189. ஐயுமுறு
189 ஐயுமுறு
திருவடியை வேண்டல்
தய்யதன தான தய்யதன தான
தய்யதன தான தனதான
ஐயுமுறு நோயு மையலும வாவி
னைவருமு பாயப் பலநூலின்
அள்ளல்கட வாது துள்ளியதில் மாயு
முள்ளமுமில் வாழ்வைக் கருதாசைப்
பொய்யுமக லாத மெய்யைவள ராவி
உய்யும்வகை யோகத் தணுகாதே
புல்லறிவு பேசி யல்லல்படு வேனை
நல்லஇரு தாளிற் புணர்வாயே
மெய்யபொழில் நீடு தையலைமு நாலு
செய்யபுய மீதுற் றணைவோனே
வெள்ளையிப மேறு வள்ளல்கிளை வாழ
வெள்ளமுது மாவைப் பொருதோனே
வையமுழு தாளு மையமயில் வீர
வல்லமுரு காமுத் தமிழ்வேளே
வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு
வள்ளிமண வாளப் பெருமாளே
189 வள்ளிமலை
சுருக்க உரை
189 ஐயுமுறு
திருவடியை வேண்டல்
தய்யதன தான தய்யதன தான
தய்யதன தான தனதான
ஐயுமுறு நோயு மையலும வாவி
னைவருமு பாயப் பலநூலின்
அள்ளல்கட வாது துள்ளியதில் மாயு
முள்ளமுமில் வாழ்வைக் கருதாசைப்
பொய்யுமக லாத மெய்யைவள ராவி
உய்யும்வகை யோகத் தணுகாதே
புல்லறிவு பேசி யல்லல்படு வேனை
நல்லஇரு தாளிற் புணர்வாயே
மெய்யபொழில் நீடு தையலைமு நாலு
செய்யபுய மீதுற் றணைவோனே
வெள்ளையிப மேறு வள்ளல்கிளை வாழ
வெள்ளமுது மாவைப் பொருதோனே
வையமுழு தாளு மையமயில் வீர
வல்லமுரு காமுத் தமிழ்வேளே
வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு
வள்ளிமண வாளப் பெருமாளே
189 வள்ளிமலை
சுருக்க உரை
ஐம்பூதங்கள், நோய்கள், மோகங்கள், கலை நூல்கள் ஆகிய சேற்றில்
புதையுண்டு, அவற்றைத் தாண்டாமல் உள்ளேயே விழுந்து மடியும்
உள்ளமும், இல் வாழ்க்கையையே எண்ணும் ஆசையும் கொண்ட இந்த உடலைப் பேணாமல், நல்ல யோக வழிகளை அணுகாமல், இழிவான பேச்சுகளைப் பேசித் துன்பம் உறும் என்னை உன் திருவடிகளில் சேர்ப்பாயாக.
வள்ளியைப் புணரும் சிவந்த பன்னிரு கரங்களை உடையவரே,
இந்திரனும், தேவர்களும் வாழ, மாமரமாக நின்ற சூரனுடன் போர்
செய்தவனே, வல்லத்தில் உறையும் முருகோனே, வள்ளி மணவாளப்
பெருமாளே, உன் இரு திருத் தாளில் என்னைச் சேர்ப்பாயாக.