192
சிரமங்க மங்கை
வள்ளிமலை நாதனே! உடம்பு அழியுமுன் உமது திருவடியைத் தந்தருள்வீர்.
தனதந்த தந்தனந் தனதந்த தந்தனந்
தனதந்த தந்தனந் தனதான
சிரமங்க மங்கைகண் செவிவஞ்ச நெஞ்சுசெஞ்
சலமென்பு திண்பொருந் திடுமாயம்
சிலதுன்ப மின்பமொன் றிறவந்து பின்புசெந்
தழலின்கண் வெந்துசிந் திடஆவி
விரைவின்க ணந்தகன் பொரவந்த தென்றுவெந்
துயர்கொண்ட லைந்துலைந் தழியாமுன்
வினையொன்று மின்றிநன் றியலொன்றி நின்பதம்
வினவென்று அன்புதந் தருள்வாயே
அரவின்கண் முன்துயின் றருள்கொண்ட லண்டர்கள்
டமரஞ்ச மண்டிவந் திடுசூரன்
அகலம்பி ளந்தணைந் தகிலம்ப ரந்திரங்
கிடஅன்று டன்றுகொன் றிடும்வேலா
மரைவெங்க யம்பொருந் திடவண்டி னங்குவிந்
திசையொன்ற மந்திசந் துடனாடும்
வரையின்கண் வந்துவண் குறமங்கை பங்கயம்
வரநின்று கும்பிடும் பெருமாளே
-192 வள்ளி மலை

சுருக்க உரை
தலை, அழகிய கை, கண், காது, வஞ்சக மனம், இரத்தம்,எலும்பு இவை நன்றாகப் பொருந்திய உடல், சில துன்பம்,இன்பத்துடன் பொருந்தி, முடிவில் இறப்பு வந்த உடன்,நெருப்பில் வெந்து ஆவி பிரியும்படி, நமன் வந்து விட்டான் என்று துயருற்று, நிலை குலைந்து நான் அழிவதற்கு முன்,என் வினைகள் யாவும் தொலைந்து, நல்ல செய்கைகளையே செய்து, உனது திருவடியை ஆராய்ந்து அறிய எனக்கு அருள் புரிவாயாக.
ஆதிசேடன் மேல் அறி துயில் செய்யும் மேக நிறத் திருமாலும், தேவர்களும், போருக்கு அஞ்சும்படி, நெருங்கி வந்த சூரனுடைய மார்பைப் பிளந்து, அவன் விழும் ஒலி எங்கும் பரந்து ஒலிக்க வேலைச் செலுத்தியவனே, தாமரைக் குளங்களும், வண்டுகளின் இசையும், குரங்குகள் விளையாட்டும் பொருந்திய வள்ளி மலைக்கு வந்து, அங்கு வள்ளியைக் கண்டு அவளுடைய பாதங்களைக் கும்பிடும் பெருமாளே, உன் திருவடியைத் தந்து அருளுக.

ஒப்புக:
மந்தி சந்துடன் ஆடும்....
செண்ப காடவி யினுமித ணிலுமுயர்
சந்த னாடவி யினுமுறை குறமகள்.............................. .திருப்புகழ் ,கொந்துவார்
மட்டொழுகு சாரமதுரித்த தேனைப் பருக
மர்க்கட சமூக மமை தொட்டிறாலெட்டுவரை …..................…பூதவேதாள வகுப்பு.