183.வரிசேர்ந்திடு
தனதாந்தன தானன தானன
தனதாந்தன தானன தானன
தனதாந்தன தானன தானன தனதான
வரிசேர்ந்திடு சேல்கய லோவெனு
முழைவார்ந்திடு வேலையு நீலமும்
வடுவாங்கிடு வாள்விழி மாதர்கள் வலையாலே
வளர்கோங்கிள மாமுகை யாகிய
தனவாஞ்சையி லேமுக மாயையில்
வளமாந்தளிர் போல்நிற மாகிய வடிவாலே
இருள்போன்றிடு வார்குழல் நீழலில்
மயல்சேர்ந்திடு பாயலின் மீதுற
இனிதாங்கனி வாயமு தூறல்கள் பருகாமே
எனதாந்தன தானவை போயற
மலமாங்கடு மோகவி காரமு
மிவைநீங்கிட வேயிரு தாளினை யருள்வாயே
கரிவாம்பரி தேர்திரள் சேனையு
முடனாந்துரி யோதன னாதிகள்
களமாண்டிட வேயொரு பாரத மதிலேகிக்
கனபாண்டவர் தேர்தனி லேயெழு
பரிதூண்டிய சாரதி யாகிய
கதிரோங்கிய நேமிய னாமரி ரகுராமன்
திரைநீண்டிரை வாரியும் வாலியும்
நெடிதோங்கும ராமர மேழொடு
தெசமாஞ்சிர ராவண னார்முடி பொடியாகச்
சிலைவாங்கிய நாரண னார்மரு
மகனாங்குக னேபொழில் சூழ்தரு
திருவேங்கட மாமலை மேவிய பெருமாளே.
-183 திருவேங்கடம்
பார்க்க அருள்மின்னல்
தனதாந்தன தானன தானன
தனதாந்தன தானன தானன
தனதாந்தன தானன தானன தனதான
வரிசேர்ந்திடு சேல்கய லோவெனு
முழைவார்ந்திடு வேலையு நீலமும்
வடுவாங்கிடு வாள்விழி மாதர்கள் வலையாலே
வளர்கோங்கிள மாமுகை யாகிய
தனவாஞ்சையி லேமுக மாயையில்
வளமாந்தளிர் போல்நிற மாகிய வடிவாலே
இருள்போன்றிடு வார்குழல் நீழலில்
மயல்சேர்ந்திடு பாயலின் மீதுற
இனிதாங்கனி வாயமு தூறல்கள் பருகாமே
எனதாந்தன தானவை போயற
மலமாங்கடு மோகவி காரமு
மிவைநீங்கிட வேயிரு தாளினை யருள்வாயே
கரிவாம்பரி தேர்திரள் சேனையு
முடனாந்துரி யோதன னாதிகள்
களமாண்டிட வேயொரு பாரத மதிலேகிக்
கனபாண்டவர் தேர்தனி லேயெழு
பரிதூண்டிய சாரதி யாகிய
கதிரோங்கிய நேமிய னாமரி ரகுராமன்
திரைநீண்டிரை வாரியும் வாலியும்
நெடிதோங்கும ராமர மேழொடு
தெசமாஞ்சிர ராவண னார்முடி பொடியாகச்
சிலைவாங்கிய நாரண னார்மரு
மகனாங்குக னேபொழில் சூழ்தரு
திருவேங்கட மாமலை மேவிய பெருமாளே.
-183 திருவேங்கடம்
சுருக்க உரை
.......எனது, தனது என்னும் ஆசைகள் என்னை விட்டு ஒழிய, மும்மலங்கள் நீங்க,காம வேட்கை அகல, உனது இரு திருவடிகளைத் தந்து அருள்வாயே.
யானை, குதிரை, தேர், காலாட்படை ஆகியவற்றைக் கொண்ட துரியோதனன் முதலானோர், போர்க் களத்தில் இறக்குமாறு, பாரதப் போரில் ஈடுபட்டு,பாண்டவர்களின் தேரைச் செலுத்தியவனும், கடல், வாலி என்னும் குரங்கு அரசன்,ஏழு மராமரங்கள் ஆகியவைகள் மீதும், இராவணனுடைய பத்துத் தலைகளும் சிதற, வில்லை வளைத்தவனுமாகிய திருமாலின் மருமகனே. சோலைகள் சூழ்ந்த திருவேங்கடமாகிய சிறந்த மலையில் வீற்றிருப்பவனே. உன் திருவடிகளைத் தந்து அருளுக
........எனது, தனது என்னும் ஆசைகள் என்னை விட்டு ஒழிய, மும்மலங்கள் நீங்க,காம வேட்கை அகல, உனது இரு திருவடிகளைத் தந்து அருள்வாயே.
யானை, குதிரை, தேர், காலாட்படை ஆகியவற்றைக் கொண்ட துரியோதனன் முதலானோர், போர்க் களத்தில் இறக்குமாறு, பாரதப் போரில் ஈடுபட்டு,பாண்டவர்களின் தேரைச் செலுத்தியவனும், கடல், வாலி என்னும் குரங்கு அரசன்,ஏழு மராமரங்கள் ஆகியவைகள் மீதும், இராவணனுடைய பத்துத் தலைகளும் சிதற, வில்லை வளைத்தவனுமாகிய திருமாலின் மருமகனே. சோலைகள் சூழ்ந்த திருவேங்கடமாகிய சிறந்த மலையில் வீற்றிருப்பவனே. உன் திருவடிகளைத் தந்து அருளுக
விளக்கக் குறிப்புகள்
1. எனது ஆம் தனது ஆனவை.....எனது, தனது என்னும் ஆணவம். மும்மலங்கள் = காமம், வெகுளி, மயக்கம்.
2. திருவேங்கட மாமலை...
இங்கு விஷ்ணு ஆலையமும், முருக ஆலையமும் அக்காலத்தில் இருந்திருத்தல் வேண்டும் என்று வ. சு. செங்கல்வராயபிள்ளை அவர்களின் கருத்து.
உலகீன்ற பச்சை யுமையணன்
வடவேங்க டத்தி லுறைபவ
னுயர்சார்ங்க சக்ர கரதலன் மருகோனே...........................திருப்புகழ், இபமாந்தர்.
திருப்பதி மலைப்பாதையில் கபிலேஸ்வரர் காமாட்சியம்பிகை திருக்கோயில் ஆறுமுகப்பெருமான் காட்சி அளிக்கிறான், அவரை பாடியிருக்கலாம் என்பது வலையப்பட்டி கிருஷ்ணன் அவர்கள் கூற்று.