198.கொடாதவனை
198விராலிமலை
தனாதனன தான தந்த தனாதனன தான தந்த
தனாதனன தான தந்த தனதான
கொடாதவனை யேபு கழ்ந்து குபேரனென வேமொ ழிந்து
குலாவியவ மேதி ரிந்து புவிமீதே
எடாதசுமை யேசு மந்து எணாதகலி யால்மெ லிந்து
எலாவறுமை தீர அன்று னருள்பேணேன்
சுடாததன மான கொங்கை களாலிதய மேம யங்கி
சுகாதரம தாயொ ழுங்கி லொழுகாமல்
கெடாததவ மேம றைந்து கிலேசமது வேமி குந்து
கிலாதவுட லாவி நொந்து மடியாமுன்
தொடாய்மறலி யேநி யென்ற சொலாகியது னாவ ருங்கொல்
சொலேழுலக மீனு மம்பை யருள்பாலா
நடாதசுழி மூல விந்து நளாவிவிளை ஞான நம்ப
நபோமணி சமான துங்க வடிவேலா
படாதகுளிர் சோலை யண்ட மளாவியுயர் வாய்வ ளர்ந்து
பசேலெனவு மேத ழைந்து தினமேதான்
விடாதுமழை மாரி சிந்த அநேகமலர் வாவி பொங்கு
விராலிமலை மீது கந்த பெருமாளே.

சுருக்க உரை
கொடை என்பதையே அறியாதவரைப் புகழ்ந்தும், குபேரன் இன்று
கூறியும், துதித்தும் வீணாகத் திரிந்து, பூமியில் எல்லாவிதமான
பாரங்களையும் சுமந்து, கொடுமையால் மெலிந்து வாடித், துன்பங்கள்
ஒழிய, முன்னாளிலேயே உனது திருவருளைப் போற்றி விரும்பாது
காலம் கழித்தேன்.
மாதர்களின் அழகிய கொங்கையால் மறக்கமுற்று, நல் வழியில்
நடக்காமல், தவநெறியும் ஒழுக்கமும் அற்ற வாழ்க்கையை மேற்
கொண்டு, நான் இறப்பதற்கு முன், யமன் என் உயிரைக் கவராது
இருக்க அவனிடம் சொல்ல மாட்டாயா? ஏழு உலகங்களையும் ஈன்ற
பார்வதியின் பாலனே. சுழி முனை, மூலாதாரம், சத்தி பேதம் ஆகிய
ஆறு ஆதாரங்களின் நடுவில் உள்ள ஆவியில் தோன்றி விளங்கும்
ஞான மூர்த்தியே. செழிப்பான விராலி மலையில் வீற்றிருக்கும்
பெருமாளே, யமன் என்னைத் தொடாத வண்ணம் அவனிடம் சொல்ல
வேண்டுகின்றேன்.