188 அல்லிவிழியால்
188 அல்லிவிழியால்
திருவடியை அருளுக
தய்யதன தான தய்யதன தான
தய்யதன தான தனதான
அல்லிவழி யாலு முல்லைநகை யாலு
மல்லல்பட ஆசைக் கடலீயும்
அள்ளவினி தாகி நள்ளிரவு போலு
முள்ளவினை யாரத் தனமாரும்
இல்லுமிளை யோரு மெல்ல அயலாக
வல்லெருமை மாயச் சமனாரும்
எள்ளியென தாவி கொள்ளைகொளு நாளில்
உய்யவொரு நீபொற் கழல்தாராய்
தொல்லைமறை தேடி யில்லையெனு நாதர்
சொல்லுமுப தேசக் குருநாதா
துள்ளிவிளை யாடு புள்ளியுழை நாண
வெள்ளீவன மீதுற் றுறைவோனே
வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ
வல்லைவடி வேலைத் தொடுவோனே
வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு
வள்ளிமண வாளப் பெருமாளே.
-188 வள்ளிமலை
188 அல்லிவிழியால்
திருவடியை அருளுக
தய்யதன தான தய்யதன தான
தய்யதன தான தனதான
அல்லிவழி யாலு முல்லைநகை யாலு
மல்லல்பட ஆசைக் கடலீயும்
அள்ளவினி தாகி நள்ளிரவு போலு
முள்ளவினை யாரத் தனமாரும்
இல்லுமிளை யோரு மெல்ல அயலாக
வல்லெருமை மாயச் சமனாரும்
எள்ளியென தாவி கொள்ளைகொளு நாளில்
உய்யவொரு நீபொற் கழல்தாராய்
தொல்லைமறை தேடி யில்லையெனு நாதர்
சொல்லுமுப தேசக் குருநாதா
துள்ளிவிளை யாடு புள்ளியுழை நாண
வெள்ளீவன மீதுற் றுறைவோனே
வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ
வல்லைவடி வேலைத் தொடுவோனே
வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு
வள்ளிமண வாளப் பெருமாளே.
-188 வள்ளிமலை
சுருக்க உரை
மனைவியும், மக்களும், வேறாக நிற்க, நமன் எருமை மீது என் உயிரைக் கொள்ளை கொண்டு போக வந்த அந்நாளில் நான் உய்யுமாறு உனது திருவடியைத் தந்து அருளுக.
வேதங்களும் தேடிக் காண ஒண்ணாத சிவபெருமானுக்குப் பிரணவத்தின் பொருளை உபதேசித்தவனே. புள்ளி மானும்வெட்கப்டும்படி இகழ்ந்தவளாகிய வள்ளி வாழ்ந்த வள்ளி மலை காட்டில் நின்று தங்கியவனே. வலிய அசுரர் மாளவும், நல்ல அமரர் வாழவும் கூரிய வேலைச் செலுத்தியவரே. வள்ளி மலையில்
வீற்றிருக்கும் வள்ளி மணவாளப் பெருமாளே. நான் உய்ய உன் திருவடியைத் தந்து அருளுக.

விளக்கக் குறிப்புகள்
1. அல்லி விழியாலும்.....
நல்லை நெஞ்சே.....
அல்லி மாதர் புல்க நின்ற
ஆயிரத் தோளனிடம் ---- பெரிய திருமொழி.
2. மாயச் சமனாரும்....
அண்டிப் பயமுற வென்றிச் சமன்வரும்
அன்றைக் கடியிணை தரவேணும் திருப்புகழ், வஞ்சித்துடனொரு
3. தொல்லை மறை தேடி இல்லை எனு நாதர்.....
வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே
................. மாணிக்கவாசகர்,திருவாசகம்.
4. எள்ளி வன மீதுற்று உறைவோனே...
வெங்காடும் புனமும் கமழும் கழலே --- கந்தர் அனுபூதி.
தினையோ டிதணோடு திரிந்தவனே)
--- கந்தர் அனுபூதி