190. ககனமும்
190 ககனமும்
தனதன தனதன தனதன தனதன
தய்யத் தனாத்த தனதான
ககனமு மநிலமு மணல்புனல் நிலமமை
கள்ளப் புலாற்கி ருமிவீடு
கனலெழ மொழிதரு சினமென மதமிகு
கள்வைத் ததோற்பை சுமவாதே
யுகஇறு திகளிலு மிறுதியி லொருபொருள்
உள்ளக்க ணோக்கு மறிவூறி
ஒளிதிக ழருவுரு வெனுமறை யிறுதியி
லுள்ளத் தைநோக்க அருள்வாயே
ம்ருகமத பரிமள விகசித நளினநள்
வெள்ளைப் பிராட்டி இறைகாணா
விடதர குடிலச டிலமிசை வெகுமுக
வெள்ளத் தையேற்ற பதிவாழ்வே
வகுளமு முகுளித வழைகளு மலிபுன
வள்ளிக் குலாத்தி கிரிவாழும்
வனசரர் மரபினில் வருமொரு மரகத
வள்ளிக் குவாய்த்த பெருமாளே
-190 வள்ளி மலை
190 ககனமும்
தனதன தனதன தனதன தனதன
தய்யத் தனாத்த தனதான
ககனமு மநிலமு மணல்புனல் நிலமமை
கள்ளப் புலாற்கி ருமிவீடு
கனலெழ மொழிதரு சினமென மதமிகு
கள்வைத் ததோற்பை சுமவாதே
யுகஇறு திகளிலு மிறுதியி லொருபொருள்
உள்ளக்க ணோக்கு மறிவூறி
ஒளிதிக ழருவுரு வெனுமறை யிறுதியி
லுள்ளத் தைநோக்க அருள்வாயே
ம்ருகமத பரிமள விகசித நளினநள்
வெள்ளைப் பிராட்டி இறைகாணா
விடதர குடிலச டிலமிசை வெகுமுக
வெள்ளத் தையேற்ற பதிவாழ்வே
வகுளமு முகுளித வழைகளு மலிபுன
வள்ளிக் குலாத்தி கிரிவாழும்
வனசரர் மரபினில் வருமொரு மரகத
வள்ளிக் குவாய்த்த பெருமாளே
-190 வள்ளி மலை
சுருக்க உரை
பஞ்ச பூதங்களால் ஆனதும், வஞ்சகமும், மாமிசமும், கிருமிகளும் நிறைந்த வீடு போல் அமைந்ததும், கோபம் மிக்க மொழிகளைப் பேசும் ஆணவம் நிறைந்ததும்ஆகிய தோல் பையான இந்த உடலை நான் இனிமேல் சுமக்காதபடி என் பிறப்பை ஒழித்து அருளுக.
ஒளி விளங்குவது என்றும், அருவமானது என்றும், உருவமானது என்றும், வேத முடிவில் நிற்பது என்றும் சொல்லப்படும் ஊழிக் காலத்திலும் அழியாத அந்தப் பொருளை நான் காண அருள்வாயாக. நறுமணம் வீசும் தாமரையின் நடுவில் உள்ள சரசுவதியின் கணவனான பிரமன் காண முடியாத சிவபெருமானின் செல்வமே, பல விதமான மலர்களும் தினைப்புனமும் நிறைந்த வள்ளி மலையில்வேடர் குலத்தில் தோன்றிய வள்ளியின் கணவரே, அருவாகவும் உருவாகவும், பிரளய முடிவில் நிற்கும் அழியாத பரம் பொருளை நன் காணும் வண்ணம் அருள்வாயாக.

விளக்கக் குறிப்புகள்
1. இது சொல் வளம் நிறைந்த பாடல். ஒவ்வொரு அடியிலும் இறுதியில் உள்ள
பாகத்தை எடுத்து அமைத்தால் பிறிதொரு பாடல் உண்டாவதை பார்க்கலாம்
2. வெகுமுக வெள்ளத்தை ஏற்ற....
கயல் பாயக் கடுங் கலுழிக் கங்கை நங்கை
ஆயிரம் ஆம் முகத்தினொடு வானில் தோன்றும்
புனல்பாயச் சடை விரித்த பொற்புத் தோன்றும்
--- திருநாவுக்கரசர் தேவாரம்
வள்ளி அவதாரம் செய்த ஸ்தலம் வள்ளிமலை. அவள் பொருட்டு முருகன் பாதங்கள் பல காலம் அங்கு உலாவியது. “வள்ளிக்கணவன் றனையீன்ற வள்ளல் பவனி வரக்கண்டே” – திருஅருட்பா