179.கொடிய மறலி
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன தனதான
கொடிய மறலியு மவனது கடகமு
மடிய வொருதின மிருபதம் வழிபடு
குதலை யடியவ னினதருள் கொடுபொரு மமர்காண
குறவர் மகள்புணர் புயகிரி சமுகமு
மறுமு கமும்வெகு நயனமும் ரவியுமிழ்
கொடியு மகிலமும் வெளிபட இருதிசை யிருநாலும்
படியு நெடியன எழுபுண ரியுமுது
திகிரி திகிரியும் வருகென வருதரு
பவுரி வருமொரு மரகத துரகத மிசையேறிப்
பழய அடிவ ருடனிமை யவர்கண
மிருபு டையுமிகு தமிழ்கொடு மறைகொடு
பரவ வருமதி ருலருணையி லொருவிசை வரவேணும்
சடில தரவிட தரபணி தரதர
பரசு தரசசி தரசுசி தரவித
தமரு கமிருக தரவனி தரசிர தரபாரத்
தரணி தரதநு தரவெகு முககுல
தடினி தரசிவ சுதகுண தரபணி
சயில விதரண தருபுர சசிதரு மயில்வாழ்வே
நெடிய வுடலுரு இருளெழ நிலவெழ
எயிறு சுழல்விழி தழலெழ எழுகிரி
நெரிய அதிர்குரல் புகையெழ இடியெழ நெடுவானும்
நிலனும் வெருவர வருநிசி சரர்தள
நிகில சகலமு மடியவர் படைதொடு
நிருப குருபர சுரபதி பரவிய பெருமாளே.
-179 திருச்செங்கோடு

சுருக்க உரை
கொடியவானான யமனும் அவன் படைகளும் இறந்து போகும்படி, ஒரு நாள் உனது திருவடிகளை வழிபட்டு நிற்கும் குழந்தையாகிய அடியேன் உன்னுடைய துணையால்,சண்டையிடும் போரினைப் பார்ப்பதற்கு, வள்ளி அணையும் பன்னிரு புயங்களும், ஆறு முகங்களும், பல கண்களும் ஒன்றாகத் திகழ, கோழிக் கொடியுடன், உலகை வலம் வந்த பச்சை மயில் மீது ஏறி, அடியார்கள் தமிழில் பாட,மறையோர்கள் வேதங்களை ஓத என்னை ஆட்கொள்ள வரவேண்டும்.
சடை, பாம்பு, கண்டத்தில் விடம், மழு, உடுக்கை, மான்,நெருப்பு கபாலம், ஆகியவைகளைத் தரித்து, மேரு மலையாகிய வில்லையும்,
கங்கையையும் தரித்த சிவபெருமான் பெற்ற குமரனே, திருச்செங்கோடு என்னும் பாம்பு மலையில் உறையும் கருணை நிதியே. இந்திராணியின் மகளான தேவசேனையின் நாயகனே, கோபத்துடன் போருக்கு வந்த அசுரர்கள் மாளும்படி வேலைச் செலுத்திய அரசே, குரு மூர்த்தியே,
தேவர்கள் பெருமாளே, யமன் மடியப் போகும் போரினைக் காண என்
முன்னே வரவேண்டும்.

விளக்கக் குறிப்புகள்
1. குதலை அடியேன்...
அடியார்களுக்கு தான் ஒரு குழந்தை எனப் பொருள்படும்.
2. திகிரி திகிரி = சக்ரவாள கிரி. குல = புனிதமான. தடினி = ஆறு (கங்கை).
ரவி உமிழ் கொடியும் அகிலமும்....
ஒப்புக
புரவிக்கொட் பிரதற்றத் திருள்திக்கிப் படிமட்கப்
புகல்பொற்குக் குடவெற்றிக் கொடியோனே ...திருப்புகழ், அயிலபுக்க.
அல்லைப்பொ றாமு ழங்கு சொல்லுக்ர சேவ லொன்று
வெல்லப்ப தாகை கொண்ட திறல்வேலா ... திருப்புகழ், கையொத்து.
திருவண்ணாமலையில் முருகன் தரிசனம் தந்ததை நினைவு கூறுகிறார்