்துள் ஆடும் ஆண்டவனை வணங்கிக் கால்மாறியாட வேண்டினான்.
அரசன் வேண்டியதினால் அவனை அருளும் பொருட்டு ஆண்டவன், வலக்காலைத் தூக்கி நடனம் புரிந்ததாக அறிகிறோம்.
ஏழேழு பேர்கள் கூற வரு பொருளதிகாரம்.....
அகப்பொருள் இலக்கணம் இல்லையே என்ரு பாண்டிய மன்னன் வருந்தினான். மதுரை சொக்கலிங்க மூர்த்தியே 60 சூத்திரங்கள் கொண்ட நூலை எழுதி அளித்தார். இறையவனார் அகப்பொருள் எனப்பெயர் பெற்றது. இதற்கு 49 சங்கப்புலவர்கள் உரை எழுதி தங்கள் உரையே சிறந்தது என வாதிட்டு இருந்தனர். இறைவனிடம் முறையிட, இறைவன் ஒரு புலவர் வேடத்தில் வந்து ‘இவ்வூரில் வணிகன், உப்பூர் கிழாரின் மகன், ஊமை, பாலன், சரவண குகன் வந்துள்ளான். அவன் ஒப்பிலா ஞானி. அவன் பெயர் உருத்திர சன்மன். அவன் முன் உங்கள் உரையைச் சொல்லுங்கள். அவருடைய உரையை அவன் கொள்கின்றானோ அதுவே உண்மை உரை’ என கூறினார். ‘ஊமை எப்படி பேசுவான்’ என கேட்க ‘எந்த உரையைக் கேட்டதும் உடலிற் புள்கமும் கண்ணில் (ஆனந்த) நீரும் தோன்றுகிறனவோ அந்த உரையே உரை. மற்றவை உரையல்ல’ எனக்கூறி மறைந்தார். நக்கீரன், கபிலன், பரணன் அவர்களின் உரையைக் கேட்டு ஊமை புளாங்கிதம் அடைய அவர்கள் உரையே ‘உண்மைப் பொருள்’ என அறிந்தனர்
முருக சாரூபம் பெற்ற அபரசுப்ரமண்யருள் ஒருவரே முருகவேள் அருள் தாங்கி உருத்திர ஜன்மராக அவதரித்தனர். உக்கிரப் பெருவழுதியாகவும், ஞானசம்பந்தராகவும் வந்ததையும் அங்ஙனமே.அபரசுப்ரமண்யர்கள் சம்பந்தராகவும் உருத்திரசன்மராகவும், உக்கிரப்பெருவழுதியாகவும் வந்து ஆற்றிய அருஞ் செயல்களை பரசுப்ரமண்யத்தின் செயலாகத் திருப்புகழ் கூறுகின்றது.

.